அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் திட்டம்: அமைச்சர்கள் அவசர ஆலோசனை

Updated : ஜூலை 31, 2017 | Added : ஜூலை 31, 2017 | கருத்துகள் (13)
Share
Advertisement
தினகரன்,Dinakaran, TTV Dinakaran, அமைச்சர், Minister, ஆலோசனை, Consulting, சென்னை, Chennai, அதிமுக, ADMK, தலைமை செயலகம், Chief Secretariat, சுற்றுப்பயணம் ,Tour, குழப்பம், Confusion, அமைச்சர் ஜெயக்குமார்,Minister Jayakumar, சண்முகம், Shanmugam,செங்கோட்டையன், Chengottai, திண்டுக்கல் சீனிவாசன், Dindukal Srinivasan, தங்கமணி ,Thangamani

சென்னை: வரும் 5ம் தேதி டிடிவி தினகரன், அதிமுக அலுவலகத்திற்கு வரவுள்ளதாக தகவல் பரவியதை அடுத்து தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

கட்சியில் அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மத்தியில் தினகரன் மீது அதிருப்தி ஏற்பட்டதால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். சில நாட்கள் மவுனமாக இருந்து வந்த தினகரன் தற்போது மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாகவும், மேலும் வரும் 5 ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்தவிருப்பதால் கட்சியின் நிர்வாகிகள் அதிமுக தலைமை அலுவலகம் வருமாறு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனால் அதிமுக அம்மா அணி மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சண்முகம், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ராஜிவ் கொலையாளி பேரறிவாளன் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், தினகரன் விவகாரமே பிரதானமாக இருக்கும் என கோட்டை வட்டாரம் தெரிவிக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (13)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
31-ஜூலை-201720:40:12 IST Report Abuse
Rajamani Ksheeravarneswaran இன்றைய நிலையில் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தையும் அதன் தொண்டர்களின் தியாகத்தையும் , உழைப்பையும் பதவியை தக்கவைத்துக்கொள்ள பிஜேபிக்கு தாரை வார்த்துக்கொடுக்க என்பவர்களிடமிருந்து கட்சியை காப்பாற்ற தினகரன் ஒருவரால்தான் முடியும். இல்லையென்றால் அதிமுக , மோதிமுக என்ற கட்சியாக மாறிவிடும்.
Rate this:
Cancel
bala -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-201719:30:05 IST Report Abuse
bala எல்லா பிரச்சனைக்கும்,எம் தமிழ் சொந்தங்களே காரணம்...200 to500per vote...இப்போ தகுதி இல்லாதவன் கையில் அதிகாரம்....
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
31-ஜூலை-201718:30:28 IST Report Abuse
Malick Raja அதிமுக பொது செயலாளர் திருமதி சசிகலா என்பதை தேர்தல் ஆணையமே ஏற்றுக்கொண்டுவிட்டது அத்துடன் இரட்டை இலையை சின்னமும் சசிகலா தலைமைக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய உரிமை இருக்கிறதாம் .. அதன் பேரில் துணை பொது செயலாளருக்கு கட்சி அலுவலகம் செல்ல பூரண உரிமை இருக்கிறது ... தினகரன் ஒன்றும் பன்னீர் போன்ற பண்டாரம் இல்லை .திறமையும் திறனையும் உள்ள தினகரன் அதிமுகவின் உரிமையாளர் என்று மத்திய அரசுக்கே தெரிந்து விட்டது எனவே முதல் தகவல் அறிக்கை கூட தயாரிக்க முடியாமல் வழக்கிலிருந்தே வெளிவரும் அவலமும் ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி .. வழக்குகள் அந்நிய செலாவணி சம்பந்தப்பட்டது சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்கவகையில் வசதியுடன் ஜொலிக்கும் தினகரன் .. பண்டாரம் பன்னீர் போன்றவர்களால் அவரை ஒன்றும் அசைக்க முடியாது என்ற உளவுத்துறை செய்தியால் தமிழக அரசை நடத்தும் எடப்படியே தகர்ந்து போயிவிட்டாராம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X