பா.ஜ., மூத்த தலைவர் சிவப்பா மறைவு| Dinamalar

பா.ஜ., மூத்த தலைவர் சிவப்பா மறைவு

Added : ஜூலை 31, 2017
Advertisement

பெங்களூரு: கர்நாடக பா.ஜ., மூத்த தலைவரும், எளிமையான அரசியல்வாதி என அடையாளம் காணப்பட்ட, பி.பி.சிவப்பா, நேற்று காலை காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பி.பி.சிவப்பா, 89, சிகிச்சைக்காக, பெங்களூரு சுகுணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். தன் வாழ்நாளின் இறுதி நாட்களை, பிறந்த ஊரான ஹாசன் மாவட்டம் சக்லேஸ்புரா கும்பாரஹள்ளியில் செலவிட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. நாளுக்கு நாள், அவர் உடல் நிலை மோசமாகி வந்ததால், சொந்த ஊருக்கு அவரை அனுப்புவது பற்றி, டாக்டர்கள் முடிவு செய்யாமல் இருந்தனர். நேற்று காலையில், சிவப்பாவை பிறந்த ஊருக்கு அழைத்துச் செல்ல, அனுமதி அளிக்கும்படி, அவர் குடும்பத்தினர் கேட்டனர். டாக்டர்கள் முடிவு செய்வதற்குள், காலை, 11:15 மணிக்கு, அவர் மரணமடைந்தார். சிவப்பா மறைவு செய்தி கேட்டவுடன், முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ் குமார், முருகேஷ் நிரானி, எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பின், அவர் உடல், மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாநில பா.ஜ., தலைவர் பி.எஸ்.எடியூரப்பா, தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா, ஆர்.அசோக், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
பின், அவர் உடல், எம்.எல்.ஏ.,க்கள் பவனுக்கு கொண்டு செல்லப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்திய பின், அவர் பிறந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று, அவர்களின் வழக்கப்படி, இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
சிவப்பாவின் மறைவுக்கு, கவர்னர் வஜுபாய் வாலா, முதல்வர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவகவுடா, குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் மற்றும் அமைச்சர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X