"மானியமே வேண்டாம்' விவசாயிகள் ஓட்டம்.. கண்டுக்காத போலீசாரால் பொதுமக்கள் காட்டம்

Added : ஆக 01, 2017
Advertisement
""இலவசம்னு சொல்லி கூட்டிட்டு போயி, ரெண்டாயிரம் ரூபா கேட்டாங்களாம்,'' என்று, புதிர் போட்டபடி, சித்ராவின் வீட்டுக்குள் மித்ரா வந்தாள்.""என்ன வரும்போதே பீடிகை போடற?,'' என்று கேட்டவாறே, தண்ணீர் தந்தாள் சித்ரா.""எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவுல நடந்த கூத்துதான். வேளாண்துறை தோட்டக்கலைத்துறை சார்பில், இலவசமா பிளாஸ்டிக் "ட்ரே' கொடுக்கறோம்; காய்கறி பறிச்சு
"மானியமே வேண்டாம்' விவசாயிகள் ஓட்டம்.. கண்டுக்காத போலீசாரால் பொதுமக்கள் காட்டம்

""இலவசம்னு சொல்லி கூட்டிட்டு போயி, ரெண்டாயிரம் ரூபா கேட்டாங்களாம்,'' என்று, புதிர் போட்டபடி, சித்ராவின் வீட்டுக்குள் மித்ரா வந்தாள்.
""என்ன வரும்போதே பீடிகை போடற?,'' என்று கேட்டவாறே, தண்ணீர் தந்தாள் சித்ரா.
""எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவுல நடந்த கூத்துதான். வேளாண்துறை தோட்டக்கலைத்துறை சார்பில், இலவசமா பிளாஸ்டிக் "ட்ரே' கொடுக்கறோம்; காய்கறி பறிச்சு மார்க்கெட் எடுத்துட்டுப்போக வசதியா இருக்கும்னு சொல்லி, சில விவசாயிகள கூட்டிட்டு போனாங்க. "பங்ஷன்' முடிஞ்சதும், "ஆதார், ரேஷன் கார்டு கொடுங்க'னு கேட்டதுமட்டுமில்லாம, 2 ஆயிரம் ரூபா பணமும் கேட்டாங்களாம், '' என்ற மித்ரா தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும்
தொடர்ந்தாள்.
""வெயிட் பண்ணி, சடைஞ்சு போன விவசாயிங்க, "எதுக்கு 2 ஆயிரம் கேட்கறீங்க? இலவசமா தர்றோம்னு தானே கூட்டிட்டு வந்தீங்க?'னு எகிறியிருக்காங்க. அப்புறமா, ஒருவழியா சமாதானம் செஞ்சு அனுப்பிட்டாங்க. ஆனா, குறைகேட்பு கூட்டத்துக்கு வந்த அந்த விவசாயிங்க, இந்த விஷயத்தை "மைக்'கில் சொல்லி, அரங்கேத்தீட்டாங்க,'' என்று கூறினாள்.
""அடடே. ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கே,'' என்றாள் சித்ரா.
""இதை கேட்ட கலெக்டர், ""அதிகாரிகள வெச்சு சாயந்திரம் பேசிக்கலாம்''னு சொல்லி, உட்கார வச்சுட்டாரு,'' என்றாள் மித்ரா.
""திருப்பூர் வந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன், கலெக்டர் ரூமுக்குள்ள போனதும் கோபிச்சுட்டு வெளியே போயிட்டாரு தெரியுமா?'' என்று புதிய விஷயத்தை கூறினாள் சித்ரா.
""அப்டியா, என்ன விஷயம்,'' என்று ஆவலாக கேட்டாள் மித்ரா.
""சென்னை ஐகோர்ட் நீதிபதி வந்திருந்ததால், கலெக்டர் அவங்கள பார்த்து பேசிட்டு இருந்திருக்காரு. அதனால, ஆணைய துணைத் தலைவர் வந்த போது, டி.ஆர்.ஓ., வரவேற்றாராம். கலெக்டர் ரூமுக்குள்ள போனதும், அவர் இல்லைன்னு தெரிஞ்சதும் திடீர்னு கோபிச்சுட்டு, போயிட்டாரு; வேகமாக அங்கு வந்த கலெக்டர் மறுபடியும் வரவேற்பு கொடுத்து, மேல அழைச்சுட்டு போனாராம். அதுக்கு அப்புறமாதான், கார்ப்பரேஷன், கல்வித்துறை, இப்படி பல அதிகாரிகளை போட்டு, வறுத்து எடுத்துட்டாராம்...'' என்று முடித்தாள் சித்ரா.
""அவிநாசி காஸ் குடோன் பிரச்னையில், "அமவுண்ட்' விளையாடின விஷயம் தெரியுமா?,'' என்று பீடிகை போட்டாள் மித்ரா.
""காஸ் குடோன்ல போய், எப்படி நடந்துச்சு. என்று, ஆச்சரியப்பட்டாள், சித்ரா.
""இந்த பிரச்னையை, கலெக்டர் விசாரிச்சிட்டிருக்கார். ஆனா, போலீஸ் தரப்புல யார் யாரோ ஐடியா கொடுத்து, ஒரு ஆர்டரை வாங்கி, குடோனை ஓபன் பண்ணிட்டாங்க. போலீஸ் தரப்புல, இதுக்கு முழு சப்போர்ட்டாம், '' என்றாள் மித்ரா.
""அதெப்படி கலெக்டர் என்கொயரி இருக்கும் போது திறந்தாங்க,'' என்று வியப்புடன் கேட்டாள் சித்ரா.
""ஏஜென்சிக்காரரின் மாமனார், ஒரு ரிட்டயர்ட் போலீஸ் ஆபீசராம். அதனால, போலீசுக்கு செம கவனிப்பாம்,'' என்று மித்ரா. சொல்லவும், "ராமசாமி' டீக்கடை வரவும் சரியாக இருந்தது.
""சரி, கலெக்டர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கார்,'' என்று கேட்டாள் சித்ரா.
""கலெக்டர் தரப்புல இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனா, துறைரீதியா போலீஸ் அதிகாரிங்ககிட்ட விளக்கம் கேட்கலாமுன்னு, ஆலோசனை நடக்குதாம்,'' என்றாள் மித்ரா.
""எல்லாம் சரி, இத்தனை எதிர்ப்பு இருக்கும் போதே, குடோனைத் திறந்தவங்க, ஒரு வருசம் கழிச்சு மட்டும் இடத்தை மாத்தவா போறாங்க,'' என்று சலித்து கொண்டாள் சித்ரா.
""அமைச்சரை ஒருமையில திட்டுன விஷயம் தெரியுமா,?'' என்று மித்ரா கூறவும், ""இந்த கூத்து, எங்கே நடந்தது,'' என்று சித்ரா, காதை தீட்டி கொண்டாள்.
""போன வாரம், டிரான்ஸ்போர்ட் தொழிலாளர் ஆர்ப்பாட்டத்துல, ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தை செமையா தாக்குனாங்களாம். குறிப்பா, "இந்த அமைச்சர் இருக்கற வரைக்கும், ஈயம் பித்தளைக்கு, பேரீச்சம்பழக்கடைக்கு பஸ்களை போட்டுருவார்,'ன்னு சொல்லி, ஒருமையில அர்ச்சனை பண்ணாங்களாம்,'' என்றாள் மித்ரா.
""ஏன், போலீஸ்காரங்க யாருமே வரலியா,'' என்று சித்ரா கேட்க, ""ஐ.எஸ்., போலீஸ் இல்லைன்னு தெரிஞ்சதும், ஒரு வாங்கு வாங்கிட்டாங்க. அர்ச்சனையை கேட்டுட்டு, பாதுகாப்புக்கு வந்திருந்த ரெண்டு கான்ஸ்டபிள் நெளிஞ்சாங்களாம்,'' என்று மித்ரா விளக்கினாள்.
""சரி, இதையும் கேளு. திருப்பூரில் விபத்து அதிகமாயிட்டே போய், சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரைக்கு அடுத்தபடியா, அஞ்சாவது இடத்தை பிடிச்சிருக்காம்,'' என்று அதிர்ச்சி தகவலை சித்ரா சொல்ல, ""ஆமா... இங்கிருக்கிற, ரோட்டையும், டிராபிக்கையும் பார்த்தா, அஞ்சு என்ன, முதலிடத்தையே பிடிச்சுடும், பாரேன்,'' என்று மித்ரா, வேதனை தெரிவித்தாள்.
""தோட்டக்கலைத்துறையில நடக்கிற கூத்தை கேட்டியா,'' என்று சித்ரா அடுத்த விஷயத்துக்கு தாவினாள்.
""அங்க என்ன பிரச்னையாம்,'' என்று மித்ரா ஆர்வத்தோடு கேட்டாள். ""நூறு சதவீதம் மானியம், சொட்டு நீர் அமைங்கன்னு, அழைப்பு விடுக்கிறதெல்லாம், தடபுடலாத்தான் நடக்குது. ஆனா, மானியத்துல பாதிய அதிகாரிகளே "ஆட்டைய' போட்டுக்கிறாங்கன்னு, விவசாயிங்க புலம்பறாங்க,'' என்று சித்ரா கூறினாள்.
""அடடா, ஏற்கனவே வறட்சியால நொந்துபோயிருக்கிறவங்க மடியில தான், அதிகாரிங்க கை வைக்கணுமா,'' என்று மித்ரா ஆதங்கப்பட்டாள்.
""ரொம்ப கரெக்ட். சொட்டு நீர் பாசனத்துக்காக, பட்டா, சிட்டான்னு ஆவணங்களை, விவசாயிங்க கொடுத்திருக்காங்க. ஆனா, "அரசு கொடுக்கறதைவிட தரமான பைப் போடனும்; கம்பெனிகாரனுக்கு கொடுக்கனுமுனு சொல்லி, விவசாயிகிட்ட இருந்து, 25 ஆயிரத்தில் இருந்து, 30 ஆயிரம் ரூபா வரை கறந்திடறாங்களாம். இதனால, மானியமே வேணாம், ஆளை விட்டா போதுமுன்னு, விவசாயிங்க பலர் ஓட்டம் பிடிக்கறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
""ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் கட்ட அடிக்கல் நாட்டுவிழா நடந்துச்சு, இதுல, சீட் கிடைக்காம, சிட்டி டி.சி., மேடத்துக்கு தர்மசங்கடமாச்சு,'' என்று, சித்ரா கூறினாள்.
""அடடா, அப்புறம் என்னாச்சு,'' என்று மித்ரா கேட்டாள்.
""சீட் ஒதுக்காதது தெரியாம மேடை ஏறின அவுங்க, இடமில்லைன்னு தெரிஞ்சதும், கீழே இறங்கீட்டாங்க,'' என்று சித்ரா கூறியதும், "வி.ஐ.பி., க்களுக்கு சீட் ஒதுக்குகிற வேலையை யார் பார்த்தது,'' என்று மித்ரா கேட்டாள்.
""இதை செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்த ஐ.எஸ்., இன்ஸ்பெக்டர், விழாவுக்கு எட்டி பார்க்கலையாம். அவருக்கு போன் போட்டா, "கால்' போகலையாம். ஆன் டூட்டியில், இருக்க வேண்டிய இன்ஸ்., வெளிய போயிட்டதா போலீஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபடுது,'' என்று சித்ரா கூறினாள்.
"என்கிட்ட கூட, ஒரு போலீஸ் மேட்டர் இருக்கு. வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் வரும், அவிநாசி ரோட்டில், அனுமதியோ, போதுமான பாதுகாப்போ இல்லாம, பெண்கள் விடுதி ஒன்னு செயல்பட்டுட்டு வருது. விடுதி இருக்கும் அதே தளத்தில், "கிளப்' ஒன்னும் இயங்கி வருதாம். இதனால, பெண்களோட பாதுகாப்பு, கேள்விக்குறியாக இருக்கு,'' என்றாள் மித்ரா.
""ஏன், இதை யாரும் கண்டுக்கலையா,'' என்று சித்ரா கேட்டாள்.
""அந்த கிளப்புக்கு, அரசு துறையில் இருக்கிற சில பெரிய புள்ளிகளின் ஆதரவு இருக்காம். இதனால, விடுதியோட நிலைமையை வெளியே சொல்லாம, அமுக்கிட்டாங்களாம். புதுசா வந்திருக்கிற கமிஷனர், இதைய கொஞ்சம் கவனிச்சா நல்லா இருக்கும்,'' என்றாள் மித்ரா.
""மிஸ்ஸிங்' புகார்களுக்கு, போலீசார் சிலர் பணம் வசூலிக்கிறதா தகவல் வந்துச்சே. இப்ப நிலவரம் எப்படி இருக்கு,'' என்று சித்ரா கேட்டாள்.
""சமீபத்தில், ரூ.10 ஆயிரம் கேட்பதாக, ஒரு போலீஸ்காரர் மீது புகார் வந்துச்சு. சம்மந்தப்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், அந்த போலீஸ்காரரை சத்தம்
போட்டிருக்கிறாரு. அடுத்த நாளே, புகார்தாரர் வீட்டுக்கே போய், அந்த போலீஸ்காரர் மிரட்டுனாராம். கூலி தொழிலாளர்கிட்ட எல்லாம் வீரம் காட்ட, போலீஸ்காரருக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ,'' என்று மித்ரா கூறியதும், சித்ராவின் மொபைல் போன் சிணுங்கியது. டிஸ்பிளேவில், "நந்தகுமார்' என்று பெயர் வந்தது.
""அங்கிள், வீட்டுக்கு போயிட்டு கூப்பிடறேன்,'' என்று போனை ஆப் செய்து விட்டு,""அவிநாசியில டிராபிக் போலீஸ் செய்யும் அட்டூழியம் அதிகமாயிட்டே போகுதாம். ரெண்டு நாளைக்கு முன்னாடி, கோவை பைபாஸ் ரோட்டுல, நிக்காம போன டூவீலரை துரத்தி பிடிச்சு, "வரி' போட்டாங்களாம்,'' என்று கூறியதும், "சங்கர் கணேஷ்' இசையமைத்த, "தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி,' என்று மித்ராவின் மொபைல்போனில் பாட்டு ஒலித்தது.
போனில், பேசி விட்டு, ""ஆமாம், நானும் கேள்விப்பட்டேன். சேவூர் ரோடு பிரிவில் டியூட்டி போட்ட போலீஸ், ஸ்பாட்டில் இல்லாததால, டிப்பர் லாரி மோதி, அநியாயமா ஒரு பொண்ணு இறந்திடுச்சு. ஆனா, சம்பந்தப்பட்ட போலீஸ் மேல, நடவடிக்கை எடுக்கவேயில்லையாம். இப்படி, அதிகாரிங்க அலட்சியமா இருந்தா, மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்குமுன்னு தெரியல,'' என்று ஆதங்கப்பட்டு கொண்டே, ""ஓ.கே., எனக்கு டைம் ஆயிடுச்சு. ஆடிப்பதினெட்டுக்கு, வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு போலாம்,'' என்று கூறியவாறு நகர்ந்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X