அரசியல் செய்தி

தமிழ்நாடு

2 நாள் பொறுத்திருங்கள்.., தினகரன் சஸ்பென்ஸ்

Updated : ஆக 02, 2017 | Added : ஆக 01, 2017 | கருத்துகள் (24)
Advertisement
அணிகள் இணைப்பு, தினகரன், ஜெயக்குமார், சஸ்பென்ஸ், கமல், சுற்றுபயணம், அதிமுக

சென்னை: ''லோக்சபா தேர்தலில் வெற்றி பெற, கட்சியை பலப்படுத்த வேண்டும். அதற்காக, தமிழகம் முழுவதும், சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்,'' என, தினகரன் கூறினார்.
சென்னையில், நேற்று அவர் கூறியதாவது: அ.தி.மு.க., பொதுச்செயலர், செயல்பட முடியாத நிலையில் உள்ளார். இதுபோன்ற சூழலில், அவரால், துணை பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட எனக்கே, பொதுச்செயலருக்கான அதிகாரங்கள் உள்ளன. கட்சியின் தொண்டனாக, துணைப் பொதுச் செயலராக, தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். இரு அணிகளும் இணைய, கால அவகாசம் அளித்ததில், எந்தவித முன்னேற்றமும் இல்லை. கட்சியின் துணை பொதுச் செயலர் என்ற முறையில், கட்சிக்கு கடமையாற்ற வேண்டி உள்ளது. இரண்டு மாதங்களாக, தொண்டர்கள் அடிக்கடி, என்னை வந்து சந்தித்து செல்கின்றனர். அவர்கள் வேண்டுகோளை ஏற்று, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். 2019 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற, கட்சியை பலப்படுத்த உள்ளேன். மக்களை பெரிதும் பாதிக்கும், காஸ் மானியம் ரத்து, ரேஷன் பொருட்கள் நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளை, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அதற்கு மாநில அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும். மக்கள் நலன் கருதி, மத்திய அரசு மூலம், தமிழகத்திற்கான திட்டங்களை, மாநில அரசு பெற்றுத்தர வேண்டும்.

நடிகர் கமல், ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டும். அவர், மக்களால் மிகவும் மதிக்கப்படுபவர். அவரது குற்றச்சாட்டுகளை அமைதியாக கேட்டு, அமைச்சர்கள் அரசியல் ரீதியாக அணுக வேண்டும். கட்சியை பலப்படுத்துவதில், பிரிந்து போனவர்களை சேர்ப்பதும் அடங்கும். அவர்கள் பயத்தினால், என்னை ஒதுங்கி இருக்கும்படி கூறினர்; அது, எனக்கு தெரியும். இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள்; வரும், 4ல், என் சுற்றுப்பயண திட்டத்தை அறிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
17-அக்-201700:31:31 IST Report Abuse
Agni Shiva சும்மா அதிருதில்ல? தீனக்காரன் என்றால் சும்மாவா? ரெண்டு நாளில் தமிழகத்தில் ஒரு அரசியல் சுனாமி வந்து அனைத்து கட்சிகளும் குளோஸ்...தீனக்காரன் அந்த சுனாமியில் நீந்தி கரையேறி தமிழர்களை காப்பாற்றுவார்.
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
01-ஆக-201716:14:15 IST Report Abuse
Nakkal Nadhamuni ரெண்டு நாளில் எடப்பாடி டிஸ்மிஸ்...
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
01-ஆக-201715:57:43 IST Report Abuse
appaavi சஸ்பென்ஸ் வைத்து உள்ளே போவதே இவனுக்கு வாடிக்கையாகிவிட்டது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X