அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பினாமியிடம் கொடுத்த ரூ.246 கோடி 'அம்போ'

வருமான வரித்துறையிடம் சிக்கிய, 246 கோடி ரூபாயை தரும்படி, அ.தி.மு.க., - வி.வி.ஐ.பி., தன் பினாமியை நச்சரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பினாமி ,Proxy, வருமான வரித்துறை, income tax department, அ.தி.மு.க.,  AIADMK,வி.வி.ஐ.பி., VVIP, பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi,செல்லாத ரூபாய் நோட்டு,Invalid Rupees, வங்கிகள்,Banks,  கூட்டுறவு வங்கி,Co-operative Bank, கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி, Contractor Shekar Reddy,  தமிழக அரசியல் ,  Tamil Nadu Politics,

பிரதமர் நரேந்திர மோடி, 2016 நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், 'டிபாசிட்' ஆன தொகை குறித்து, வருமான வரித்துறை ஆய்வு நடத்தி யது.

இதனடிப்படையில் தான், கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர் கள் சிக்கினர்; 1,000கோடி ரூபாய்க்கு மேல், வரி ஏய்ப்பும் கண்டறியபட்டு, வரி வசூலிக்க பட்டது.

இப்படி நடத்தப்பட்ட சோதனையில், சேலம், அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் இருந்து, 246 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், 75 சதவீதத்தை, அவர் அபராதமாக செலுத்தியுள்ளார்.

ஆனால்,அந்தப்பணம், சேலத்தை சேர்ந்த மிக உயரிய பொறுப்பில் இருக்கும், வி.வி.ஐ.பி.,க்கு சொந்தமானது என, தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

சேலத்தில், அ.தி.மு.க., பிரமுகர் ஒருவரிடம் இருந்து, கணக்கில் வராத, 246 கோடி ரூபாய், சில மாதங்களுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்டது. அது, அவருடைய பணம் இல்லை என, எங்களுக்கு தெரிந்தாலும், 'அது தன் பணம் தான்' என, அவர் பிடிவாதமாக கூறினார். பின், அதற்குரிய வரியை யும் செலுத்தசம்மதித்தார்.

அதனால், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப் பட்ட தொகையில், வரி மற்றும் அபராதமாக, 75 சதவீதம் வசூலிக்கப்பட்டது. உண்மையில், அந்த, ௨௪௬ கோடி ரூபாய் அவருடைய பணம் அல்ல. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, வி.வி.ஐ.பி., ஒருவர்

Advertisement

தான், அவரிடம் கொடுத்து வைத்திருந்தார். தன் பினாமி, வருமான வரித்துறையிடம் சிக்கிய போது, அமைதியாக இருந்த அந்த, வி.வி.ஐ.பி., தற்போது, வருமான வரித்துறையிடம் சிக்கியவரிடம் பணத்தை கேட்டு நச்சரித்து வருகிறார்.

எனவே, அந்த, வி.வி.ஐ.பி.யை., எப்படி வலை யில் சிக்க வைப்பது என, ஆலோசித்து வருகி றோம். அவர் சிக்கினால், தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். இவ்வாறு வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறின.
- நமது சிறப்பு நிருபர்-


Advertisement

வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
02-ஆக-201723:28:41 IST Report Abuse

Rajeshஇந்திய அரசு என்ன சொல்லவருகிறது?

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
02-ஆக-201722:42:36 IST Report Abuse

dandyஉலகில் இந்த தமிழ் நாட்டில் (என்ஜின் இல்லாத கார் மாதிரி) சிங்கள் டி குடிக்க சில்லறை இல்லாமல் இருந்தவன் எல்லாம் அரசியல்வாதி ஆனதும் நூறு ஆயிரம் கோடிகள் சேர்க்கும் நிகழ்வு நடைபெறும் ...மற்றைய நாடுகளில் பணம் எப்படி வந்தது என்று நிரூபிக்க வேண்டும் ..வாழ்க இந்திய வருமான துறை

Rate this:
ezhumalaiyaan - Chennai,இந்தியா
02-ஆக-201722:23:09 IST Report Abuse

ezhumalaiyaanரூ.246 கோடி எப்படி அம்போ ஆகும். 25 சதவீதம் தான்திருப்பி கொடுத்திருப்பார்கள் அல்லவா/

Rate this:
மேலும் 51 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X