அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
குடிமராமத்து திட்டம்: அரசு நிதி வீணடிப்பு

அரசியல்வாதிகள் தலையீட்டால், ஏரிகளை புனரமைக்கும் குடிமராமத்து திட்டப் பணிகளை முறையாக செயல்படுத்தாமல், அரசு நிதி வீணக்கப்பட் டு உள்ளது.

 குடிமராமத்து திட்டம், அரசு நிதி ,government fund, அரசியல்வாதிகள், politicians, ஏரி, Lake,தமிழகம், Tamil Nadu, பொதுப்பணித்துறை ,  PWD,Public welfare department,விவசாயிகள் , Farmers,சென்னை, Chennai, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, நபார்டு வங்கி, NABARD Bank

தமிழகத்தில், ஏரிகளை புனரமைக்கும் குடிமராமத்து திட்டத்தை, முதல்வர் பழனிசாமி காஞ்சிபுரத்தில் துவக்கி வைத்தார்.

ரூ.100கோடி


மாநிலம் முழுவதும், 1,519 ஏரிகளை, 100 கோடி ரூபாய் செலவில், புனரமைக்கும் பணிகள் துவங்கின. இதற்காக, பொதுப்பணித்துறை

அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும், குடிமராமத்து திட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளன.

ஆனால், முறையாக ஏரிகளை புனரமைக்காமல், ஏரிகளில் இருந்தசெடி, கொடிகளை அகற்றி, 'பொக்லைன்' இயந்திரம் மூலம், மண்ணை அள்ளி வெளியே கொட்டிவிட்டு, கணக்கு காட்டப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

'நபார்டு' வங்கியிடம் பெற்ற நிதி, வீணானதற்கு, அரசியல்வாதிகளின் குறுக்கீடே காரணம் என, கூறப்படுகிறது.

தலையீடு


இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏரிகளை புனரமைப்பதற்காக, பல இடங்களில்,குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆளும் கட்சியை சேர்ந்த விவசாயிகள், இந்த குழுக்களில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டனர். இதனால், பணிகள் முறையாக நடக்கவில்லை. சில அதிகாரி களும், அவர்களுக்கு துணை போய் விட்டனர்.

Advertisement

அரசியல் சூழ்நிலைகளால், ஆளும் கட்சியி னரை தட்டிக்கேட்க முடியாத நிலைக்கு அரசு தள்ளப்பட்டது.

அடுத்த கட்டமாக, 'நபார்டு' வங்கியின், 300 கோடி ரூபாய் கடன் உதவியில், 2,065 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளையாவது, அரசு வரைமுறைப் படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அரசின் மொத்த நிதியும், வீணடிக்கப்படுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Nath - PCMC,இந்தியா
02-ஆக-201722:00:09 IST Report Abuse

V Nathஏரி குளங்களை தூர்வாரும் பணியை பார்த்தேன். ஒருவர் பொக்லைனை வைத்து மண் எடுக்கிறார் ஒருவர் லாரியில் ஏற்றி தேவைப்படுபவர்களுக்கு கொண்டுபோய் கொட்டுகிறார். ஒரு லோடுக்கு ரூ. 1 ,000 - 2 000 என்று வாங்குகிறார். இதில் அரசுக்கு என்ன செலவு?

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
02-ஆக-201716:59:49 IST Report Abuse

Endrum Indianகுடிமராமத்து திட்டம். இந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ, அமைச்சர் என்ன புரிந்து கொண்டார்கள் என்றால் குடி மராமத்து என்று ஆகவே டாஸ்மாக்கை மராமத்து அதாவது விரிவாக்குகின்றனர்.

Rate this:
மூ. மோகன் - வேலூர்,இந்தியா
02-ஆக-201716:10:19 IST Report Abuse

மூ. மோகன்யார் சொன்னது குடிமராமத்து திட்டத்தில் அரசு நிதி வீணடிக்கப்பட்டதுன்னு? அதெல்லாம் போக வேண்டிய இடத்துக்கு சரி பங்காய் போய் சேர்ந்திருக்கும்

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X