சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டது

Added : ஆக 03, 2017 | கருத்துகள் (57)
Advertisement
நடிகர்,Actor , சிவாஜி கணேசன்,Shivaji Ganesan, சிவாஜி சிலை,Shivaji statue, நடிகர் சிவாஜி கணேசன்,Actor Shivaji Ganesan, சென்னை,Chennai, காமராஜர் சாலை,  Kamarajar Road, மணிமண்டபம், Manimandapam,Memorial hall, சென்னை மெரினா கடற்கரை ,Chennai Marina Beach,   சென்னை ஐகோர்ட், Chennai High Court, தமிழக அரசு, Tamilnadu Government,அடையாறு, Adyar,

சென்னை: காமராஜர் சாலையில் இருந்த நடிகர் சிவாஜி சிலை அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட சிலை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.


போக்குவரத்துக்கு இடையூறு:

நடிகர் சிவாஜி கணேசனின் முழு உருவச் சிலை சென்னை மெரினா கடற்கரை எதிரில், காமராஜர் சாலை-ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நிறுவப்பட்டிருந்தது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சிலையை அகற்றும்படி கோர்ட் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அகற்றப்படும் சிவாஜி சிலை, அடையாறு அருகே கட்டப்படும் சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.


ஐகோர்ட் தீர்ப்பு:

அதை எதிர்த்தும், அகற்றப்படும் சிவாஜி சிலையை, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் காந்தி - காமராஜர் சிலைகளின் வரிசையில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் 'நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை' சார்பில் வழக்குத் தொடப்பட்டது. சிலையை இடமாற்றம் செய்ய எந்த தடையும் இல்லை என ஜூலை 18ம் தேதி ஐகோர்ட் மீண்டும் தீரப்பளித்தது.


சிலை அகற்றம்:

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் நடிகர் சிவாஜி சிலை அகற்றும் பணி துவங்கப்பட்டு, அதிகாலையில் பத்திரமாக சிலை அகற்றப்பட்டது. அகற்றப்படும் சிலையானது, விரைவில் அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bairava - madurai,இந்தியா
04-ஆக-201700:47:07 IST Report Abuse
bairava ஒரு தமிழனுக்கு புகழாரம் சிலை வைத்து.... மற்றொரு மரதமிழனின் சிலையை அகற்றி சிறுமை செய்வது தான் பாசிச அரசின் நோக்கம்..இதுபோல தான் தமிழருக்கான திட்டங்கள் அனைத்தும் இந்த அரசாங்கத்தில் நடக்கிறது நான் சொல்லுவது மத்திய அரசை..இந்த சிலை மீண்டும் மெரினாவில் தான் வைக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Vamanan Nair - சான் ஹோஸே , கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
03-ஆக-201717:21:40 IST Report Abuse
Vamanan Nair எவன் எல்லாம் ரோட்டில வைக்கணும் என்னு சொல்கிறார்களோ அவர்கள் வீட்டு முற்றத்தில் வைக்கவேண்டும். பொது இடத்தில வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பொது இடம் பொது மக்களுக்கே. யார் சிலையும் இங்கே தேவை இல்லை. நாடு ரோட்டில் வச்சிக்கிட்டு மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். இதே போல் செத்துப்போன எங்க தாத்தா சிலையை மவுண்ட் ரோடு நடுவில் வைக்க விடுவார்களா ?
Rate this:
Share this comment
Cancel
Sekar KR - Chennai,இந்தியா
03-ஆக-201715:11:21 IST Report Abuse
Sekar KR சிலை அகற்றுவதால் அவர் புகழ் அழியப்போவதில்லை. இன்று நாம் பார்க்காத வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் , ராஜா ராஜா சோழன், போன்றவர்களை நம் மனதில் நிறுத்தியவர் இவர்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X