உலகில் அனைவரும் ஆனந்தம் உணர வழி என்ன?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

உலகில் அனைவரும் ஆனந்தம் உணர வழி என்ன?

Added : ஆக 03, 2017 | கருத்துகள் (19)
Advertisement
உலகில் அனைவரும் ஆனந்தம் உணர வழி என்ன?

சத்குரு இந்த உலகில் அனைவரும் ஆன்மீகத்தில் ஈடுபட்டு அன்பும் ஆனந்தமும் கொண்டவர்களாக மாறவேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
சத்குரு: அனைவரும் இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும், ஒருவருக்கொருவர் அன்பும் அக்கறையுமாக இருக்கவேண்டும், அதைநோக்கி இந்த உலகம் மாறவேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதருக்குமே இருக்கிறது. ஆனால், அதைத் தவறான இடத்திலிருந்து தொடங்க முயற்சிக்கின்றனர். தான் அன்பும் அக்கறையுமாக இருப்பதற்கு முன் மற்றவர் எல்லோரும் அன்பும் அக்கறையுமாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். ஒருவருக்கு அன்பும் அக்கறையும் எப்போதுவரும்?மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிற நேரங்களில் அனைவரும் இயல்பாகவே அன்புடனும், தாராள சிந்தையுடனும், அற்புதமான மனிதராகவும் தான் இருக்கிறீர்கள். இதை உங்களிடமே பலமுறை நீங்கள் கவனித்திருக்க முடியும். அதேநேரத்தில் நீங்கள் மகிழ்வற்ற தன்மையிலும், மனவேதனையிலும் இருக்கும்போது காரணமில்லாமலே கூட அனைவர் மீதும் எரிந்து விழுபவராக இருக்கிறீர்கள். எனவே நீங்கள் முதலில் மகிழ்ச்சியானவராகவும் ஆனந்தமானவராகவும் மாறவேண்டியது முக்கியம். உங்களுக்குள் முதலில் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லாமல் அடுத்தவர்மீது முயற்சி செய்து அன்புடன் இருக்க விரும்பினால் அப்படி அது நடக்காது. எனவே ஒவ்வொருவரும் தாங்கள் முதலில் ஆனந்தமும், களிப்பும் மிகுந்தவராக மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும். மக்கள் ஆனந்தமாக இருக்கும்போது அற்புதமனிதர்களாக இருக்கின்றனர். மக்கள் ஆனந்தமாக இருக்கும்போது தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் இயல்பாகவே அன்பையும் ஆனந்தத்தையும் பொழிகின்றனர். எனவே மனிதர்களை உண்மையாகவே ஆனந்தம் கொண்டவர்களாகச் செய்வதுதான் என்னுடைய ஒட்டுமொத்த வேலையாக இருக்கின்றது. அதற்கு ஆன்மீக செயல்முறை அவசியமாக இருக்கிறது. ஆன்மீகம் என்றால் வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்வது என்று பொருளல்ல. ஆன்மீகம் என்றால் முழுஅளவில் நீங்கள் உயிரோட்டமாக இருப்பதுதான். வாழ்க்கையின் மையம்வரையில் உயிர்ப்புடன் இருப்பது. எனவே உங்கள் மகிழ்ச்சியும் உயிர்த்துடிப்பும் அதிகரிக்க ஆன்மீகத் தேடுதலும் உதவுகிறது. ஆன்மீகம் என்பது எப்போதும் தாகமும், தேடுதலும் உள்ளடக்கியது.
நீங்கள் முதலில் ஆனந்தமானவராக மாறும்போது உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை ஆனந்தமானதாக மாறுகிறது. உங்களின் ஆனந்தமான சூழ்நிலையே அடுத்தவரின் மனத்திலும் ஒருதாக்கத்தை ஏற்படுத்த முடியும். இப்படி சமூகத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஆனந்தமானவராக மாறும்போது ஒருவருக்கொருவர் அன்பும் அக்கறையுமாக இருப்பது இயல்பாகவே நிகழ்ந்துவிடும். அப்போது அந்த சமூகமே அற்புதமானதாக இருக்கிறது.வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
05-அக்-201705:30:12 IST Report Abuse
Barathan இந்த சாமியார் மாதிரி மலைகளை அழிக்கவேண்டும்,. அடுத்து அரசியலில் உள்ள செல்வாக்கை பயன் படுத்தி, நதிகளை மீட்போம் என்று ஒரு பெரிய விளம்பரத்தை ஏற்படுத்துவோம்.பிஜேபி போன்று நதிகளை மீட்க மிஸ்டு கால் கொடுக்க செய்வோம். இப்படியெல்லாம் செய்தால் ஆனந்தம் பிறக்கும். இவரு அமெரிக்காவுக்கும் -இந்தியாவுக்கும் விமானத்தில் பறக்கும்.சாமியார்.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
02-அக்-201711:01:55 IST Report Abuse
Malick Raja முதலில் தான் ஆனந்தம் அடைந்தது எப்படி என்பதை வெளிப்படுத்தினால் . அதே வகையில் மற்றவர்கள் ஆனந்தம் அடையலாம் .. மறப்பாட்சிக்கட்டைகளும் ஆனந்தம் அடைவதில் வியப்பில்லை .. ஆனால் உலகம் அனைத்திற்கும் என்று சொன்னால் கிறுக்கன் என்பதல்லவா வெளிப்படும்
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
27-செப்-201704:20:38 IST Report Abuse
Dr.C.S.Rangarajan எதை எல்லாம் நாமே செய்யமுடியுமோ, அதை எல்லாம் நம் முன்னோர்கள், யாருடைய போதனையும் இல்லாமல், சொந்த முயற்சியால், கற்று வாழ்க்கை என்பது கலையையும் விக்யானத்தையும் விட உயர்ந்தது என்றறிந்து வாழ்க்கையை செவ்வனே சீரும் சிறப்புடனும் நடத்தி செல்லவில்லையா? நம் வாழ்க்கையை வளம்படுத்துவதாக சொல்லி, தங்களின் வாழ்க்கை வசதிகளை, நம் கண்முன்னே பெருக்கிக்கொண்டவர்களை கண்டும் 'நம்மால் முடியும்' என்ற எண்ணம் ஏன் நமக்கு தோன்றவில்லை? தோன்றாதவரை சிலர் ஏற்றம் பெருவதை தடுக்கமுடியாது. எண்ணங்கள் தோன்றினால் சிலரின் எண்ணங்களையும், வண்ணங்களையும் அறிவதுடன், 'கூடா நட்பை' நம் ஏற்றத்துக்காக தவிர்க்கமுடியாத என்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X