சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசின் இலவச நிலத்தை காணவில்லை: 3 ஆண்டுகளாக முறையிடும் விவசாயிகள்

Added : பிப் 07, 2011 | கருத்துகள் (2)
Advertisement
அரசின் இலவச நிலத்தை காணவில்லை: 3 ஆண்டுகளாக முறையிடும் விவசாயிகள்

ராமநாதபுரம் : அரசு வழங்கிய இலவச நிலத்தை மூன்று ஆண்டுகளாக தேடி வரும் விவசாயிகளின் முறையீட்டிற்கு அதிகாரிகள் செவி சாய்க்க மறுத்து வருகின்றனர்.


கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., அரசின் வாக்குறுதியில் விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் அறிவிப்பு முக்கிய அம்சமாக இருந்தது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் ஏ.மணக்குடி பகுதி விவசாயிகள் 200 பேருக்கு நிலம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அப்பகுதியில் உள்ள புல எண் 211ல் உள்ள 400 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்தனர். இருந்தும், நபருக்கு ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே வழங்கிய அதிகாரிகள், அதற்கான பட்டாவையும் பயனாளிகளிடம் வழங்கினர். ஆனால், சம்பந்தப்பட்ட நிலத்தை அளவு செய்து பிரித்து தரவில்லை. இதனால், பட்டா இருந்தும் தங்கள் நிலம் எது என்பதை விவசாயிகளால் அறிய முடியவில்லை. தங்கள் நிலத்தை கண்டுபிடித்து தருமாறு, மூன்று ஆண்டுகளாக தாசில்தார், கலெக்டர், அமைச்சர் தங்கவேலன் ஆகியோரிடம் தொடர்ந்து முறையிட்டும் பயன் இல்லை.


சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் பிரிவில் நேற்று மீண்டும் முறையிட்டனர். "அதிகாரிகளிடம் கேட்ட போது, நிலத்தை முறையாக அளந்து கொடுத்தாக தெரிகிறது. திடீர் என விவசாயிகள் முறையிட வந்தது ஆச்சர்யமாக உள்ளது' என்றார் கலெக்டர் ஹரிஹரன். விவசாயி தியாகராஜன் கூறியதாவது: அதிகாரிகள் அளந்து கொடுத்திருந்தால் நாங்கள் ஏன் அலையப் போகிறோம்? "பொது பயன்பாட்டிற்கு அப்பகுதி நிலம் வேண்டும்' என, அதிகாரிகள் கூறியதால் தான், இரண்டுக்கு பதிலாக ஒரு ஏக்கர் நிலம் வாங்க சம்மதித்தோம். அதற்கான பட்டா மட்டும் பெற்ற நிலையில், மூன்று ஆண்டுகளாக நிலத்தை அடையாளம் காண முடியாமல் தேடி வருகிறோம். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.p.poosaidurai - sathanoor, ramanathapuram,இந்தியா
08-பிப்-201111:29:38 IST Report Abuse
s.p.poosaidurai முன்னால் அமைச்சர் வா.து.நடராசன் ஊரில் நடந்த பிரச்னை. இதில் எதோ சூழ்ச்சி உள்ளது. உண்மையை உலகுக்கு காட்டுங்கள்
Rate this:
Share this comment
Cancel
VJ tr - Chennai,இந்தியா
08-பிப்-201104:31:03 IST Report Abuse
VJ tr ஒரு பைசா செலவு இல்லாம 1 ஏக்கர நிலம் வாங்க நினைக்கிறீங்கன்னு. அதிகாரிகளுக்கு உருத்திக்கிட்டு இருக்கும். பேசாம எல்லாரும் சேர்ந்து செலவு செய்தால் உங்களுக்கு உங்கள் நிலம் கிடைக்கும். இது எல்லாம் வோட்டு வாங்குறதுக்கு போட்ட திட்டம். நீங்க உண்மைன்னு நம்பி வந்து கேட்டா நாங்க என்ன பண்றது. எங்களுக்கு மொதல்ல வாய்கரிசி போட்டுட்டு கேளுங்க நாங்க பண்றோம். - இப்படிக்கு அதிகாரிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X