சின்ன சின்ன ஆசை - நடிகை ஹேமா ஜெனிலியா| Dinamalar

சின்ன சின்ன ஆசை - நடிகை ஹேமா ஜெனிலியா

Added : ஆக 06, 2017
சின்ன சின்ன ஆசை - நடிகை ஹேமா ஜெனிலியா

செம்பொன் சிலையோ.. தரையில் உதித்த வெண்நிலவோ... பொங்கி வரும் புதுவெள்ளம் போல் இளசுகளின் இதயத்தை கொள்ளையடிக்க வந்த புதிய சுனாமி... பைரவா மூலம் சினிமாவில் தடம் பதித்த நடிகை ஹேமா ஜெனிலியா தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்தார்...
* உங்களைப் பற்றி...விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூர் சொந்த ஊர். படிச்சது எல்லாம் சென்னையில் தான். பி.டெக்., ஐ.டி., முடித்துள்ளேன்.
* இரு நடிகைகளின் பெயராக உள்ளதே..எனது இயற்பெயர் ஹேமலதா. நடை, உடை, பாவனை அனைத்தும் நடிகை ஜெனிலியா மாதிரி இருப்பதால், நண்பர்கள் ஜெனிலியா என செல்லமாக அழைப்பார்கள். அதையே சினிமாவிற்காக ஹேமா ஜெனிலியா என மாற்றி உள்ளேன்.
* நடிப்பில் ஆர்வம்..நடிக்கவே நான் வரலேங்க. 'சிங்கர்' ஆகணும்னு தான் சினிமாவுக்கு வந்தேன். அந்த நேரத்தில் 'பைரவா' படத்தில் கெஸ்ட் ரோல்ன்னு நடிக்க சொன்னாங்க. அப்படியே நடிப்பில் டிராவல் ஆகிட்டு இருக்கிறேன்.
* கைவசம் உள்ள படங்கள்...'இப்படை வெல்லும்' படத்தில் உதயநிதியை 'சைட்' அடிக்கும் கேரக்டரில் நடித்துள்ளேன். 'விசிறி' படத்தில் நாயகியின் தோழியாகவும், 'பாளையங்கோட்டை பாலா' படத்தில் நாயகியாக மாறியுள்ளேன்.
* பொழுதுபோக்கு..பிடித்த பாடல்களை முணுமுணுப்பது, கவிதை எழுதுவது, ஆல்பம் பாடல்களுக்கு பாடல் வரிகள் எழுதுவது என பல திறமைகள் இருக்கு.
* பிடித்த இயக்குனர்...ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் பிடிக்கும். பாலா படத்தில் நடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். ஏனென்றால் எவ்வளவு அழகாக இருக்கிறோம் என பார்க்க மாட்டார். திறமைகளுக்கே முன்னுரிமை அளிப்பார்.
* பிடித்த நடிகை..ஜெனிலியா, நஸ்ரியா. இருவருமே துறுதுறுவென இருப்பார்கள்.
* கவர்ந்த பெண்மணி...அம்மா தான். அப்பா இல்லாமல் என்னை வளர்த்து ஆளாக்கியவர்.
* யாருடன் நடிக்க ஆசை..எனது முதல் படமே அந்த ஆசையை நிறைவேற்றி விட்டது. விஜய் தான் என் கனவு நாயகன். 'பைரவா' படப்பிடிப்பு தளத்தில் அவருடன் நடித்த நாட்களே என் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள். அவருடன் நாயகியாக நடிக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
* நடிக்க வரவில்லை என்றால்... அடிப்படையில் நான் விளையாட்டு வீராங்கனை. 'டிரிபிள் ஜம்' போட்டியில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளேன். கராத்தேயில் 'கிரீன் பெல்ட்' வாங்கியுள்ளேன். கண்டிப்பாக அரசு வேலைக்கான முயற்சியில் ஈடுபட்டு இருப்பேன்.
* நீண்ட நாள் ஆசை..ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடவேண்டும்.இவரை வாழ்த்த, hemagenelia@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X