பதிவு செய்த நாள் :
கம்யூ., ஆட்சியில் பெருகும் வன்முறை:
கேரளாவில் அமைச்சர் அருண்ஜெட்லி அவேசம்

திருவனந்தபுரம்:''கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான, இடது ஜன நாயக முன்னணி ஆட்சிக்கு வரும் போதெல் லாம், வன்முறை தலைவிரித்தாடுகிறது,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி குற்றம்சாட்டினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி, Marxist Communist rule,வன்முறை, violence, கேரளா, Kerala,அமைச்சர் அருண்ஜெட்லி ,Minister ArunJetley, திருவனந்தபுரம், Trivandrum,கம்யூனிஸ்ட், Communist, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி,Union Finance Minister Arun Jaitley, முதல்வர் பினராயி விஜயன், Chief Minister Pinarayi Vijayan,ஆர்.எஸ்.எஸ்.,RSS,  பா.ஜ.,BJP,   ராஜேஷ்,Rajesh, படுகொலை,  massacre

கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், பினராயி ஆட்சி அமைந்த பின், ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., தொண் டர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. சமீபத்தில், திருவனந்தபுரம் அருகே, ஆர்.எஸ். எஸ்., தொண்டர், ராஜேஷ், 34, படுகொலை செய்யப்பட்டார்.

ஆளும் கட்சியான, மார்க்சிஸ்ட்டை சேர்ந்த தொண்டர்கள்தான், இதற்கு காரணம் என,

ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வினர், குற்றம் சாட்டினர். இந்நிலையில், கேரளாவுக்கு நேற்று, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி வந்தார்.

ஆறுதல்:


திருவனந்தபுரம் அருகேயுள்ள ராஜேஷின் வீட்டுக்கு சென்று, அவரதுகுடும்பத்தினரை சந்தித்து, ஜெட்லி, ஆறுதல் கூறினார்; மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின ரால் தாக்கப்பட்ட, பா.ஜ., தொண்டர்களின் வீடுகளுக் கும் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

பின், நிருபர்களிடம் அருண் ஜெட்லி கூறுகையில், ''கேரளாவில்,இடது ஜனநாயக முன்னணி, ஆட்சிக்கு வரும்போதெல் லாம், வன்முறை தலைவிரித்தாடு கிறது. விரோதி கள் கூட, இப்படிப்பட்ட காட்டு மிரா ண்டித் தனமான செயல்களில், ஈடுபட மாட்டார்கள்.
''மாற்று கட்சியினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவது, கம்யூனிஸ்டுகளின் பிறவி குணம். கொலை வெறி தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது, மாநில அரசின் கடமை,'' என்றார்.

மார்க்சிஸ்ட் போராட்டம்


இதற்கிடையில், கொலை விவகாரத்தில், பா.ஜ., வினர், தங்கள் மீது, வீண்பழி சுமத்துவதாக கூறி,

Advertisement

நேற்று, கேரளாவின் பல்வேறு பகுதிகளில், மார்க்சிஸ்ட் கட்சியினர், போராட்டம் நடத்தி னர்.'ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வினர் நடத் திய தாக்குதல்களால் கொல்லப்பட்ட, மார்க் சிஸ்ட் தொண்டர்கள் வீட்டுக்கும், ஜெட்லி சென்று, ஆறுதல் தெரிவிக்க வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தினர்.

மார்க்சிஸ்ட் மாநில செயலர், கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், ''கேரளாவுக்கு, சமீபத்தில், பா.ஜ., தலைவர், அமித் ஷா வந்தார். அதன் பின்பே, மாநிலத்தில் வன்முறை அதிக ரித்து உள்ளது. வன்முறையை துாண்டி, மக்க ளிடம் பிளவு ஏற்படுத்த, பா.ஜ., முயற்சிக்கிறது,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
07-ஆக-201722:19:25 IST Report Abuse

Vetri Velஅந்த ராஜேஷ் 34, என்பவர்... நண்பரின் சகோதரியுடன் தவறாக உறவு நடந்த காரணத்தால் நண்பரால் பழி வாங்கப்பட்டார் னு செய்தி வருதே... சேட்டலி அவர்களே... தங்களின் நண்பராக இருந்திருந்தால்... கூட்டி கொடுத்து வேடிக்கை பார்ப்பீரோ... தனக்கு ஒரு நியாயம்.. அடுத்தவனுக்கு ஒரு நியாயமோ....? கேள்வி கேட்டால் தேச துரோகி என்பான் ... பொறுப்பற்ற புற வாசல் நாற வாயன்..

Rate this:
Mohamed Ibrahim - Chennai ,இந்தியா
07-ஆக-201719:28:26 IST Report Abuse

Mohamed Ibrahim வன்முறையை பற்றி பேசகூட அருகதை இல்லாத கூட்டத்திலிருந்து கொண்டு எப்படி இந்தமாதிரி பேச உங்க பரிவார்களால் மட்டும் தான் முடியும்... வன்முறையால் ஆட்சியை பிடித்தவர்களாச்சே... ஆனால் உங்கள் பருப்பு இங்கே வேகாது...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
07-ஆக-201716:35:20 IST Report Abuse

Endrum Indianஎப்போ ஒரு இந்தியன் சீனாவின் பேச்சையும், பாகிஸ்தான் பேச்சையும் பிரதானமாக கருத ஆரம்பித்து விட்டானோ அங்கு தலை தூக்குவது கொலை, கொள்ளை தான். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த கம்யூனிஸ்டுகள், திரிணாமூல் காங்கிரஸ், முசுலிம் நேரு காங்கிரஸ், சமாஜ்வாதி, லல்லு பிரசாத் கட்சிகள் போன்றோர்.

Rate this:
மேலும் 80 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X