திருப்பூர் அரசியல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் அரசியல்

Added : ஆக 07, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

உண்ணாவிரத போராட்டம்

திருப்பூர் மாநகராட்சி, 12 வது வார்டில் அடிப்படை வசதிகோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். கிளை தலைவர் அஜீத்குமார், தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் ஆனந்தன், துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர் நந்தகோபால், வடக்கு மாநகர செயலாளர் ஜீவானந்தம், பொருளாளர் கனகராஜ், உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தில், வார்டில் உள்ள மூன்று ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இன்றி செயல்படாமல் உள்ளது. கிணற்றை ஆழப்படுத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பள்ளி வாசல் பின் புறம் பகுதியில் ரோடு போடப்படாமல் மக்கள் அவதிபட்டு வருகின்றனர். ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும், உள்பட பல கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

பா.ஜ., விவசாய அணி கூட்டம்

திருப்பூர் மாவட்ட பா.ஜ., விவசாய அணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. பொது செயலாளர் முத்து கருப்புசாமி, செயலாளர் மாரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதில், பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தே.மு.தி.க., நிர்வாகிகள்

திருப்பூர் வடக்கு தே.மு.தி.க., மாவட்ட புதிய நிர்வாகிகள் குறித்து, மாவட்ட செயலாளர் குழந்தைவேல் அறிக்கை : ஒன்றிய செயலாளர்களாக பழனிசாமி (அவிநாசி), ராம்குமார் (திருப்பூர்), சண்முகம் (ஊத்துக்குளி), சதீஷ்குமார் (காங்கயம்), மணி (வெள்ளகோவில்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நகர செயலாளர்களாக சண்முகசுந்தரம் (காங்கயம்), கந்த சரவணகுமார் (வெள்ளகோவில்), செல்லத்துரை (திருமுருகன் பூண்டி), அண்ணாதுரை (அவிநாசி), ஜெய்சங்கர் (குன்னத்தூர்), பொன்னுசாமி ( ஊத்துக்குளி), பாலகிருஷ்ணன் (முத்தூர்), கண்ணன் (15 வேலம்பாளையம்), செல்வகுமார் (நெருப்பெரிச்சல்), வீரமணி (தொட்டிபாளையம்), துரை (நல்லூர்) மத்திய பகுதி கழக செயலாளராக ஷாஜகான், முருகம்பாளையம் செயலாள ராக காளியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மாவட்ட செயற்குழு

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., செயற்குழு கூட்டம், கருவம்பாளையம் ராஜகணபதி கோவில் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். கோட்ட இணை பொறுப்பாளர் மணி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் வரவேற்றார்.விவசாய குடும்பத்தில் பிறந்து, 30 ஆண்டுகளாக சமூகப்பணி யாற்றிய ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதியாக பொறுப்பேற்றதுக்கு பாராட்டு தெரி வித்தல், டி.எம்.எப்., மருத்துவமனை அருகில் அமைக்கப்பட்டுள்ள பாலம், திறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், ஒரே மழையில் சேதமடைந்துள்ளது. உடனடியாக ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

சமையல் "காஸ்' மானியம் ரத்து முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, பல்லடத்தில் மா. கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொசவம்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் முத்துகண்ணன், ஒன்றிய செயலாளர் பரமசிவம் முன்னிலை வகித்தனர்.
இதில், "சமையல் "காஸ்' சிலிண்டருக்கான மானியத்தை ரத்து செய்யக்கூடாது; ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை தளர்க்க வேண்டும்,' என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மா.கம்யூ., கட்சின் பல்லடம் ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். * இதேபோல், மா.கம்யூ., சார்பில், பொங்கலூர் ஒன்றிய அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. மா.கம்யூ., மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பவித்ரா தேவி தலைமை வகித்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X