பதிவு செய்த நாள் :
கேள்விக்குறி!
சோனியா விசுவாசி அஹமது படேலின் வெற்றி  
குஜராத்தில் இன்று நடக்கிறது ராஜ்யசபா தேர்தல்

ஆமதாபாத்: பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புக்கு இடையே, குஜராத்தில், மூன்று ராஜ்யசபா, எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், இன்று நடக்கிறது. சோனியாவின் விசுவாசியும், அவரது அரசியல் ஆலோசகருமான, அஹமது படேலின் வெற்றியை பறிப்பதற்கு, பா.ஜ., தீவிரம் காட்டுவதால், காங்கிரஸ் கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.

அஹமது படேல்,வெற்றி,கேள்விக்குறி

குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இம்மாநில சட்டசபை, 182 எம்.எல்.ஏ.,க்கள் உடையது. ஆளும், பா.ஜ.,வுக்கு, 121 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான, காங்.,கிற்கு, 57 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர்; இதில், ஆறு பேர், சமீபத்தில், கட்சியை விட்டு விலகினர். இவர்களில் மூன்று பேர், பா.ஜ.,வில் சேர்ந்துள்ளனர்.

இருவர் வெற்றி உறுதிஇம்மாநிலத்தில், காலியாகும் மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த இடங்களுக்கு, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா, மத்திய ஜவுளித்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி,

காங்.,கில் இருந்து சமீபத்தில் விலகி, பா.ஜ.,வில் சேர்ந்த, பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோர், பா.ஜ., சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது இடத்தை கைப்பற்றும் நோக்கில், காங்., கட்சி சார்பாக, அந்த கட்சி தலைவர் சோனியாவின்செயலர், அஹமது படேல் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், காங்.,கில் இருந்து, எம்.எல்.ஏ.,க்கள் விலகி வருவதால், ராஜ்யசபா தேர்தலில், மூன்றாம் இடத்தை கைப்பற்ற முடியாமல் போய்விடுமோ என்ற பயம், காங்., தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டது.

குறைந்தபட்சம், 46 எம்.எல்.ஏ.,க்கள்


இதையடுத்து, காங்., - எம்.எல்.ஏ.,க்களில், 44 பேர், அந்த கட்சியின் ஆட்சி நடக்கும், கர்நாடகா தலைநகர், பெங்களூரு அழைத்து செல்லப்பட்டு, சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று ராஜ்யசபா தேர்தல் நடப்பதை அடுத்து, பெங்களூரில் இருந்து, காங்., - எம்.எல்.ஏ.,க்கள், விமானம் மூலம், மீண்டும் குஜராத் அழைத்து வரப்பட்டு, ஆனந்த் மாவட்டத்தில் ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எம்.பி., தேர்தலில் வெற்றி பெற, காங்., வேட்பாளர், அஹமது படேலுக்கு,தேவை. பெங்களூரு அழைத்துச் செல்லப்படாத, காங்.,கைச் சேர்ந்த, ஏழு எம்.எல்.ஏ.,க்கள் யாருக்கு ஓட்டு போடுவர் எனகுறைந்தபட்சம், 46 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உறுதியாக தெரியவில்லை. அவர்கள், அணி மாறி ஓட்டு போட்டால், அஹமது படேல் வெற்றி கேள்விக்குறியாகும்.

Advertisement


'எம்.எல்.ஏ.,வின் தனிச்சொத்து ஓட்டு!'


காங்., கட்சியிலிருந்து, சமீபத்தில் விலகிய மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான, சங்கர்சிங் வகேலா, இன்று நடக்கும், ராஜ்யசபா, எம்.பி., பதவிக்கான தேர்தலில், யாருக்கு ஓட்டளிக்கப் போகிறார் என்பதை தெரிவிக்காமல், மவுனம் காத்து வருகிறார்.
இது தொடர்பாக, சங்கர்சிங் வகேலா, 77, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: காங்., தலைமையுடன், எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அதேசமயம், ராஜ்யசபா, எம்.பி., பதவிகளுக்கான தேர்தலில், பா.ஜ.,வுடன், எனக்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை.
தேர்தலில், ஓட்டளிக்கும் ஒவ்வொருவரும், அவரது ஓட்டுக்கு முழு சொந்தக்காரர்கள். ஓட்டு என்பது, எம்.எல்.ஏ.,வின் தனிப்பட்ட சொத்து. எனவே, யாருக்கு ஓட்டு போடப்போகிறேன் என்பதை யாருக்கும் சொல்லப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Hanifa - Tirunelveli,இந்தியா
08-ஆக-201718:53:48 IST Report Abuse

Mohamed Hanifaஇதில் கேள்வி குறி என்ன இருக்கிறது? இங்கும் பாஜாக வின் மோசடி வேலை நடந்திருக்கும் ஆகையால் காங்கிரஸ்க்கு வாய்ப்பு இல்லை

Rate this:
krishna - chennai,இந்தியா
08-ஆக-201713:29:27 IST Report Abuse

krishnaதங்கை ராஜா என்பது உனது உண்மை பெயரா அல்லது நீ மூர்க்க மார்கத்தை சேர்ந்த தேச dhrohiya

Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
08-ஆக-201716:15:16 IST Report Abuse

Vaduvooraan அவர் திராவிட இயக்க கருத்துக்களில் ஊறியவர். என்ன, எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றுதானே? ...

Rate this:
Arasu - Madurai,இந்தியா
08-ஆக-201716:34:53 IST Report Abuse

Arasuநீ இந்தியனா , இல்லை சங்கியா ...

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
08-ஆக-201713:19:41 IST Report Abuse

Karuthukirukkanஇப்பிடியே அடிச்சு அடிச்சு காங்கிரஸ் மேல மக்களுக்கு பரிதாப உணர்வையும் , முன்னர் காங்கிரஸ் மீது இருந்த சர்வாதிகார பிம்பத்தை தன் மீதும் உருவாக்கி கொண்டு இருக்குது பிஜேபி .. சிறப்பு ..

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X