அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மற்ற அணி எம்.எல்.ஏ.,க்களுடன்
முதல்வரின் தூதுக்குழு சமரச பேச்சு

'தி.மு.க., நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தால், பன்னீர்செல்வம், தினகரன் அணி, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரிக்கக் கூடாது' என, அவர்களிடம், முதல்வர் பழனிசாமி தரப்பில், நான்கு துாதர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

எம்.எல்.ஏ.,MLA, முதல்வர், CM, Chief Minister, தி.மு.க.,DMK, நம்பிக்கை இல்லா தீர்மானம், lack of confidence, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்,DMK Executive chief Stalin,  பன்னீர் அணி, Panneer team,அ.தி.மு.க., ADMK, தினகரன் அணி, Dinakaran team,  சதி, conspiracy,


சட்டசபையில், ஆக., 20க்கு பின், முதல்வர் பழனிசாமி அரசு மீது, பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரபூர்வமாக சுமத்தி, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து, ஆட்சியை கவிழ்க்கும் வியூகத்தை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வகுத்துள்ளார்.
அவரது திட்டத்தை முறிடிக்க, முதல்வர் பழனிசாமி தரப்பு, தீவிர மாக ஈடுபட்டுள்ளது. இதற்காக, நான்கு பேர் துாதுக் குழுவை, முதல்வர் பழனிசாமி அமைத்துள்ளார்.

இணையும்இதில், அரசின் உயர் அதிகாரி ஒருவர்; முதல்வர் பழனிசாமி குடும்ப உறுப்பினர் ஒருவர்; முன்னாள், எம்.எல்.ஏ., ஒருவர்; அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் ஒருவரும், இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், நேற்று, பன்னீர் அணியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்கள் சிலரிடம் நேரில் சந்தித்துள்ளனர்;
சிலரை, மொபைல் போனிலும் பேசியுள்ளனர்.'முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக, தி.மு.க.,

கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம்; உங்களின் தொகுதிக்கு தேவையான அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும். அதில், எந்த ஒரு குறையும் இருக்காது. விரைவில் இரு அணிகளும் இணையும்' என, கூறியுள்ளனர்.அதற்கு, பன்னீர் அணி, எம்.எல்.ஏ.,க்கள், 'கட்சியின் பொதுச்செயலர் பொறுப்பை பன்னீர்செல்வத்திற்கு அளிக்கவேண்டும்; நாங்கள், எக்காரணத்தை கொண்டும், தி.மு.க.,வின்
சதி திட்டமான ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தர மாட்டோம்' என, கூறியுள்ளனர்.

நிராகரிப்புஅதேபோல், தினகரன் அணி, எம்.எல்.ஏ.,க்களிடம், 'ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட வேண்டாம்' என, வேண்டுகோள் விடுத்துள்ளனர். தினகரன் கட்சி பதவி வழங்கிய, எம்.எல்.ஏ.,க்களில் சிலர்
நிராகரித்துள்ளனர்; பலர் ஏற்றுள்ளனர். அவர்களிடமும், இந்த துாதுக்குழு பேச்சு நடத்தி உள்ளது.அப்போது, சில, எம்.எல்.ஏ.,க்கள், 'நாங்கள் அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம். அரசை கவிழ்க்கும் எண்ணமும் இல்லை. தி.மு.க.,வின் முயற்சிக்கு ஒத்துழைக்க மாட்டோம். நாங்கள் தினகரன் பக்கம் இருந்தாலும், உங்களுக்கு எதிரி அல்ல'
என, உறுதி அளித்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


எம்.எல்.ஏ.,க்கள் திடீர் பல்டி


தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த,எம்.எல்.ஏ.,க் கள், ஒரே நாளில் பல்டி அடித்தது, பழனிசாமி அணியினரிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கட்சி பணியில் இருந்து, 60 நாட்கள் ஒதுங்கி இருந்த தினகரன், மீண்டும் கட்சியை தன்

Advertisement


வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பழனிசாமி எதிர்ப்பையும் மீறி, கட்சி தன் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை நிரூபிக்க, தினகரன் புதிதாக, 60 நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்; இதில், 20 எம்.எல்.ஏ.,க்களின் பெயர்கள் இடம்
பெற்றுள்ளன.உடனே, பண்ருட்டி, எம்.எல்.ஏ., சத்யா, திருப்பரங்குன்றம், எம்.எல்.ஏ., போஸ்; ஸ்ரீபெரும்புதுார், எம்.எல்.ஏ., பழனி, பெரியகுளம், எம்.எல்.ஏ., கதிர்காமு ஆகியோர், 'தினகரன் வழங்கிய பதவி, எங்களுக்கு வேண்டாம்; ஜெ., கொடுத்த பதவியே போதும்' என, அறிவித்தனர்.
இதனால், மற்றவர்களும் தங்களுக்குப் பதவி வேண்டாம் எனக்கூறி, பழனிசாமி அணிக்கு செல்ல வாய்ப்பு அதிகம் என்பதை உணர்ந்த, தினகரன் ஆதரவாளர்கள், 'பதவி வேண்டாம்' எனக் கூறிய, எம்.எல்.ஏ.,க்களிடம் பேசினர். இதன் தொடர்ச்சியாக, தனக்கு வழங்கப்பட்ட பதவியை ஏற்பதாக, எம்.எல்.ஏ., கதிர்காமு தெரிவித்துள்ளார்; எம்.எல்.ஏ., போசும், மனம் மாறி, தினகரனை சந்திக்கப் போவதாகக் கூறி உள்ளார்.இது, பழனிசாமி அணியினருக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும், தினகரன் பக்கம் உள்ள மற்ற, எம்.எல்.ஏ.,க்களை, இழுக்கும் பணியை, பழனிசாமி அணி தீவிரப்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
magesh - gudalur,இந்தியா
08-ஆக-201717:03:52 IST Report Abuse

mageshசமரசம் பேசியே காலத்தை ஓட்டிட்டு மக்களை நடு தெருவில் விட்டுடுங்க தமிழ்நாட்டுக்கு பிடிச்ச 5 வருஷ சனி நீங்கள்

Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
08-ஆக-201714:33:24 IST Report Abuse

தமிழர்நீதி முன்பெல்லாம் மணல் வித்த பணம், மலை உடைத்த பணம், இடம்மாறுதற்க்கு கொடுத்த பணம், கம்பனி அமைக்க அனுபதிக்கு கொடுத்த பணம், காவல் நிலையத்தில் கட்ட பஞ்சயாத்து,கஞ்சா விற்றதின் மூலம் கிடைத்த வருமானம் , திருட்டு VCD பணம், ஓட்டை சாலை போட்டு அமுக்கிய பணம், திட்டம் என்று காகிதத்தில் 110 ல சொல்லிப்புட்டு ஆட்டய போட்ட துட்டு எல்லாம் டைரக்ட் ஜெயா சசி வசம் போனது .இப்போது எடப்பாடி இந்த வருமானம் எல்லாம்வைக்க இடமில்லாமல் MLA களுக்கும், பிஜேபி க்கும், வட்டம் மாவட்டம் என்று பகிர்ந்து கொடுப்பதால், மக்கள் புறக்கணித்தாலும் பிஜேபி யும், AIADMK வுல உள்ள கூவத்தூர் கூட்டமும் எடப்பாடிவாசம்தான் சேற்று சேரும் நிலை. இன்னும் இவர்கள் தொடர்ந்தால் அவர்கள் கூவுவதுபோல அம்மா ஆட்சிதான் குத்திக்கிட்டு இருக்கும் . கடனை வாங்கி சில பல AIADMK வுல ஆட்டு முழி முழிக்கும் MLA களை வாங்கி ஆட்சி மற்றம் செய்தால்தான் தமிழகம் தப்பிக்கும் .அப்படி எதுவும் நடக்காவிட்டால் அம்மா ஆட்சியின் அவலம் பிஜேபி ஆசியுடன் தொடரும் .

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-ஆக-201712:58:02 IST Report Abuse

Malick Rajaஇவிங்களை வீட்டுக்கு அனுப்பாத வரை தமிழகத்துக்கு விடிவுகாலம் இருக்காது

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X