பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பாடத்திட்டம் தயாரிப்பில் புதுமை
'முதல்வன்' பட ஸ்டைலில் பெட்டி

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறித்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கருத்து கேட்க, 'முதல்வன்' பட ஸ்டைலில், கருத்து அறியும் பெட்டி, பள்ளிகளில் வைக்கப்பட உள்ளது.

முதல்வன், தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் ,   Tamilnadu School Education Syllabus , மாணவர்கள் ,Students, ஆசிரியர்கள், Teachers,பள்ளிக் கல்வி அமைச்சர்,School Education minister, செங்கோட்டையன், Chengottaian, சென்னை,  Chennai, அண்ணா பல்கலை,  Anna University, , ஐ.ஐ.டி., IIT,  பள்ளிக் கல்வி இயக்ககம்,Directorate of School Education, மதுரை, Madurai, கோவை, Coimbatore,கே.அறிவொளி, K arivoli

தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 14 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை.
கல்வியாளர்களும், ஆசிரியர்களும், பாடத்திட்டத்தை மாற்ற, அரசை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன், செயலராக உதயசந்திரன் மற்றும் இயக்குனராக இளங்கோவன் பதவியேற்றதும், பள்ளிக் கல்வியில் அதிரடி மாற்றங்கள் துவங்கின.

கருத்துக் கேட்பு கூட்டம்


இதன்படி, 'ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பாடத் திட்டம் மாற்றப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக,

சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
அண்ணா பல்கலை, ஐ.ஐ.டி., மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககத்தில், நிபுணர்களிடம்கருத்துகள் பெறப்பட்டன. தொடர்ந்து, நாளை மதுரையிலும், ஆக.,11ல், கோவை; 22ல், சென்னை; 25ல், தஞ்சாவூரில், கருத்துக் கேட்பு கூட்டம் நடக்க உள்ளது.
இதைத் தவிர, 'முதல்வன்' திரைப்படத்தில், பொதுமக்களின் கருத்துகளை கேட்க, ஆங்காங்கே புகார் பெட்டி வைப்பது போன்று, தற்போது, பள்ளிகளில், கருத்து அறியும் பெட்டிகள் வைக்கப்பட உள்ளன.


கருத்தறியும் பெட்டிஇதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரும், பாடத்திட்ட குழு ஒருங்கிணைப்பாளருமான, கே.அறிவொளிகூறியதாவது:பாடத்திட்ட தயாரிப்பில், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிற்துறையினரிடம் கருத்து கேட்கப்படுகிறது.
மாணவர்கள், பள்ளி ஆசிரியர்களின் கருத்துகளை கேட்க, இன்று முதல், 11ம் தேதி

Advertisement

வரை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கருத்தறியும் பெட்டி வைக்கப்படும். ஆசிரியர்களும், மாணவர்களும், பாடத்திட்டம் தொடர்பாக, தங்களின் கருத்துகளை எழுதி, பெட்டியில் போடலாம்.

பெயர்களை குறிப்பிட விரும்பாவிட்டால், பாடத்திட்ட கருத்துகளை மட்டும் தெரிவிக்கலாம். அவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொகுத்து, முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு அனுப்பலாம்.
மாவட்டம் முழுவதும் சேர்த்த விபரங்கள், வரும் 18ம் தேதிக்குள், மாவட்டங் களிலிருந்து பெறப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
08-ஆக-201717:45:37 IST Report Abuse

Endrum Indianமுதலில் செய்ய வேண்டியது 5 ஆவது பெயில் ஆனவன் கல்வி மந்திரியாக வரக்கூடாது, 2 ) ஒரு குழு அமைக்கவேண்டும் (நன்கு படித்து நாட்டுக்கு நல்லது செய்தவர்கள்) அவர்கள் சொல்வதை எதையும் நீக்கம் செய்யாமல் அப்படியே அதை பின் பற்றவேண்டும். அது போதும் எல்லாம் ஒரே நேர்கோட்டில் பயணிக்க ஆரம்பித்து விடும்.

Rate this:
Sengottaian.K - Doha,கத்தார்
08-ஆக-201719:48:27 IST Report Abuse

Sengottaian.Kஇதற்கு முன் இருந்தவர்கள் எல்லாம் படித்தவர்களே .இருந்தும் செய்யவேண்டும் என்ற மனம் இல்லாததால் செய்யவில்லை.நன்கு செய்யும் அதிகாரிகளை ஊக்குவித்து சுதந்திரமாக செய்ய விட்டாலே போதும். இப்பொழுதும் குழு அமைத்துள்ளார்கள் .அதனால்தான் இவ்வளவும். நல்ல முறையில் கல்வி அமைய கருத்து சொல்லுங்க. ...

Rate this:
sankar - trichy,இந்தியா
08-ஆக-201720:53:36 IST Report Abuse

sankarதலைமை எல்லாம் படிக்காம இருந்தா அதிகாரியும் அவன் வழில தான் செல்வான் . தலை சரி பண்ணினா வாழும் ஒழுங்கா இருக்கும் ...

Rate this:
rsudarsan lic - mumbai,இந்தியா
08-ஆக-201715:11:17 IST Report Abuse

rsudarsan licஎல்லா தமிழர்களும் பங்கு பெற வசதி செய்து தர வேண்டும். வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர் அனைவரும் பங்கேற்க வேண்டும்

Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
08-ஆக-201711:33:37 IST Report Abuse

Nallavan Nallavanநானும் சில ஆலோசனைகளை எழுதி அனுப்ப உள்ளேன் .....

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X