‛சட்டப்படி எதிர்கொள்வோம்': குஜராத் முதல்வர் விஜய் ரூபானி| Dinamalar

‛சட்டப்படி எதிர்கொள்வோம்': குஜராத் முதல்வர் விஜய் ரூபானி

Added : ஆக 09, 2017 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 குஜராத், Gujarat, முதல்வர், Chief Minister, விஜய் ரூபானி,Vijay Rupani, காந்திநகர்,Gandhinagar, தேர்தல் ஆணையம் ,Election Commission, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி , Gujarat Chief Minister Vijay Rupani, ராஜ்யசபா தேர்தல்,Rajya Sabha Election, பா.ஜ.,BJP, அமித்ஷா, Amit Shah,ஸ்மிரிதி இரானி, Smriti rani, அகமது படேல், Ahmed Patel, காங்கிரஸ், Congress,

காந்திநகர்: ‛தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது; இதனை சட்டப்படி எதிர்கொள்வோம்' என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்தார்.

குஜராத்தில் விஜய் ரூபானி தலைமையிலான பா.,ஜ., ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு நடைபெற்ற 3 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.,வின் அமித்ஷா, ஸ்மிரிதி இரானி மற்றும் காங்கிரசின் அகமது படேல் வெற்றி பெற்றனர். முன்னதாக காங்., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இருவர் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தனர். இதனையடுத்து இரு ஓட்டுகளை செல்லாததாக அறிவிக்கக்கோரி காங்., தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்தது.

இதனையடுத்து நீண்ட பரிசீலனைக்கு பின்னர் இரு ஓட்டுகளும் செல்லாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து நள்ளிரவுக்கு பின் ஓட்டு எண்ணும் நடைபெற்று பா.ஜ.,வின் அமித்ஷா, ஸ்மிரிதி இரானி மற்றும் காங்கிரசின் அகமது படேல் வெற்றி பெற்றதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், வரும் நாட்களில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சட்டப்படி போராடுவோம் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-ஆக-201713:06:57 IST Report Abuse
Pasupathi Subbian சரி சரி அதான் வெற்றிபெற்று ஆகிவிட்டதே இனி என்ன குழப்பம் . மற்ற வேலையை பார்க்கவேண்டியதுதான்.
Rate this:
Share this comment
Cancel
Veeran - Kanyakumari,இந்தியா
09-ஆக-201712:42:32 IST Report Abuse
Veeran பிஜேபி ஒன்னு நினச்சு பார்க்குறது நல்லது 15 கோடி குடுத்து MLA வை விலைக்கு வாங்கலாம் ஆனால் மக்களுக்கு எதாவது நல்லது செய்து தான் மனதில் ஏற முடியும் எல்லாரையும் எப்போதும் ஏமாத்த முடியாது
Rate this:
Share this comment
Cancel
பொன் வண்ணன் - chennai,இந்தியா
09-ஆக-201711:42:35 IST Report Abuse
பொன் வண்ணன் பிஜேபியி,ல்இல் 150 க்கும் மேற்பட்ட MP க்கள் காங்கிரஸில் இருந்தவர்கள். உத்தரகாண்டில் 6 அமைச்சர்கள் காங்கிரஸில் இருந்தவர்கள். கோவாவிலும் மணிப்பூரிலும் என்ன நடந்தது என்று மக்களுக்கு தெரியும்..ஒரு அரசாங்கத்தையே விலை கொடுத்து வாங்கியவர்கள் தான் பிஜேபியினர்.. ஜனநாயகத்திற்கு பணத்தாலும் அதிகார மமதையாலும் புதிய பரிணாமம் தந்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள்...2019 இல் இவர்களுக்கு பேரிடி காத்திருக்கிறது..
Rate this:
Share this comment
இந்தியன் kumar - chennai,இந்தியா
09-ஆக-201715:21:15 IST Report Abuse
இந்தியன் kumarஎதிர்த்து நிக்க ஆளே இல்லியேய்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X