லோக்சபாவில் தமிழில் பேசிய தம்பிதுரைக்கு எதிர்ப்பு

Updated : ஆக 10, 2017 | Added : ஆக 09, 2017 | கருத்துகள் (46)
Share
Advertisement
தம்பிதுரை, Thambidurai, வெள்ளையனே வெளியேறு இயக்கம்,Quit India Movement, லோக்சபா, Lok Sabha, புதுடில்லி,New Delhi,  துணை சபாநாயகர் தம்பிதுரை, Deputy Speaker Thambidurai, தமிழர்கள் ,Tamilans, பார்லிமென்ட், Parliament,இந்தி, Hindi,  ஆங்கிலம் , English,சோனியா, Sonia

புதுடில்லி: நாட்டின் அனைத்து மொழிகளை யும், தேசிய மொழிகளாகவும், அலுவல் மொழிகளாகவும் அங்கீகரிக்கும்படி, லோக்சபாவில் நேற்று, அ.தி.மு.க., மூத்த தலைவரும், லோக் சபா துணை சபாநாயகருமான, தம்பிதுரை வலியுறுத்தினார்.
லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தில் பங்கேற்ற, துணை சபாநாயகர், தம்பிதுரை பேசியதாவது: நாடு, சுதந்திரம் பெற, அனைத்து மொழிகளைச் சேர்ந்த மக்களும் போராடியுள் ளனர். குறிப்பிட்ட ஒரு மொழிக்கு மட்டும் முன்னுரிமை தருவதற்கு பதில், அனைத்து மொழிகளையும் சமமாக நடத்துவது, பார்லிமென் டின் கடமை.
நாட்டின் அனைத்து மொழிகளையும், பிராந்திய மொழிகளாக மட்டும் அங்கீகரிக்காமல், தேசிய மொழிகளாக அங்கீகரிக்கவேண்டும்.தமிழ், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட அனைத்து மொழி களுக்கும், அலுவல் அந்தஸ்து கிடைக்கும் வகை யில் அங்கீகாரம் அளிக்க, நாம் உறுதிமொழி ஏற்க வேண்டும்.
லோக்சபாவில் பேசுகையில், தமிழ் உள்ளிட்ட, மாநில மொழிகளின் மொழிபெயர்ப்பை கேட்க முடிவதில்லை. இதனால், ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் பேச வேண்டிய நிலை ஏற்படுகிறது. மறைந்த தலைவரும், தமிழக முதல்வருமான, எம்.ஜி.ஆர்., சிறந்தகாந்தியவாதியாக திகழ்ந்தார்; அவர் தாயாருக்கு, கைத்தறி ஆடை அணிவதில் விருப்பம் கிடையாது.
கைத்தறி உடை அணிய அனுமதிக்காவிட்டால், திரு மணம் செய்ய மாட்டேன் என, தன் அன்னையிடம், எம்.ஜி.ஆர்., நிபந்தனை விதித்தார். அதனால், கைத்தறி ஆடை அணிய, எம்.ஜி.ஆருக்கு, அவரது தாயார், அனுமதி வழங்கினார். காங்., கட்சியுடன், திராவிட இயக்கத்திற்கு, மாறுபட்ட கருத்து இருந்திருக்கலாம். இருப்பினும், சுதந் திர இந்தியாவுக்காக, அவை இரண்டும் போராடி உள்ளன. இவ்வாறு அவர் பேசினார். லோக்சபாவில் நேற்று, தன் உரையை துவக்கிய தம்பிதுரை, தமிழில் பேசினார்; இதனால், சபையில் முணுமுணுப்பு எழுந்தது.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
10-ஆக-201711:21:06 IST Report Abuse
srisubram இங்க ஒரு அன்பர், கூறியிருந்தார் , வடக்கில் தமிழர் பெயரில் இடம் உள்ளதா என்று .. நான் இடத்தை தெரிவிக்கிறேன் , போபால் : மதிய பிரதேசம் , அண்ணா நகர் (கோவிந்தபுர & மகா ராணா பிரதாப் நகர் ) இண்டோர் : சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் மார்க் . மும்பை : மகாராஷ்டிரா பாரத் ரத்னா கர்மா வீரர் காமராஜ் மார்க் . ( செம்பூர் - திலக் நகர் அருகே ).
Rate this:
Cancel
srisubram - Chrompet,இந்தியா
09-ஆக-201721:26:33 IST Report Abuse
srisubram வடக்கில் எங்காவது ராஜாஜி ..பெரியார் ..அண்ணா பெயரில் வீதி ..பார்க் ..பாலம் ..ஸ்டேடியம் உள்ளதா? மதிப்பு இவ்வளவுதான் இங்கோ இந்திரா பாலம் ..நேரு ஸ்டேடியம் ..ராஜிவ் நகர் ...விரைவில் சோனியா பார்க் கூட வரும் ..கூனர்கள் எதுக்கும் தயார்...
Rate this:
Cancel
Thamizhan - Tamizhnadu,இந்தியா
09-ஆக-201720:18:12 IST Report Abuse
Thamizhan உலகில் எல்லாமே இனம் சார்ந்தே இருக்கும்பொழுது ஒற்றுமை தானாக வந்துவிடும் ,முஸ்லிம்கள்,சீனர்கள் யூதர்கள் இப்படி எல்லோருமே இனத்தின் பெயரிலேயே உள்ளனர் ,ஆனால் இந்தியாவில் மட்டும்தான் இனத்தை தாண்டி மதத்தின் பெயரில் ஒற்றுமை இருக்குமாறு மூளை சலவை செய்யப்படுகிறது ,ஆனால் இனத்தின் அடிப்படையில் மொழிப்போர் நடத்துகின்ற அவலத்தை புரிந்துக்கொள்ள மூளைத்திறனும் ,வரலாற்று உண்மைகளை உணரும் அறிவாற்றலும் அற்றவர்களாக தமிழர்களும் ,தென்னிந்தியர்களும் இருப்பதை என்னவென்று சொல்வது .வரலாற்று உண்மைகளை தெரியாமல் மதத்தின் பெயரில் மூடர்களாக இருக்காதீர்கள் மானமுள்ள தமிழர்களே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X