2019ல் அரசியலை துறந்து இருப்பேன்: வெங்கையா

Added : ஆக 09, 2017 | கருத்துகள் (15)
Advertisement
துணை ஜனாதிபதி, Vice President, வெங்கையா நாயுடு, Vengai Naidu, மத்திய அமைச்சர், Union Minister,அரசியல், Politician, துறப்பு, quit, ஐதராபாத்,  Hyderabad, பார்லிமென்ட்,Parliamentary,  தெலுங்கு பதிப்பு வெளியீட்டு விழா ,Telugu Edition,  அரசியல் வாழ்க்கை, Political Life, மோடி, Modi, வாஜ்பாய், Vajpayee, பா.ஜ தேசிய தலைவர் , BJP national president,

ஐதராபாத்: ''துணை ஜனாதிபதியாக ஆகாமல் இருந்து இருந்தால், 2019ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருப்பேன்,'' என, துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கையா நாயுடு கூறினார்.வெங்கையா நாயுடு பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும் பேசிய உரைகள் அடங்கிய புத்தகத்தின் தெலுங்கு பதிப்பு வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அதில் வெங்கையா நாயுடு பேசியதாவது:


சந்தர்ப்ப சூழ்நிலைகள்

துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதால், நான் வலுக்கட்டாயமாக அரசியல் வாழ்க்கையை துறக்க நேரிட்டது என பலரும் தவறாக பேசுகின்றனர். ஆனால், ' 2019ல் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின், நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்' என, என் மனைவியிடம் நான் எப்போதோ சொல்லி விட்டேன். அப்போது எனக்கு, 70 வயதாகி இருக்கும். எனவே, கொள்கை ரீதியாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது சரியாக இருந்து இருக்கும். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அரசியலில் இருந்து விலகி வந்து விட்டேன். துணை ஜனாதிபதியான பிறகு மக்களுடன் கலந்து பேச முடியாது. அப்பதவிக்குரிய சம்பிரதாயங்கள் அதை தடுக்கும். எனினும், அதை சிறை வாழ்க்கை என்று கூறி விட முடியாது. நான் ஏற்கனவே சிறை வாழ்க்கையை அனுபவித்தவன். நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையால் அது நேர்ந்தது. அதற்காக நன்றி கூறி கொள்கிறேன். துணை ஜனாதிபதியான பிறகு சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும், மக்களில் ஒருவராக இருக்க எப்படியும் ஒரு வழியை கண்டுபிடித்து விடுவேன். இனிமேல் நான் அரசியல் பேசக்கூாடது. ஆனால், நாடு மற்றும் மக்களுக்கு கவலை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து பேச முடியும்.


வாஜ்பாய் அரசில்...

நான் மத்திய அமைச்சர் பதவியை விரும்பினேன். எனவே, துணை ஜனாதிபதியாக விருப்பம் இல்லாமல் இருந்தேன் என்றெல்லாம் சிலர் கூறி வருகின்றனர். ஆனால், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பா.ஜ., தேசிய தலைவர் பொறுப்பை ஏற்க, நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன் என்பதை அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். நான் மீண்டும் மத்திய அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என வாஜ்பாய் கூறிய போது, அப்படி செய்தால் அது எனக்கு பதவியிறக்கமாகவே இருக்கும் என அவரிடம் தெரிவித்து இருந்தேன்.வாரிசு அரசியலை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எனது மகனும், மகளும் அரசியலில் நுழைய நான் ஒரு போதும் ஆதரவு தெரிவித்தது இல்லை. தத்தமது துறைகளில் கவனம் செலுத்துப்படியே அவர்களிடம் கூறினேன். நான் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் அரசியலில் நுழைய மாட்டார்கள். இவ்வாறு வெங்கையா பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran - Kongu seemai,இந்தியா
09-ஆக-201723:52:02 IST Report Abuse
Cheran பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்து சொல்ல சென்ற போது போ போ என்று பிடித்து தள்ளி அவமானப்படுத்திய வெங்காய நாயுடு தமிழனுக்கு எதிரானவர். இவரால் இதுவரைக்கும் தமிழ் நாட்டுக்கு நல்லது நடந்து இருக்கா? ஸ்மார்ட் சிட்டி என்ன ஆச்சு? AIIMS என்ன ஆச்சு? டுபாக்கூர்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
09-ஆக-201720:07:03 IST Report Abuse
K.Sugavanam இப்போதே ஓரம் கட்டி இல்ல இந்த பதவிக்கு அனுப்பிட்டாங்க.. இனி அரசியல் வாழ்க்கை கனவில்தான்.. நடுவில் இவர் ராஜினாமா செய்தால் தான் தொடர முடியும்..
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-ஆக-201710:28:30 IST Report Abuse
Nallavan Nallavanஓரம் கட்டப்பட்டதாக எப்படிச் சொல்கிறீர் ???? இவரே உடல்நலம் கருதி அப்பதவியை விரும்பிக் கேட்டிருக்கலாமே ???? மாநில அரசியலுக்குப் போகிறேன் என்றால் மறுக்கவா போகிறார்கள் ????...
Rate this:
Share this comment
Cancel
Indian - Chennai,இந்தியா
09-ஆக-201719:24:27 IST Report Abuse
Indian 94 வயதிலும் தமிழ் நாட்டுல இருக்குறவருக்கு பதவி ஆசை விடலை. பிஜேபி ல மட்டும் தான் வயசானால் ஓய்வு பெறுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X