கட்சி மாறி ஓட்டு போட்ட பா.ஜ., எம்.எல்.ஏ.,

Updated : ஆக 09, 2017 | Added : ஆக 09, 2017 | கருத்துகள் (61)
Advertisement
குஜராத்,Gujarat, ராஜ்யசபா தேர்தல், Rajya Sabha election,பா.ஜ., BJP, எம்.எல்.ஏ., MLA, ஓட்டு,Vote, ஆமதாபாத், Ahmedabad, பா.ஜ BJP, தேசிய தலைவர் அமித் ஷா,BJP National leader Amit Shah, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, Union Minister Smriti Irani, சோனியா, Sonia, அகமது பட்டேல்,Ahmed Patel, பெங்களூரு சொகுசு விடுதி,Bengaluru Luxury Hotel, பல்வந்த்சிங் ராஜ்புத் , Balwant Singh Rajput, பா.ஜ எம்.எல்.ஏ,BJP MLA, நளின் கோட்டாடியா, Nalin Codeadia,

ஆமதாபாத்: குஜராத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவர் கட்சி மாறி ஓட்டு போட்டது தற்போது தெரிய வந்துள்ளது.


நள்ளிரவு வரை பரபரப்பு

குஜராத்தில், மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், நேற்று நடந்தது. பா.ஜ., சார்பில் அதன் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்., சார்பில் அக்கட்சியின் தலைவர் சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள, 57 காங்., எம்.எல்.ஏ.,க்களில், 6 பேர் ராஜினாமா செய்தனர்; ஏழு பேர் பா.ஜ.,விற்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாக, அகமது பட்டேல் வெற்றி பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. எனவே, காங்., எம்.எல்.ஏ.,க்கள், 44 பேரை, 'கடத்தி' சென்று பெங்களூரு சொகுசு விடுதியில் தங்க வைத்தனர். அதே நேரத்தில் காங்.,கில் இருந்து விலகிய பல்வந்த்சிங் ராஜ்புத் என்பவரும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டார். நேற்று மாலை ஓட்டு எண்ணிக்கை துவங்கிய போது ஏற்பட்ட குழப்பம், நள்ளிரவு வரை நீடித்தது. இறுதியாக, 44 ஓட்டுக்கள் பெற்று அகமது பட்டேல் வெற்றி பெற்றார். காங்., எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறி ஓட்டு போடலாம் என்ற சூழ்நிலை இருந்த போது, பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவர் அதுபோல் செய்தது கட்சி மேலிடத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.


எம்.எல்.ஏ., சொல்வது என்ன

கட்சி மாறி ஓட்டு போட்ட பா.ஜ., எம்.எல்.ஏ., நளின் கோட்டாடியா செயலால் தான், அகமது பட்டேல் வெற்றி பெற்றுள்ளார். இத குறித்து எம்.எல்.ஏ., கோததியாவிடம் கேட்ட போது, ' குஜராத்தில், 2015ம் ஆண்டு நடந்த படேல் சமூகத்தினர் போராட்டத்தின் போது, 14 இளைஞர்கள் இறந்தனர். இது, எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது எனவே தான், பா.ஜ.,விற்கு எதிராக ஓட்டு போட்டேன்' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (61)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Mal - Madurai,இந்தியா
09-ஆக-201722:14:53 IST Report Abuse
Mal There is no happiness in fighting an unarmed Italian lady.... We will fight with her along with her trusted people
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
09-ஆக-201720:59:31 IST Report Abuse
anand பிஜேபி தலைகீழாக நின்னாலும் காங்கிரஸ் அளவுக்கு வர முடியாது..பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் காங்கிரெஸ்ஸார்..70 வருடங்களாக செய்த கேடித்தனங்களை மூன்று வருடங்களில் மறந்து இருப்பார்கள் என்று பிஜேபி நினைத்தது.. எத்தனை ஆட்சி கவிழ்ப்பு செய்தவர்கள் அவர்கள்..எத்தனை கட்சிகளை உடைத்தவர்கள்.. எத்தனை ஊழல்கள் செய்தும் அசராதவர்கள்..
Rate this:
Share this comment
09-ஆக-201723:28:42 IST Report Abuse
hjhgffcமூடிக்கிட்டு போ...
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
09-ஆக-201719:08:01 IST Report Abuse
ezhumalaiyaan அளவற்ற அதிகார பலம், வெகு ஜன மக்களை பொருட் படுத்தாமை எல்லாவற்றிற்கும், காங்கிரஸ் பெற்ற வெற்றி, BJP க்கு ஒரு செக் போய்ண்ட். வண்டிகளுக்கு பிரேக் அவசியம் தேவை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X