பேச்சு சுதந்திரத்திற்கு ஆபத்து: சோனியா பேச்சு

Added : ஆக 09, 2017 | கருத்துகள் (12)
Advertisement
சோனியா, பேச்சு சுதந்திரம், மதசார்பின்மை

புதுடில்லி: இந்தியாவில் பேச்சு சுதந்திரத்திற்கு ஆபத்து உள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளார்.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது தினத்தை முன்னிட்டு லோக்சபாவில் அவர் பேசியதாவது: குறுகிய மனப்பான்மை மற்றும் மதவாத சித்தாந்தம் என்ற சிறையில் இந்தியா இருக்க வேண்டும் என்ற கொள்கையை அனுமதிக்க முடியாது.இன்று மதசார்பிற்ற தன்மை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாம் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்கு அச்சுறுத்தலாக உள்ள சக்திகளை தோற்கடிக்க வேண்டும். மதவாத சக்திகள் வெற்றி பெறுவதை அனுமதிக்க முடியாது. அதனை ஏற்க முடியாது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை சிலர் மற்றும் அமைப்புகள் எதிர்த்தனர். அவர்களுக்கு நாட்டின் சுதந்திரத்திற்கு எந்தவித பங்கும் இல்லை. இவ்வாறு சோனியா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
09-ஆக-201720:33:55 IST Report Abuse
Rafi இந்த நாட்டிற்க்காக உயிர் நீத்த தியாக குடும்பத்தின் தலைவிக்கு, பேச்சு சுதந்திரம், மத நல்லிணக்கம் பறிபோகின்ற இன்றைய சூழ்நிலையில் அவர் கருத்து பார்லிமென்டில் பதிவிட்டுள்ளது வரவேற்க தக்கது.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
09-ஆக-201718:23:26 IST Report Abuse
தேச நேசன் பேச்சு சொதந்திரம்தானே  ? சொந்த சரக்கா பத்தே பத்து நிமிஷம் பேசிக்காமிங்க. அல்லது ஒரு (உங்க கட்சிக்காரங்க மூணாங்கிளாஸ் னு சொல்ற) ஜுனியர் ஸ்மிருதி ஈரானிக்கிட்ட அஞ்சே அஞ்சு நிமிஷம் விவாதம் பண்ணிக்காமிங்களேன்.அப்புறம் ஏண்டா சொதந்திரம் கேட்டோம்னு நீங்களே வருத்தப்படுவீங்க.பழையபடி லண்டன் பார்ல மிகஸிங் கட்டிங் வேலையே தேவலாம்னு ஓடிடுவீங்க. 
Rate this:
Share this comment
Madurai Raja - Madurai,இந்தியா
09-ஆக-201719:54:34 IST Report Abuse
Madurai Rajaஇந்தியாவில் நடக்குற அத்துணை மொள்ளமாரித்தனங்களுக்கும் பீ.ஜெ.பீ காரன் தான் காரணமா இருக்கான்....கொஞ்சம்...சுயநினைவோடு, மனசாட்சியோடு பேசுங்கப்பா.........
Rate this:
Share this comment
Cancel
Prakash JP - Chennai,இந்தியா
09-ஆக-201718:15:34 IST Report Abuse
Prakash JP இந்திய சுதந்திரப் போராட்டம் வேகம் கொண்ட பின்னர்தான் 1925ல் ஆர்.எஸ்.எஸ் துவங்கப்பட்டது. சைமன் கமிஷன் வருகையொட்டி வெடித்த போராட்டங்கள் பராளுமன்றத்தில் பகத்சிங்கும் அவர் தோழர்களும் வெடிகுண்டு வீச்சு உப்பு சத்தியாய்க் கிரகம் சட்ட மறுப்பு இயக்கம் சிட்டகாங் புரட்சி வெள்ளையனே வெளியேறு இயக்கம் பிரிட்டிட்ஷாரை எதிர்த்து சுபாஷ் சந்திர போஸின் போர் கப்பற்படை எழுச்சி என்று எழுந்து கொண்டே இருந்த போராட்டங்களில் எதை ஆர்.எஸ்.எஸ் அறிவித்தது? எந்த போராட்டங்களில் கலந்து கொண்டது? எந்த தலைவர்கள் சிறைக்குச் சென்றார்கள்? ’பாரத் மாதா கீ ஜெய்’ என்று அடி வயிற்றில் இருந்து கத்துவதைத் தவிர எதையும் கிழித்தது இல்லை. தேடிப் பார்த்தால், பிரிட்டிஷாரிடம், ‘நான் என்றும் உங்கள் விசுவாசியாக இருப்பேன்’ என மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியே வந்த சவார்க்கரும், தன் சொந்த கிராமத்தில் பிரிட்டிஷாரை எதிர்த்து போராடியவர்களை காட்டிக் கொடுத்த வாஜ்பாயும்தான் தென்படுகிறார்கள். இந்திய சுதந்திரம் குறித்தும் தேசபக்தி குறித்தும் வாயைத் திறப்பதற்கு இந்த துரோகக் கும்பலுக்கு ஒருநாளும் யோக்கியதை கிடையாது நன்றி.Mathavaraj
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X