எந்த சவாலையும் சந்திக்க ராணுவம் தயார்: ஜெட்லி

Updated : ஆக 10, 2017 | Added : ஆக 09, 2017 | கருத்துகள் (45)
Share
Advertisement
ராணுவம்,  Army, ஜெட்லி,Arun Jaitley, எல்லை,Border, பயங்கரவாதம், Terrorism,காஷ்மீர், Kashmir,புதுடில்லி, New Delhi,மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி , Federal Finance and Defense Minister Arun Jaitley,  ராஜ்யசபா, Rajya Sabha,இந்திய ராணுவம், Indian Army,  இறையாண்மை, Sovereignty, ஒற்றுமை,Unity,  சுதந்திரம், Freedom,

புதுடில்லி: ''எதிரிகளின் சவால்களை எதிர் கொள்ளும் வகையில், நம் ராணுவத்தின் பலம் அதிகரித்துள்ளது,''என, ராஜ்யசபாவில், ராணுவ அமைச்சர், அருண் ஜெட்லி பேசினார்.
ராஜ்யசபாவில் நேற்று நடந்த சிறப்பு விவாதத் தில், அவர் பேசியதாவது: நாட்டின் பாதுகாப்பில், எந்தவித சமரசமும் செய்ய முடியாது. 1962ல், சீனாவுடன் நடந்த போர், நமக்கு சிறந்த பாட மாக அமைந்தது. ராணுவ தேவையில்,நாடு தன்னிறைவு அடைய வேண்டும். ஆயுதங்களுக்காக, வேறெந்த நாட்டையும் நம்பியிருக்கும் சூழல் இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
எல்லையை காக்கும் வீரர்கள், நாட்டின் பாதுகாப்பிற் காக எந்தவித தியாகத்தையும் செய்ய தயார் நிலையில் உள்ளனர். எதிரிகளின் எந்தவகையான தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில், ராணுவ பலமும் அதிகரித்துள்ளது. எனவே, எந்த அச்சுறுத் தலுக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
தற்போது,பாகிஸ்தான் வசம் உள்ள, பாக்., ஆக்கிர மிப்பு காஷ்மீரை மீண்டும் நம் வசப் படுத்த வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த இந்தியர்களின் விருப்பமாக உள்ளது. மதம், அரசியல் என, எந்த வகையிலான பயங்கரவாதத்தையும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
10-ஆக-201710:19:45 IST Report Abuse
Mohamed Ilyas நேற்றைய செய்தி கடந்த 3 வருடங்களில் 350 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டனர் ? வீரத்தையே தினமும் பேசும் இடத்தில கோழை தனம் குடி கொண்டுள்ளது தங்கள் உயிரையே காத்து கொள்ள முடியாதவர்கள் அடுத்த நாடு படைகளை எப்படி எதிர்கொள்வார்கள் தங்கள் உணவுக்காக போராடி வேலை இழக்கும் சூழலில் தான் இன்றைய ராணுவத்தின் நிலை , என்றைக்கு ராணுவத்தில் அரசியல் புகுந்து விட்டதோ (வி கே சிங் ) அந்த ராணுவம் சரியான கட்டு கோப்பு என்பது கேள்வி குறி ?
Rate this:
Cancel
Karthi -  ( Posted via: Dinamalar Android App )
10-ஆக-201709:37:59 IST Report Abuse
Karthi Vaaya muudra
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-ஆக-201708:26:55 IST Report Abuse
Srinivasan Kannaiya ஆயுதங்கள் துரு பிடித்து விட போகிறது...தொழில் நுட்பங்கள் தொலைந்து விட போகிறது...உபயோகிக்க தருணம் வந்து விட்டது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X