அரசியல் பேச கூடாது!

Added : ஆக 09, 2017
Advertisement
அரசியல் பேச கூடாது!

துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நான், அரசியல் பேசக் கூடாது. அதற்காக, மக்களுக்கு ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து, கருத்து கூறக் கூடாது என்பதில்லை. நான் ஏற்கப் போகும் புதிய பொறுப்பை, திறம்படச் செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.

வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவர்

தடை விதிக்க வேண்டும்!

சிறுவர்களை தற்கொலைக்கு துாண்டும், 'புளூ வேல்' ஆன்லைன் விளையாட்டிற்கு, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். இந்த விளையாட்டின் மூலம், உலகம் முழுவதும், 4,000 குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர்.நம் நாட்டிலும், இதன் தாக்கம் அதிகரித்து உள்ளது.

பினராயி விஜயன்கேரள முதல்வர், மார்க்.கம்யூ.,

பாதுகாப்பு அவசியம்!

அதிகரித்து வரும் பயங்கரவாதம், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதத்தை வேரறுக்க, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். கடல் எல்லை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்துவதன் மூலம், ஊடுருவலை தடுக்க முடியும்.

வி.கே.சிங்வெளியுறவு இணையமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X