சமாஜ்வாதியில் கடும் குழப்பம் : 2 எம்.எல்.சி.,க்கள் ராஜினாமா

Added : ஆக 09, 2017
Advertisement
சமாஜ்வாதியில் கடும் குழப்பம் : 2 எம்.எல்.சி.,க்கள் ராஜினாமா

லக்னோ: உ.பி.,யில், எம்.எல்.சி., எனப்படும், சட்ட மேல்சபை உறுப்பினர் பதவியை, சமாஜ்வாதியைச் சேர்ந்த மேலும் இருவர், நேற்று, ராஜினாமா செய்தனர்.

உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இங்கு, அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதியைச் சேர்ந்த, சட்ட மேல்சபை உறுப்பினர்கள் மூன்று பேர், சமீபத்தில், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில், சமாஜ்வாதிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அந்த கட்சியைச் சேர்ந்த, சட்ட மேல்சபை உறுப்பினர் கள் அசோக் வாஜ்பாய் அம்பிகா சவுத்ரி ஆகியோர், நேற்று, தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

நிருபர்களிடம், அசோக் கூறுகையில், ''சமாஜ் வாதியில், நிறுவனர் முலாயம் சிங் யாதவ், மனம் புண்படும் வகையில் நடத்தப்படுகிறார். அதை சகிக்க முடியாமல், பதவியை ராஜினாமா செய்கிறேன்,'' என்றார். முன்னதாக, ஜூலை, 29ல், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, உ.பி., தலைநகர் லக்னோ வந்த போது, சமாஜ்வாதியைச் சேர்ந்த இரண்டு, எம்.எல்.சி.,க்கள், பகுஜன் சமாஜைச் சேர்ந்த, ஒரு, எம்.எல்.சி., தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் சேர்ந்தனர். சட்டசபை தேர்தலில், பா.ஜ.,விடம் ஆட்சியை பறிகொடுத்த சமாஜ்வாதி யில், எம்.எல்.சி.,க்கள் ராஜினாமா செய்வது வாடிக்கையாகி உள்ளதால், அந்த கட்சி நிர்வாகிகளிடம் குழப்பம் ஏற்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X