பதிவு செய்த நாள் :
புது கட்சி துவக்குகிறார் சரத் யாதவ்?
பீஹார் அரசியலில் மீண்டும் திருப்பம்

பாட்னா: பீஹாரில், ஆளுங்கட்சியாக உள்ள, ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர், சரத் யாதவ், புதிய கட்சி துவங்குவது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

புது கட்சி, New Party,சரத் யாதவ், Sarath Yadav, பீஹார், Bihar, அரசியல், Political, பாட்னா, Patna, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத் யாதவ், Senior United Janata Dal leader Sharad Yadav, ஆலோசனை,Consulting, முதல்வர் நிதிஷ் குமார்,  Chief Minister Nitish Kumar, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ கூட்டணி ,United Janata Dal - BJP alliance,குஜராத், Gujarat,ஐக்கிய ஜனதா தளம்,  United Janata Dal,ராஜ்யசபா, Rajya Sabha, பா.ஜ தேசியத் தலைவர் அமித்ஷா,BJP national president Amit Shah,  மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, Union Textile Minister Smriti Irani,காங்கிரஸ் தலைவர் சோனியா, Congress leader Sonia Gandhi, அஹமது படேல் , Ahmed Patel,

பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமை யில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வுக்கு எதிராக, தீவிர அரசியல் நடத்தி வந்த, நிதிஷ் குமார், சமீபத் தில், அந்த கட்சியுடன் இணைந்து, ஆட்சி அமைத்தது, அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.

பா.ஜ.,வுடன், நிதிஷ் கைகோர்த்தது, ஐக்கிய ஜனதா தளம் நிறுவன தலைவர்களில் ஒருவ ரான, சரத் யாதவுக்கு அதிர்ச்சியை

ஏற்படுத்தியது. மக்கள் தீர்ப்புக்கு எதிராக, பா.ஜ., வுடன், நிதிஷ் கூட்டணி அமைத்துள்ளதாக, சரத் யாதவ், வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார். பா.ஜ., வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, தன்னுடன், நிதிஷ் கலந்து ஆலோசிக்க வில்லை என்றும் அவர் கூறியது, சலசலப்பைஏற்படுத்தியது.

நிதிஷ் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி, புதிய கட்சி துவங்குவது குறித்து, ஆதரவா ளர்களுடன், சரத் யாதவ், தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இன்று முதல், 3 நாட்கள், மக்களை சந்தித்து கருத்து அறிய, அவர் திட்டமிட்டு உள்ளார். ஆனால், 'சரத் யாதவின் மக்கள் சந்திப்பிற்கும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் தொடர்பு இல்லை' என, நிதிஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குஜராத்தில், நேற்று முன்தினம் நடந்த, மூன்று ராஜ்யசபா இடங்களுக்கானதேர்தலில், பா.ஜ.,வைச் சேர்ந்த, தேசியத் தலைவர், அமித் ஷா, மத்திய ஜவுளித்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி, காங்., தலைவர், சோனியாவின் அரசியல் ஆலோசகர், அஹமது படேல் ஆகியோர் வென்றனர்.

அஹமது படேல், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென் றார். குஜராத்தில், ஐக்கிய ஜனதா தளம் , கட்சியைச்

Advertisement

சேர்ந்த, ஒரே, எம்.எல்.ஏ.,வானசோட்டுபாய் வாசவா அளித்த ஓட்டு, அஹமது படேல் வெற்றியை உறுதி செய்ததாக கூறப் படுகிறது. பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக் கும் வகையில், அஹமது படேலுக்கு ஆதரவாக ஓட்டளித்ததாக, சோட்டு பாய் தெரிவித்தார்.

சரத் யாதவின் உத்தரவுப்படி, அஹமது படே லுக்கு, சோட்டு பாய் ஓட்டளித்ததாக கூறப்படு கிறது. அஹமது படேல் வெற்றியை அடுத்து, அவருக்கு, தொலைபேசி மூலம், சரத் யாதவ் வாழ்த்து கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kc.ravindran - bangalore,இந்தியா
10-ஆக-201717:19:05 IST Report Abuse

kc.ravindranஉங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் காங்கிரசுடனோ கம்யூனிஸ்ட்டுடனோ நேசக்கரம் நீட்டினால் "சங்கே முழங்கு".

Rate this:
Balaji - Khaithan,குவைத்
10-ஆக-201714:46:21 IST Report Abuse

Balajiஎன்னதான் இருந்தாலும் திரு.நிதீஷ் செய்தது மிகப்பெரிய சந்தர்ப்ப வாதம் தான்.... மக்களிடம் வாக்கு பெற்று வெற்றிபெற்றது அவர் ஏற்கனவே வைத்திருந்த மெகா கூட்டணியுடன்.. ஆனால் இப்போது பாஜக வேண்டாம் என்று இவர்கள் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு இவர் கொடுத்த பரிசு பாஜக ஆட்சியினுள் நுழையவிட்டது... இனி பிஹாரில் நடப்பதை மக்கள் ஆட்சி என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை... ஊழல் கட்சி என்று கூட்டணி வைக்கும்போதே தெரியாதா நிதீஷ் அவர்களுக்கு.. இதற்க்கு தனித்து நின்று பத்து தொகுதிகளை பெற்றிருந்தாலும் பாராட்டியிருக்கலாம்..........

Rate this:
sickularist sickular - sikim,பூடான்
10-ஆக-201714:40:26 IST Report Abuse

sickularist sickularஇந்த ஆளு ஒரு வெத்துவேட்டு

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X