எதிர்க்கட்சிகள் அமளி : ராஜ்யசபா ஒத்திவைப்பு

Added : ஆக 09, 2017
Advertisement

புதுடில்லி: பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், ராஜ்யசபா நடவடிக்கைகள் நேற்று பாதிக்கப்பட்டன. இதனால், சபை ஒத்திவைக்கப்பட்டது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின், 75ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ராஜ்யசபாவில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது குறுக்கிட்ட, காங்., உறுப்பினர்கள், வெவ்வேறு அளவில், புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்ட விவகாரம், சண்டிகரில், காரில் சென்ற பெண்ணிடம், இளைஞர்கள் வம்பு செய்த விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி, அமளியில் ஈடுபட்டனர். வங்கி நடவடிக்கைகள் பற்றிய சட்ட திருத்த மசோதா குறித்து விவாதிக்க விடாமல், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால், சபையில், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, ராஜ்யசபா துணைத் தலைவர், பி.ஜே.குரியன், சபை நடவடிக்கைகளை ஒத்தி வைத்தார். அதற்கு பின் சபை கூடியபோதும், அமளி தொடர்ந்ததால், சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X