பதிவு செய்த நாள் :
அழைப்பு!
ஊழலற்ற நாடு உருவாக்கும் திட்டத்துக்கு மோடி...
'செய்வோம், செய்து காட்டுவோம்' என பேச்சு

புதுடில்லி:''நாட்டின் சுதந்திரத்துக்கு, வெள்ளை யனே வெளியேறு இயக்கம் வித்திட்டதுபோல், வறுமை, ஊழல், இல்லாத நாட்டை உருவாக் கும், 'செய்வோம், செய்து காட்டுவோம்' என்ற புதிய இயக்கத்துக்கு, அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

மோடி அழைப்பு, Modi call, வெள்ளையனே வெளியேறு இயக்கம், Quit India Movement,புதுடில்லி, New Delhi,வறுமை,Poverty, ஊழல், Corruption, லோக்சபா , Lok Sabha, பிரதமர் நரேந்திர மோடி , PM, Narendra Modi,பார்லிமென்ட், Parliamentary, படிப்பறிவின்மை, illiteracy, ஊட்டச் சத்தின்மை,malnutrition, பெண்கள் ,women, வன்முறை ,violence, இந்தியா, India, சமூக நீதி,social justice, சம நீதி, equality, கருத்து சுதந்திரம், Comment Freedom, ஜனநாயகம்,democracy, சிவசேனாவின் ஆனந்த்ராவ் அத்சுல் ,Shiv Sena's Anandra Athulul,  பீஹார்,Bihar , பா.ஜ., BJP,பிஜு ஜனதா தளத்தின் ததாகாடா சத்பதி, Dathakada Satpati of Biju Janata Dal,அ.தி.மு.க.,AIADMK, மஹாத்மா காந்தி, Mahatma Gandhi,

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின், 75வது ஆண்டையொட்டி, பார்லிமென்டில் நேற்று சிறப்பு விவாதம் நடந்தது. லோக்சபா வில் நடந்த விவாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:நம் நாடு, 1947ல் சுதந்திரம் பெற்றது. அதற்கு, வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தை, 1942ல், மஹாத்மா காந்தி துவக்கினார்.
'செய் அல்லது செத்து மடி' என்ற கோஷத்துடன் துவங்கிய அந்த இயக்கத்துக்கு, நாட்டு மக்கள் முழு ஆதரவை அளித்தனர். ஐந்தே ஆண்டு களில், நமக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்த சுதந்திரத்தின் மூலம், காலனியாதிக்கம் ஒழிக் கப்பட்டது.சுதந்திரம் பெற்றாலும், நாட்டில் பல் வேறு பிரச்னைகள் உள்ளன. வறுமை, ஊழல், படிப்பறிவின்மை, ஊட்டச் சத்தின்மை, பெண் களுக்கு எதிரான வன்முறை போன்ற பிரச்னை களுக்கு தீர்வு காணப்பட வேண்டும். வெள்ளை யனே வெளியேறு இயக்கத்தின் போது, நாட்டு மக்களிடம் இருந்த எழுச்சி, மீண்டும் உருவாக வேண்டும்.

பாடுபட வேண்டும்


இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு,

'செய்வோம், செய்து காட்டுவோம்' என்ற கோஷத் துடன், கட்சி பாகுபாடு இல்லாமல், ஜாதி, மத பேத மில்லாமல், அனைத்து மக்களும் ஒருங்கி ணைந்து பாடுபட வேண்டும். இதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், இந்தப் பிரச்னைகள் இல் லாத புதிய இந்தியாவை, உருவாக்கிட முடியும்.நம் நாடு எவ்வாறு இருக்க வேண்டுமென, தியாகிகள், தலை வர்கள், முன் னோர்கள் விரும்பி னரோ, அதை உரு வாக்க, நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

விடுதலை போர்


சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்கு மிகப் பெரியது. தற்போதைய சூழ்நிலையிலும்,இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில், அவர்களுக்கு பெரிய பங்கு உள்ளது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, மஹாத்மா காந்தி போன்ற பெருந்தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் விதைத்த சுதந்திர தாகம், பல்வேறு இளம் தலைவர்களை உருவாக்கியது. அது போன்ற ஒரு விடுதலை போருக்கு, நம் இளைஞர்கள் ஆர்வத்து டன் முன்வர வேண்டும்.

புதிய இந்தியா


வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவக்கப்பட்ட இந்த நாளில், அதை நினைத்து பார்க்கும்போது, நமக்கு மிகப் பெரிய உத்வேகமும், பலமும் கிடைக் கிறது. அதே உணர்வுடன், வரும், 2022ல், புதிய இந்தியாவை உருவாக்கும் முயற்சியை செய்வோம், செய்து காட்டுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

'ஜனநாயகத்தை சிதைக்கும் சக்திகள்'


லோக்சபாவில் நேற்று நடந்த சிறப்பு விவாதத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியதாவது: மக்க ளிடையே பிளவு ஏற்படுத்தும், வெறுப்பு அரசியல் மேகங்கள் தற்போது சூழ்ந்துள்ளன; அது, நம் அரசி யலமைப்பு சட்டத்தின் மதிப்புகளுக்கு எதிரானவை யாக உள்ளன. மதச்சார்பின்மை, ஜனநாயகம், சுதந்திரம் போன்றவை அழிந்து வருகின்றன.

நாட்டில், சுதந்திரத்தின் உண்மையானஅர்த்தத்தை

Advertisement

சிதைக்கும் சக்திகள் உலவுகின்றனவா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சமூக நீதி, சம நீதி, கருத்து சுதந்திரம், சட்டத்தை மதிக்கும் நடை முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உரு வான ஜனநாயகத்தை, சில சக்திகள் சிதைத்து வருகின்றன.

மாற்றுகருத்து கூறுவது,விவாதம் போன்றவை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குறுகிய மனப் போக்கு உள்ளவர்கள்,பிரித்தாள நினைப்பவர் கள், மதக்கொள்கைகளை உடைய வர்களிடம், நாம் அடிபணிந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

வலுவான இந்தியாவுக்கு தீர்மானம்


வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின், 75 வது ஆண்டையொட்டி, ராஜ்யசபாவில், 'வலு வான, சுயசார்புள்ள, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவை உருவாக்குவோம்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தீர்மானத்தை, ராஜ்யசபா தலைவர், ஹமீது அன்சாரி தாக்கல் செய்தார்; இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

பா.ஜ.,வில் அ.தி.மு.க.,


லோக்சபாவில் நடந்த விவாதத்தின்போது, மத்தியில் ஆளும், பா.ஜ., கூட்டணியில் உள்ள, சிவசேனாவின் ஆனந்த்ராவ் அத்சுல் பேசிய தாவது:தற்போது, பீஹார் பா.ஜ.,வுடன் இணைந்து விட்டது.

, பிளவு பட்டு உள்ள, அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க போராடும் இரு அணிகளும், விரைவில், பா.ஜ., வுடன் இணைந்துவிடும். ஒரே சித்தாந்தம், ஒரே தலைவர் என்பதை நான் ஆதரிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, பிஜு ஜனதா தளத்தின் ததாகாடா சத்பதி பேசுகையில், ''சமூக தளங்களில், 'ட்ரோல்' எனப்படும், கிண்டல் செய்யும் அல் லது மோசமான தகவல்களை பதிவிடு வோ ருக்கு தான் மரியாதை. தற்போது, அரசியலி லும் அது போன்றவர்களை எதிர்த்து பேசாமல், காலில் விழுந்து விடுகின்றனர்,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (68)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
truth tofday - india,இந்தியா
11-ஆக-201713:43:12 IST Report Abuse

truth tofdayமூன்று வருஷத்தில் மட்டும் திறந்தவெளில் மலம் கழிப்பது முற்றிலும் நிறுத்தப்படவில்லை இதுக்கு மூணு வருசத்துக்கு முன்பு எல்லோரும் திறந்தவெளியில் தான் கழித்தார்களா, நீயும் அப்பதான் 3 வருசத்துக்கு முன்பு எல்லாரும் இன்னும் விழுப்புரம் மற்ற பஸ்ஸ்டாண்ட் களில் வெளியில் தான் கழிக்கிறார்கள் அதற்க்கு சரியான கழிப்பறைகளில் பஸ் ஸ்டாண்டில் இன்னும் இல்லை வெற்று பேச்சு பேசும் கும்பலை ஆதரிப்பவர்களுக்கு உண்மை சொன்னால் கோபம் தான் வரும்

Rate this:
10-ஆக-201721:54:51 IST Report Abuse

kulandhaiKannanRaids on finance companies in Karur today. Result of demonetization follow up.

Rate this:
Sahayam - cHENNAI,இந்தியா
10-ஆக-201720:27:08 IST Report Abuse

Sahayamஊழலை ஒளித்து விட்ட உத்தமர் என நம்மூர் தமிழிசை போஸ்டர் அடித்து ஒட்டி விட்டார்

Rate this:
மேலும் 65 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X