பா.ஜ.,வே வெளியேறு இயக்கம்: மம்தா பானர்ஜி துவக்கினார்

Added : ஆக 09, 2017 | கருத்துகள் (3)
Advertisement
பா.ஜ.,வே வெளியேறு இயக்கம்: மம்தா பானர்ஜி துவக்கினார்

மிட்னாபூர்: வரும், 2019ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் வகையில், 'பா.ஜ.,வே வெளியேறு' என்ற இயக்கத்தை துவக்கியுள்ளதாக, திரிணமுல் காங்.,கை சேர்ந்த, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்டத்தின்போது, ஆங்கிலேயரை விரட்ட, 'வெள்ளையனே வெளியேறு' போராட்ட இயக்கம் துவக்கப்பட்டது. இதன், 75வது தினம், நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

அச்சுறுத்தல் : இதையொட்டி, மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'பா.ஜ.,வே வெளியேறு' என்ற இயக்கத்தை, திரிணமுல் காங்., தலைவரும், மாநில முதல்வருமான, மம்தா பானர்ஜி துவக்கினார்.

அப்போது, அவர் பேசியதாவது: மத்தியில், பா.ஜ., தலைமையில் நடக்கும் ஆட்சியில், மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மதச் சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது; அதை, ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். வரும், 2019ல் நடக்கும் லோக்சபா தேர்தலில், பிரசார வாசகமாக, 'பா.ஜ.,வே, வெளியேறு' என்பது இருக்கும். இது குறித்து, பிற எதிர்க்கட்சிகளுடன் ஆலோசித்து, திட்டம் உருவாக்குவோம். பா.ஜ.,வை எதிர்த்து, ஒருங்கிணைப்புடன் போராடுவோம்.

முற்றுப்புள்ளி : பா.ஜ.,வின், மதவாத, வெறுப்புணர்வை துாண்டும் அரசியலுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். ஆட்சியிலிருந்து, பா.ஜ., துாக்கி எறியப்படும் வரை, ஓய மாட்டோம். எத்தனை இடர்கள் ஏற்பட்டாலும், இறுதியில், ஜனநாயகம் வெல்லும்.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., போன்றவற்றை வைத்து, எங்களை, பா.ஜ., அச்சுறுத்தலாம்; அதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். பீஹார் தலைநகர், பாட்னாவில், இம்மாத இறுதியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ் நடத்தும் பேரணியில் பங்கேற்க உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

'டார்ஜிலிங்கை பிரிக்க சதி!' : மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மேலும் பேசியதாவது: டார்ஜிலிங், தெராய், தோவார்ஸ் ஆகிய பகுதிகள், மேற்கு வங்கத்தின் பெருமைகள். இவற்றை பிரித்து, மேற்கு வங்கத்தை பிளக்க, பா.ஜ., - மார்க். கம்யூ., கட்சிகள் சதி செய்கின்றன. டார்ஜிலிங் விஷயத்தில், கம்யூனிஸ்ட் தலைவர்கள், இரட்டை வேடம் போடுகின்றனர். டார்ஜிலிங் விவகாரத்தை பொறுத்தவரை, பா.ஜ.,வுக்கும், மார்க். கம்யூ.,வுக்கும், வித்தியாசம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
10-ஆக-201719:46:57 IST Report Abuse
Sivagiri திருடர்கள் எல்லாம் சேர்ந்து காவல்துறையே வெளியேறு- எங்களை வாழ விடு என்று போராடியது போல . . .
Rate this:
Share this comment
Cancel
Tamil Selvan - Chennai,இந்தியா
10-ஆக-201709:13:48 IST Report Abuse
Tamil Selvan மோடி அவர்கள் பிரதமராக வந்தால், அவரின் இடுப்பில் கயிற்றை கட்டி இழுத்து வருவேன் என்று சொன்னவர்தான் இந்த MAMATA... மேற்கு வங்கத்தில் இருக்கும் வங்கதேச கள்ளக்குடியேறிகளின் ஓட்டை அப்படியே அள்ள வேண்டும் என்பதற்காக இவர் எப்பொழுதுமே தன்னை தீவிர பாஜக எதிர்ப்பாளராக காட்டிக்கொள்வர்... தேர்தல் முடிந்தவுடன் அப்படியே அந்தர் பல்டி அடிப்பார்... சரியான சந்தர்ப்பவாதி...
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
10-ஆக-201705:21:17 IST Report Abuse
Rajendra Bupathi சில ரெய்டுல இந்த அம்மா சொத்து பல லட்சம் கோடி மாட்டிகிச்சி, அதனால வந்த வினைதான் இது? எப்படி இருந்தது இப்படி ஆயுடிச்சி? பாவம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X