பதிவு செய்த நாள் :
தமிழுக்கு அங்கீகாரம் எங்கே?
தம்பிதுரை திடீர் ஆவேசம்!

புதுடில்லி: நாட்டின் அனைத்து மொழிகளை யும், தேசிய மொழிகளாகவும், அலுவல் மொழி களாகவும் அங்கீகரிக்கும்படி, லோக்சபாவில் நேற்று, அ.தி.மு.க., மூத்த தலைவரும், லோக் சபா துணை சபாநாயகருமான, தம்பிதுரை வலியுறுத்தினார்.

தமிழ், Tamil,அங்கீகாரம், Recognition, தம்பிதுரை,Thambidurai, புதுடில்லி, New Delhi, லோக்சபா, Lok Sabha, அ.தி.மு.க., AIADMK, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை,Lok Sabha Deputy Speaker Thambidurai, சுதந்திரம் , Freedom, தெலுங்கு, Telugu, பெங்காலி ,Bengali, கைத்தறி உடை,Handloom dress, எம்.ஜி.ஆர்.,MGR, பார்லிமென்ட், Parliament, ஹிந்தி, Hindi, ஆங்கிலம், English,

லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தில் பங்கேற்ற, துணை சபாநாயகர், தம்பிதுரை பேசியதாவது: நாடு, சுதந்திரம் பெற, அனைத்து மொழிகளைச் சேர்ந்த மக்களும் போராடியுள் ளனர். குறிப்பிட்ட ஒரு மொழிக்கு மட்டும் முன்னுரிமை தருவதற்கு பதில், அனைத்து

மொழி களையும் சமமாக நடத்துவது, பார்லிமென் டின் கடமை.

நாட்டின் அனைத்து மொழிகளையும், பிராந்திய மொழிகளாக மட்டும் அங்கீகரிக்காமல், தேசிய மொழிகளாக அங்கீகரிக்கவேண்டும்.தமிழ், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட அனைத்து மொழி களுக்கும், அலுவல் அந்தஸ்து கிடைக்கும் வகை யில் அங்கீகாரம் அளிக்க, நாம் உறுதிமொழி ஏற்க வேண்டும்.

லோக்சபாவில் பேசுகையில்,தமிழ் உள்ளிட்ட, மாநில மொழிகளின் மொழிபெயர்ப்பை கேட்க முடி வ தில்லை. இதனால், ஹிந்தி அல்லது ஆங்கிலத் தில் பேச வேண்டிய நிலை ஏற்படுகிறது.மறைந்த தலைவரும், தமிழக முதல்வருமான, எம்.ஜி.ஆர்., சிறந்தகாந்தியவாதியாக திகழ்ந் தார்; அவர் தாயாருக்கு, கைத்தறி ஆடை அணிவதில் விருப்பம் கிடையாது.

கைத்தறி உடை அணிய அனுமதிக்காவிட்டால், திரு மணம் செய்ய மாட்டேன் என, தன் அன்னையிடம்,

Advertisement

எம்.ஜி.ஆர்., நிபந்தனை விதித்தார். அதனால், கைத்தறி ஆடை அணிய, எம்.ஜி.ஆருக்கு, அவரது தாயார், அனுமதி வழங்கினார். காங்., கட்சியுடன், திராவிட இயக்கத்திற்கு, மாறுபட்ட கருத்து இருந்திருக்கலாம்.இருப்பினும், சுதந் திர இந்தியாவுக்காக, அவை இரண்டும் போராடி உள்ளன.இவ்வாறு அவர் பேசினார். லோக்சபா வில் நேற்று, தன் உரையை துவக்கிய தம்பி துரை, தமிழில் பேசினார்; இதனால், சபையில் முணுமுணுப்பு எழுந்தது.


Advertisement

வாசகர் கருத்து (72)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Nimalakumar Balasingam - Middelfart,டென்மார்க்
10-ஆக-201723:30:14 IST Report Abuse

Nimalakumar Balasingamகணேஷ் தரன் முதலில் வரலாறு சரியாக படிக்கவும்

Rate this:
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
10-ஆக-201722:13:35 IST Report Abuse

Mahendran TCமுதல்முறையாக பாராளுமன்றத்தில் தமிழுக்காக தம்பிதுரை ஆவேசப்பட்டதை பாராட்டியே ஆகவேண்டும்....

Rate this:
Edwin - Tirunelveli, Tamil Nadu,இந்தியா
10-ஆக-201722:02:04 IST Report Abuse

Edwinஇவர் தான் முதுகெலும்புள்ள ஆண் தமிழ் எம்.பி. என நிரூபித்துள்ளார். வாழ்க அவரின் தமிழுணர்வு.

Rate this:
மேலும் 69 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X