பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அரசு கேபிள் 'டிவி' உரிமம்
ஒரு வாரத்தில் ரத்தாகிறது?

தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், 'டிஜிட்டல்' முறையில், ஒளிபரப்பை துவங்கு வதற்கு, மத்திய அரசு விதித்த கெடு முடிய, இன்னும் ஒரு வாரமே உள்ளது.

அரசு,கேபிள்,'டிவி' உரிமம்,ஒரு,வாரத்தில்,ரத்தாகிறது?

தமிழக அரசு, பல ஆண்டுகளாக போராடிய பின், 2017, மே மாதம்,கேபிள், 'டிவி' சேவையை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வழங்குவதற் கான உரிமத்தை, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, 'டிராய்' வழங்கியது.

அப்போது, இரண்டு மாதத்திற்கு, அதாவது, ஜூலை, 17க்குள், அதை வழங்கும்படி உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து, டிஜிட்டல் ஒளி பரப்புக்கு தேவையான, 'செட் - டாப்பாக்ஸ்'களை கொள்முதல் செய்ய, அரசு கேபிள் நிறுவனம், டெண்டர் கோரியது.

அந்த டெண்டரை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட் டதால்,உரிமம் ரத்து செய்வதற்கான இறுதி கெடுவை, ஆக., 17 வரை நீட்டிக்க, தமிழக அரசு, அனுமதி பெற்றது.இந்நிலையில், 'செட் - டாப் பாக்ஸ்' டெண்டர், ரத்தானது.

அதன்பின், மீண்டும் புதிதாக, டெண்டர் கோரப்பட்டது. எனினும், இதுவரை, டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், மத்திய அரசு அளித்த கெடு முடிவதற்கு, இன்னும் ஏழு நாட்களே அவகாசம் உள்ளது.

அதற்குள், 'செட் - டாப் பாக்ஸ்'களை கொள்முதல்

Advertisement

செய்து, மக்களுக்கு வினியோகிப்பது சிரமம். அதனால்,டிஜிட்டல் உரிமம் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு அறிவித்தபடி, 'செட் - டாப் பாக்ஸ்' இலவசமாக கிடைக்கும் என, பொது மக்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு பதில் கூற முடியாமல், ஆப்பரேட்டர்கள் திணறுகின்றனர். நமது நிருபர்-


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A shanmugam - VELLORE,இந்தியா
12-ஆக-201711:35:09 IST Report Abuse

A shanmugamஅன்றாடம் ஜீவனத்திர்கே கஷ்டம் படும் ஏழை எளிய மக்கள் எப்படி பணம் கொடுத்து செட்டப் பெட்டியும் , மாத கட்டணம் முன்னூறு முதல் நானூறு செலுத்தமுடியும்? அரசாங்கம் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் முன் அதனுடைய பயனாளிகள் எவ்வளவு மக்கள் அவர்களின் வருமான வசதி என்ன என்று ஆராய்ந்து அதற்கு ஏற்றால் போல் மாற்றத்தை கொண்டு varavendum. தவிர தலைவலி சுமையாக இருக்கக்கூடாது . மேலும் தமிழ் நாட்டில் உள்ள ஏழரை கோடி மக்கள் எல்லோரும் பணக்காரார்கள் இல்ல என்பதை அரசு புரிந்துகொள்ளவேண்டும் .

Rate this:
Balaji - Khaithan,குவைத்
10-ஆக-201714:19:59 IST Report Abuse

Balajiஎந்த துறையில் தான் இவர்கள் உருப்படியாக செயல்படுகிறார்கள் இந்த துறையில் செயல்பட?? மறைமுகமாக திமுகவினரின் கேபிள் நிறுவனங்களின் நலனுக்காகவே செயல்படுவது போல தெரிகிறது. KD பிரதர்ஸ் ஏதாவது கொடுக்க வேண்டியதை கொடுத்து சரி செய்துவிட்டார்கள் போல??

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-ஆக-201713:29:48 IST Report Abuse

Nallavan Nallavanதமிழகத்தில் ஆட்சியை இழந்து மத்திய அமைச்சரவையில் திமுக தொடர்ந்தது முதலே 'அரசு கேபிள் டிவி க்கு நெருக்குதல் இருந்து வந்தது ..... காரணம் அனைவரும் அறிந்ததே ..... இப்போதைய அரசிலும் திமுக -வுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை இந்த உரிமம் ரத்து நடவடிக்கை காட்டுகிறது ..... டெக்னோலஜி எல்லாம் சும்மா ...... பம்மாத்து .....

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X