அரசியல் செய்தி

தமிழ்நாடு

டில்லிக்கு ஜோதி யாத்திரை

Added : ஆக 09, 2017 | கருத்துகள் (2)
Advertisement
டில்லி,Delhi,  ஜோதி யாத்திரை,Jyoti Pilgrimage, ராஜிவ் நினைவிடம்,Rajiv Memorial,  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,  Tamil Nadu Congress leader Tirunavukkarar, முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள்,former Prime Minister Rajiv birthday,  ஸ்ரீபெரும்புதுார், Sriperumpudur,யாத்திரை, Pilgrim

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள, ராஜிவ் நினைவிடத்தில் இருந்து டில்லிக்கு, ஜோதி யாத்திரையை, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நேற்று தொடங்கினார்.
வரும், 20ல், முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள், காங்கிரசாரால் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கர்நாடக மாநில காங்கிரஸ் பிரமுகர் பிரகாசம் தலைமையில், ஜோதி யாத்திரை நேற்று புறப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள, ராஜிவ் நினைவிடத்தில் இருந்து நேற்று புறப்பட்ட யாத்திரை, 19ல் டில்லியை அடையும்.அன்று மாலை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவர் மகனும், கட்சியின் துணை தலைவருமான ராகுலிடம், ஜோதி ஒப்படைக்கப்படும்.ஜோதி யாத்திரையை, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று துவங்கினார். இதில், அக்கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.இந்த யாத்திரை, 26வது ஆண்டாக நேற்றும் நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-ஆக-201709:16:50 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏதாவது ஒரு நாள் திருவிழா கூட்டம் போல கூடிவிட்டு அப்பறம் காணாமல் போய் விடுகிறீர்கள். மக்களுக்கும் உங்களுக்கும் இடைவெளி மிக அதிகமா உள்ளது. நீங்கள் திருட வேண்டாம் ஆனால் திராவிடர்கள் போல மக்களுடன் மக்களாக இணையலாம் இல்லையா...அப்பொழுதுதான் உங்கள் கட்சி ஆட்சி பீடத்தை எட்டி பார்க்கவாகவேனும் முடியும்...
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-ஆக-201704:20:40 IST Report Abuse
Kasimani Baskaran காந்தி பெயரை சொல்லி எவ்வளவு நாள்தான் ஏமாற்ற முடியும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X