அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
முதல்வருக்கு வரவேற்பு: தினகரன் அணி அதிர்ச்சி

விழுப்புரம் சென்ற, முதல்வர் பழனிசாமிக்கு, வழிநெடுகிலும், கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தது, தினகரன் அணியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

முதல்வருக்கு,வரவேற்பு,தினகரன்,அணி,அதிர்ச்சி

அ.தி.மு.க., சசிகலா அணியானது, முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, பிளவு பட்டுள்ளது. கட்சியினரிடம் தனக்குள்ள செல் வாக்கை நிரூபிக்க, சுற்றுப்பயணம் செல்லப் போவதாக,தினகரன் அறிவித்துள்ளார். மேலும், தன்னிச்சையாக புதிய நிர்வாகிகள் பட்டியலை யும் வெளியிட்டார்.

இந்நிலையில், விழுப்புரத்தில் நேற்று நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க, முதல்வர் பழனிசாமி, காரில் சென்றார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கட்சி முழுமையாக தன் கட்டுப்பாட்டில் இருப்பதை, தினகரன் அணி யினருக்கு உணர்த்த, அவர் தீர்மானித்தார்.

அதற்கேற்றபடி, சென்னையில் இருந்து விழுப் புரம் வரை, வழிநெடுகிலும், கட்சி நிர்வாகிகள் ஆட்களை திரட்டி வந்து, அவருக்கு வரவேற்பு

அளித்தனர். பல இடங்களில், கோவில் கள் சார்பில், முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை யும் அளிக்கப் பட்டது.தினகரன் ஆதரவாளர்களாக இருந்த, காஞ்சிபுரம் மாவட்ட செயலர்களும், முதல் வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.இது, தினகரன் அணியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில், முதல்வர்பழனிசாமி அணியின ரால் ஓரம் கட்டப்பட்ட தினகரன், கட்சியில் தன் செல்வாக்கை நிரூபிக்க, வரும், 14 முதல், மாவட்டந் தோறும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். முதல் கூட்டம், மதுரை மாவட்டம், மேலுாரில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு, அதிகளவில் தொண்டர்களை திரட்ட வேண்டும் என, தன் ஆதரவாளர்களுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.

இதற்காக, தினகரன் ஆதரவாளர்கள், மாவட்டந் தோறும் கூட்டம் நடத்தி வருகின்றனர். அதிக ஆட்களை திரட்டினால் மட்டுமே, கட்சியினர் தன் பின்னால் உள்ளனர் என்பதை, காண்பிக்க முடியும் என்பதால், மேலுார் கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த, தினகரன் திட்டமிட்டு உள்ளார்.

'சூழ்ச்சிகளை முறியடிப்போம்!' :


''கட்சியில் நடக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். விழுப்புரத் தில் நேற்று நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா வில் பங்கேற்ற, முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டி: டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவும்,

Advertisement

கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. இந்த பணிகளில், அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

ஜனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் குறை கூறி, முறை யிட உரிமைகள் உண்டு. இதையே, பன்னீர் செல்வமும், கையில் எடுத்துள்ளார். கட்சியில் உள்ள சூழ்ச்சிகளை முறியடிப்போம். கட்சி, ஆட்சி இரண்டும் சிறப்பாக நடைபெற மக்கள், எங்களுக்கு பேராதரவு அளித்து வருகின்றனர். அதை, நாங்கள் ஒன்றிணைந்து காப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

'தினகரன் தனிப்பட்ட முறையில், புதிய நிர்வா கிகளை அறிவித்திருப்பது குறித்து, நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''கட்சி பதவி குறித்து, தேர்தல் கமிஷன் மூலம் விசாரணை நடப்ப தால், கருத்து கூற விரும்பவில்லை,'' என்றார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
10-ஆக-201714:33:36 IST Report Abuse

Balajiஎனக்கென்னவோ முதல்வர் கூட்டத்தை ஊடங்கள் மிகப்படுத்தியும் OPS கூட்டங்கள் பற்றி செய்தி வெளியிடாமல் இருப்பதும் திட்டமிட்டு நடைபெறுவதாகவே நான் கருதுகிறேன்........ OPS அவர்களும் கூட்டங்கள் நடத்துகிறார் அவருக்கும் அதிக தொண்டர்கள் கூட்டம் கூடுகிறது...... இவரளவுக்கு EPS அவர்களுக்கு கூட்டம் கூடியதாக நான் உணரவில்லை........... அவருக்கு கூடும் தொண்டர்களை மனதில் வைத்துதான் இரு அணிகள் இணைப்பு கண்டிப்பாக நடக்கும் என்று EPS அணியினர் சொல்லவே ஆரம்பித்தார்கள்................

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
10-ஆக-201716:37:19 IST Report Abuse

Karuthukirukkanகூட்டம் கூடுவதில்லை யாருக்கும் .. கூட்டப்படுகிறது என்று சொன்னால் சரியாக இருக்கும் ...

Rate this:
Stalin - Kovilpatti,இந்தியா
10-ஆக-201711:24:25 IST Report Abuse

Stalinபணத்துக்கு ஆசை பட்டு கூட்டமா மக்கள் இது போன்ற கட்சிக்கு செல்லாமல் இருக்க வேண்டும் ... முதல்வருக்கு ஏன் வழி நெடுக வரவேற்பு வேற வேலை இல்லையா மக்களே , கொஞ்சம் திருந்துங்க இல்லை தமிழ்நாடு சுடுகாடு தான்

Rate this:
Balaji - Bangalore,இந்தியா
10-ஆக-201711:15:10 IST Report Abuse

Balaji இவர்களின் போட்டா போட்டியில் மக்கள் அவதி.

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X