பதிவு செய்த நாள் :
காவிரி நதிநீர்,Cauvery Water Supply, சுப்ரீம்கோர்ட், உச்ச நீதி மன்றம்,Supreme Court, காவிரி, Cauvery, வழக்கு,Case, விசாரணை,Investigation, தமிழகம்,Tamilnadu, காவிரி நடுவர் மன்றம், Cauvery Arbitration Forum,கர்நாடகா, Karnataka, கேரளா ,Kerala, புதுச்சேரி , Puducherry, நீதிபதிகள், judges, தீபக் மிஸ்ரா, Deepak Mishra,அமிதவ ராய், Amitava Roy,ஏ.எம்.கன்வில்கர், AM Kanwilkar, வழக்கறிஞர்கள், lawyers,சேகர் நபாடே, Shekhar Nabade, உமாபதி ,Umapati, கடும் வறட்சி, Severe drought,

காவிரி நதிநீர் வழக்கு விசாரணையின்போது, 'நீர் சேகரிப்பில் கவனம் செலுத்தாதது ஏன்' என, தமிழக அரசைக் கண்டித்துள்ள உச்ச நீதி மன்றம், அடுக்கடுக்காக, சரவெடி கேள்விகளை எழுப்பியுள்ளது. 'நதிநீர் பங்கீடு தொடர்பான விபரங்கள் குறித்து விளக்குவதற்கு, வல்லுனர் குழுவை அழைத்து வர வேண்டும்' என, தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர்,Cauvery Water Supply, சுப்ரீம்கோர்ட், உச்ச நீதி மன்றம்,Supreme Court, காவிரி, Cauvery, வழக்கு,Case, விசாரணை,Investigation, தமிழகம்,Tamilnadu, காவிரி நடுவர் மன்றம், Cauvery Arbitration Forum,கர்நாடகா, Karnataka, கேரளா ,Kerala, புதுச்சேரி , Puducherry, நீதிபதிகள், judges, தீபக் மிஸ்ரா, Deepak Mishra,அமிதவ ராய், Amitava Roy,ஏ.எம்.கன்வில்கர், AM Kanwilkar, வழக்கறிஞர்கள், lawyers,சேகர் நபாடே, Shekhar Nabade, உமாபதி ,Umapati, கடும் வறட்சி, Severe drought,

காவிரி நதிநீரைப் பங்கிடுவது தொடர்பாக, காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்குகளை, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் அமர்வு
விசாரித்து வருகிறது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந் துள்ள கர்நாடகாவின் வாதம் முடிந்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் வாதம்துவங்கி உள்ளது.

குடிநீர் பஞ்சம்:

தமிழக அரசின் சார்பில்

மூத்த வழக்கறிஞர்கள், சேகர் நபாடே, ஜி.உமாபதி, நேற்று வாதிட்டனர். அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்:

குடிநீர், விவசாயம் உள்ளிட்ட நீர் தேவைகளுக் காக, பிற மாநிலத்துடன் போராட வேண்டிய
நிலையில் உள்ள தமிழகம், நீர் சேகரிப்பில் ஏன் கவனம் செலுத்தவில்லை.

வழக்குகளைமட்டும் தொடர்ந்தால் போதுமா? தற்போது தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் உள்ளது. நீர் மேலாண்மை திட்டங்களில் கவனம் செலுத் தியிருந்தால், இந்த நிலையை தவிர்த்திருக்கலாமே?
'மற்ற மாநிலங்களைப் போல், தமிழகத்தில் பெரிய நதிகள் ஓடவில்லை. மிகப் பெரிய அணைகள் இல்லை' என்கிறீர்கள். மேட்டூர் அணை போன்ற நீர் தேக்கங்கள் இருக்கும் போது, அதில் அதிக அளவில் நீரை தேக்கி வைக்க ஏன் முயற்சி எடுக்கவில்லை. கவனம் செலுத்தவில்லை.கிடைக்கும் நீரை சேமித்து வைத்திருந்தால், வறட்சி காலத்தில் பயன் படுத்த முடியும் என்பதில் தமிழக அரசு, ஏன் கவனம் செலுத்தவில்லை?இவ்வாறு நீதிபதி கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

நதிநீர் பங்கீடு


தொடர்பான தொழில்நுட்ப விபரங்களை அளிக்கக் கூடிய வல்லுனர் குழுவை, தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் அழைத்து வர வேண்டும் என்றும் அமர்வு

Advertisement

உத்தரவிட்டு உள்ளது. விசாரணை இன்றும் தொடர்ந்து நடக்க உள்ளது.

முறையாக கணக்கிடவில்லை: தமிழக அரசு காவிரி வழக்கில், தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சேகர் நபாடே, உமாபதி ஆகியோர் வாதிட்டதாவது:பல நுாறு ஆண்டுகளாக, காவிரி நீரை நம்பியே, காவிரி படுகை மக்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. நடுவர் மன்ற உத்தரவில், கர்நாடகாவுக்கு அதிக அளவு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது; இது, காவிரி நதிநீரை நம்பியிருக்கும் தமிழகம், புதுச்சேரிக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரியை நம்பியுள்ள மக்களின்எண்ணிக்கை, அவர்களது பொருளாதார சூழ் நிலை ஆகிய வற்றையும் கணக்கில் எடுத்து, உத்தரவு பிறப் பித்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

கர்நாடகாவில், இதுவரை இல்லாத கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்துக்கு, காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட முடி யாத நிலை உள்ளது; ஆனாலும், அவ்வப்போது தண்ணீர் திறந்து விடுகிறோம். கர்நாடக விவ சாயிகள், குறுகிய கால பயிர்களை பயிரிடவும், குடிநீர் தேவைக்காகவும், காவிரி நீர் பிடிப்பின் அணைகளிலிருந்து, இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படும்.

சித்தராமையா
கர்நாடக முதல்வர், காங்.,


Advertisement

வாசகர் கருத்து (58)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Balakrishnan - Kanyakumari,இந்தியா
10-ஆக-201723:19:27 IST Report Abuse

Balakrishnan"மற்ற மாநிலங்களைப் போல், தமிழகத்தில் பெரிய நதிகள் ஓடவில்லை. மிகப் பெரிய அணைகள் இல்லை' என்கிறீர்கள். மேட்டூர் அணை போன்ற நீர் தேக்கங்கள் இருக்கும் போது, அதில் அதிக அளவில் நீரை தேக்கி வைக்க ஏன் முயற்சி எடுக்கவில்லை. கவனம் செலுத்தவில்லை" ஏன் என்றால் எந்த நதியில் நீர் இருந்தலும் அது எங்கள் கட்சியின் கொள்கைக்கு எதிரானது. அப்புறம் நாங்க எப்புடி சாமி பொழைக்குறது பொண்டாட்டிகள் புள்ளைங்களுக்கெல்லாம் குறைஞ்சபட்சம் 176ஆயிரம் கோடியாவது நாங்க சேமிச்சு வச்சாத்தானே கால் வயிறு அரை வயிறு கஞ்சியாவது குடிக்க முடியும். அதுமட்டுமில்லாமல் எங்களுக்கு அடுத்தவனை ஏச்சிதான் பொழைக்க தெரியும், எங்கள் தட்டில் இருப்பது தெரியாது அவன்கிட்ட இருக்கு எனக்கு வேணும், அப்படி சொன்னாதான் மக்கள் நம்புவார்கள் சாமீ. ஆக உச்சநீதிமன்றத்தை வேண்டி கேட்டு கொள்வதெல்லாம் தயவு செய்து தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து விடாதீர்கள் மழை காலங்களில் கிடைக்கின்ற தண்ணீரை சேமிக்கிறதுக்கு வழிவகை செய்யாத அரசாங்கத்துக்கு நீங்கள் அளிக்கும் ஒரே தீர்ப்பானது முதலும் கடைசியுமானதாக இருக்க வேண்டும் எப்படி என்றால் முதலாவது தீர்ப்பு "உங்களுக்கு கிடைக்கின்ற மழைநீரை சேமித்து பயன் படுத்துங்கள், குறைந்தபட்சம் தமிழக அளவிலாவது அனைத்து நதிகளையும் இணையுங்கள். புதிதுபுதிதாக கால்வாய்களையும் அணைகளையும் கட்டிக்கொள்ளுங்கள் என்பது, இதன் மூலம் தமிழகம் எப்போதும் அடுத்த மாநிலத்துடன் சண்டையிடவோ அல்லது பிச்சை எடுக்கவோ வேண்டாம். விவசாயி எப்போதும் விவசாயம் செய்யமுடியும் அரசியல் நாய்களின் பசிக்கு இரையாகவோ கையேந்தியோ அல்லது வேலையில்லாமலோ இருக்க முடியாது. இரண்டாவது தீர்ப்பு தேசிய அளவிலான நதிநீர் கொள்கைகளை ஏற்படுத்தி இந்தியா முழுமைக்கும், எந்த மாநிலத்துக்கும் உரிமை இல்லாமல் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் தேசிய நதிநீர் இணைப்பை செயல்படுத்துவது. இதன் மூலம் இந்தியா முழுமைக்கும் நன்மை கிடைக்கும்.

Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
10-ஆக-201722:04:11 IST Report Abuse

Nallavan Nallavanஎன்ன கேட்டு, என்ன பயன் ???? செவிடன் காதில் ஊதிய சங்குதான் .....

Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-ஆக-201719:34:42 IST Report Abuse

D.Ambujavalliநாங்கள் பிசியாக கான்டராக்ட் கட்டிங், கமிஷன் கலெக்ஷன் , எம்.எல் ஏ கடத்தல் என்றிருக்கிறோம். மக்கள் விக்கி செத்தாலென்ன , விவசாயி விஷம் குடித்து செத்தாலென்ன? இன்னும் எத்தனை ஆறுகளிலும் உள்ள மணலையெல்லாம் சுரண்டி முழு மலடாக்க வேண்டும்? இன்னும்மூன்றரை வருஷத்தில் இத்தனையும் செய்தாக வேண்டும். எங்கள் அவசரத்தைப் புரிந்துகொள்ளுங்கள் யுவர் ஆனர் 1

Rate this:
மேலும் 55 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X