அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து நீக்க முடிவு?
முதல்வர் பழனிசாமி அடுத்த 'மூவ்'

முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், இன்று டில்லி செல்வதால், இரு அணிகள் இணைப்பு பேச்சில் நீடிக்கும் இழுபறி, முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு, தொண்டர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

 சசிகலா,Sasikala, தினகரன், Dinakaran, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy,முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்,former Chief Minister Panneerselvam, டில்லி , Delhi, அ.தி.மு.க., AIADMK, பன்னீர் அணி,Panneer team, பழனிசாமி அணி, Palanisamy team,  மத்தியஅரசு, Central Government,பா.ஜ., BJP, துணை ஜனாதிபதி , Vice President, முன்னாள் எம்.பி மனோஜ்பாண்டியன், former MP Manojpandiyan, முன்னாள் அமைச்சர்கள், former ministers,  கே.பி.முனுசாமி, KP Munusamy, விஸ்வநாதன், Viswanathan,

அதற்கு வசதியாக, சசிகலா மற்றும் தினகரனை, கட்சியில் இருந்து நீக்க, முதல்வர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க., பழனிசாமி அணியும், பன்னீர் அணியும் இணைய வேண்டும் என, பா.ஜ., மேலிடம் அறிவுறுத்தியது. அதை ஏற்று பேச்சு நடத்த, இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது.

ஆனால், பேச்சு துவங்குவதற்கு முன், இரு அணியி லும் சிலர் தெரிவித்த கருத்துக்களால், இணைப்பு பணி தடைபட்டது. பன்னீர் அணியினர், பேச்சு குழுவை கலைத்தனர். 'இனி பேச்சே இல்லை' என்றும் அறிவித்தனர்
.
இருப்பினும், மத்தியஅரசு அழுத்தம் காரணமாக, மீண்டும் இரு அணி சார்பிலும் பேச்சு நடந்தது. அப்போது, 'சசிகலா குடும்பத்தினரை, கட்சியில் இருந்து முழுமையாக விலக்குவதாக, பழனிசாமி அணியினர் அறிவிக்க வேண்டும்' என, பன்னீர் அணியினர் நிபந்தனை விதித்தனர். இதை, பா.ஜ., மேலிடமும் ஏற்றது.

அதன்படி, அறிவிப்பை வெளியிடுமாறு, பழனிசாமி தரப்பிற்கு அழுத்தமும் கொடுத்துள்ளது.அதை ஏற்று, சசிகலா மற்றும் தினகரனை, கட்சியில் இருந்து நீக்க,முதல்வர் முடிவு செய்து உள்ளார். இது தொடர்பான தீர்மானம், அ.தி.மு.க., தலைமை அலு வலகத்தில், இன்று, முதல்வர் தலைமையில் நடை பெற உள்ள கூட்டத்தில், நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங் கேற்க, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்,இன்று மதியம் டில்லி செல்கிறார். அவருடன், முன்னாள் அமைச்சர்கள், கே.பி.முனுசாமி, விஸ்வநாதன்,

Advertisement

முன்னாள், எம்.பி., மனோஜ்பாண்டியன் ஆகி யோர் செல்கின்றனர். மாலையில், முதல்வர் பழனிசாமி,டில்லி செல்கிறார்.அவருடன், மூத்த அமைச்சர்களும் செல்ல உள்ளனர். டில்லியில், துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா முடிந்ததும், இரு அணிகள் இணைப்பு தொடர்பான, பஞ்சாயத்து நடைபெற உள்ளது.

அப்போது, முதல்வராக பழனிசாமி தொடர்வது; கட்சியை வழிநடத்த,பன்னீர்செல்வம் தலை மையில், வழிகாட்டும் குழு அமைப்பது என, முடிவு செய்யப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
10-ஆக-201714:04:56 IST Report Abuse

Balajiஒருவருக்கு ஒருவர் ஏளனமாக பேச ஆரம்பித்துவிட்டார்கள், அப்புறம் எப்படி ஒன்று சேருவார்கள்?? ஒன்று சேரும் எண்ணம் இருவருக்கும் இருக்குமானால் குறைந்த பட்சம் இவர்கள் அவர்களையும் அவர்கள் இவர்களையும் வசைபாடாமல் இருக்க வேண்டும்.. ஆனால் அப்படியா இருக்கிறார்கள்.. இப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிவிட்டு மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டோம் என்று சொன்னால் மக்கள் எப்படி ஏற்பார்கள் (சேர்ந்தாலும் பெறாவிட்டாலும் இவர்களை இருக்கப்போவதில்லை அதுவேறு விஷயம்) என்று கூடவா யோசிக்க மாட்டார்கள் என்ன அரசியலோ இவர்களுடையது...

Rate this:
Nawashkhan - Dammam,சவுதி அரேபியா
10-ஆக-201712:11:34 IST Report Abuse

Nawashkhanஇவனுங்க ஆட்சியின் லட்ச்சனம் எப்படி என்பதை நல்லா பார்த்தாச்சு போதும்டா சாமி திராவிட கட்சிகளை துடைத்து தூரமா வீசிவிட்டு தமிழர் நலன் விரும்பும் தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல தகுதியான நாம் தமிழரை ஆட்சியில் அமர்த்தி சாதியாகவும் மதமாகவும் பிரிந்து கிடக்கும் நம்மை நாம் தமிழர் என்ற மாபெரும் தேசிய இனத்தின் மக்களாக இனைத்த நாம் தமிழரையே ஆட்சியில் அமர்த்த மக்கள் மிக தெளிவாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் திருட்டு திராவிடர்களே தமிழகத்தின் வளங்களை திருடி சேர்த்து சுருட்டியது போதும் (

Rate this:
R Sanjay - Chennai,இந்தியா
10-ஆக-201710:55:24 IST Report Abuse

R Sanjayசாணிகலா குடும்பத்தை விளக்கி வைத்தால் தினகரன் சும்மா இருக்கப்போவதில்லை. தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று செயல்பட்டு ஆட்சியை கலைக்கவே முயலுவான். மேலும் தன்னுடைய கிணற்ற்றையே சொந்த கிராம மக்களுக்காக கொடுக்காமல், மக்களுக்கு கொடுக்கிறேன் என்று சொன்ன அதற்க்கு முந்தைய நாளே வேறொருவருக்கு கிணற்றைவிற்றவர் இந்த OPS இவர்களா நாட்டை காப்பாற்ற போகிறவர். எல்லாம் விளங்கிடும். இவர்கள் தான் நினைத்துக்கொண்டு உள்ளனர் இரட்டை இல்லை கிடைத்துவிட்டால் மீண்டும் மீண்டும் ஜெயித்துவிடலாம் என்று. ஜெ அவர்கள் இருந்த போதே இரட்டை இலையை வைத்து பல முறை அதிமுக தோற்று இருக்கிறது. இதில் அம்மாவின் மர்ம மரணத்திற்கு காரணமானவர்கள் வெளிப்படையாக தண்டிக்காமல் இரட்டை இலையை மட்டும் வைத்து கொண்டு இவர்களுக்கு என்ன கிடைத்து விட போகிறது. அதிகபட்சம் இந்த ஆட்சி சாணிகலா/ தினகரன் குடும்பத்தால் கலையும் அல்லது 2019 நாடாளுமன்ற தேர்தலுடன் ஒன்றுபட்ட அதிமுகாவிற்கு இரட்டை இலையை கொடுத்துவிட்டு தமிழக சட்டசபையை 2019இல் கலைத்துவிட்டு ஒன்றுபட்ட அதிமுக+பிஜேபி கூட்டணி வைத்து தமிழ சட்டசபை மற்றும் நாடுளுமன்ற தேர்தலை ஒன்றாக நடக்கும் இதுவே பிஜேபியின் திட்டம் அதுவரை இந்த அதிமுக பிஜேபிக்கு சொம்பு அடிக்கும் ஆட்சி தொடரும். 2019 தேர்தலோட ரிசல்ட்டை இப்பவே சொல்லிடுறேன். பிஜேபி அடுத்த இரண்டு வருடம் என்னதான் நல்லது பண்றபடி நடித்தாலும் மீண்டும் மக்கள் இவர்களுக்கு ஓட்டு அளிக்கப்போவதில்லை, தமிழகத்தில் அதிமுக+பிஜேபி கூட்டணி படுதோல்வி அடையும். மேலும் மோடி செய்த கேடி வேலைகளால் 2019 நாடுளுமன்ற தேர்தலில் பிஜேபி மண்ணை கவ்வும். அப்படின்னா எந்த கட்சி வெற்றியடையும்னு கேக்கவந்தவர்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன். இந்த கட்சி வெற்றி பெரும் அந்தக்கட்சி வெற்றி பெரும் என்று கூறினால் என்னை அந்த கட்சி சார்ந்தவன் என்ற முத்திரையை குத்த சொம்புகள் தயாராக இருக்கும். இந்த ஜென்மம் எந்தக்கட்சியையும் சாராதவன் வேறு எந்த கட்சி வெற்றி அடைந்ததாலும் அடையும் தவிர, வெற்றி பிஜேபிக்கு சொந்தமாகாது என்பதுதான் என் கணிப்பு. இதை இன்று சொல்லிவிட்டேன், அடுத்த இரண்டு வருடங்கள் என்ன மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ரிசல்ட் என்பது தோல்வி தான்.

Rate this:
10-ஆக-201716:21:47 IST Report Abuse

Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM )தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்காமல் போகலாம் , வட மாநிலங்கள் அப்படியல்ல மோடிஜிக்கு நிகராக தலைவர்கள் யாரும் இல்லை ...

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X