அமித்ஷா ராஜினாமா| Dinamalar

அமித்ஷா ராஜினாமா

Added : ஆக 09, 2017
Share

ஆமதாபாத்: ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.
குஜராத்தில், பா.ஜ.,வை சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில் நடந்த, ராஜ்யசபா, எம்.பி., தேர்தலில், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் காங்., கட்சியை சேர்ந்த அகமது படேல் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, நரன்புரா சட்டசபை உறுப்பினர் பதவியை, அமித்ஷா நேற்று, ராஜினாமா செய்தார். சபாநாயகர் ரமன்லால் ஓராவிடம், ராஜினாமா கடிதத்தை வழங்கிய அவர், சக, எம்.எல்.ஏ.,க் களிடம் பிரியாவிடை பெற்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X