பா.ஜ.,வே வெளியேறு இயக்கம்; மம்தா பானர்ஜி துவக்கினார்

Added : ஆக 10, 2017 | கருத்துகள் (150)
Advertisement
பா.ஜ, B.J.P, BJP, Bharatiya Janata Party, மம்தா,Mamata, மம்தா பானர்ஜி,Mamata Banerjee, மிட்னாபூர்,Midnapore,  லோக்சபா தேர்தல், Lok Sabha Election, திரிணமுல் காங்கிரஸ், Trinamool congress, மேற்கு வங்க முதல்வர், West Bengal Chief Minister, சுதந்திர போராட்டம்,Freedom struggle, வெள்ளையனே வெளியேறு இயக்கம்,Quit India Movement, பா.ஜ. வெளியேறு இயக்கம், BJP Outgoing Movement, மத்திய அரசு, Central Government, ராஷ்ட்ரீய ஜனதா தளம், Rashtriya Janata Dal, லாலு பிரசாத் யாதவ், Lalu Prasad Yadav,

மிட்னாபூர்: வரும், 2019ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் வகையில், 'பா.ஜ.,வே வெளியேறு' என்ற இயக்கத்தை துவக்கியுள்ளதாக, திரிணமுல் காங்.,கை சேர்ந்த, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்டத்தின்போது, ஆங்கிலேயரை விரட்ட, 'வெள்ளையனே வெளியேறு' போராட்ட இயக்கம் துவக்கப்பட்டது. இதன், 75வது தினம், நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.


அச்சுறுத்தல் :


இதையொட்டி, மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'பா.ஜ.,வே வெளியேறு' என்ற இயக்கத்தை, திரிணமுல் காங்., தலைவரும், மாநில முதல்வருமான, மம்தா பானர்ஜி துவக்கினார்.

அப்போது, அவர் பேசியதாவது: மத்தியில், பா.ஜ., தலைமையில் நடக்கும் ஆட்சியில், மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மதச் சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது; அதை, ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். வரும், 2019ல் நடக்கும் லோக்சபா தேர்தலில், பிரசார வாசகமாக, 'பா.ஜ.,வே, வெளியேறு' என்பது இருக்கும். இது குறித்து, பிற எதிர்க்கட்சிகளுடன் ஆலோசித்து, திட்டம் உருவாக்குவோம். பா.ஜ.,வை எதிர்த்து, ஒருங்கிணைப்புடன் போராடுவோம்.


முற்றுப்புள்ளி :

பா.ஜ.,வின், மதவாத, வெறுப்புணர்வை துாண்டும் அரசியலுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். ஆட்சியிலிருந்து, பா.ஜ., துாக்கி எறியப்படும் வரை, ஓய மாட்டோம். எத்தனை இடர்கள் ஏற்பட்டாலும், இறுதியில், ஜனநாயகம் வெல்லும். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., போன்றவற்றை வைத்து, எங்களை, பா.ஜ., அச்சுறுத்தலாம்; அதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். பீஹார் தலைநகர், பாட்னாவில், இம்மாத இறுதியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ் நடத்தும் பேரணியில் பங்கேற்க உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.


'டார்ஜிலிங்கை பிரிக்க சதி!' :

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மேலும் பேசியதாவது: டார்ஜிலிங், தெராய், தோவார்ஸ் ஆகிய பகுதிகள், மேற்கு வங்கத்தின் பெருமைகள். இவற்றை பிரித்து, மேற்கு வங்கத்தை பிளக்க, பா.ஜ., - மார்க். கம்யூ., கட்சிகள் சதி செய்கின்றன. டார்ஜிலிங் விஷயத்தில், கம்யூனிஸ்ட் தலைவர்கள், இரட்டை வேடம் போடுகின்றனர். டார்ஜிலிங் விவகாரத்தை பொறுத்தவரை, பா.ஜ.,வுக்கும், மார்க். கம்யூ.,வுக்கும், வித்தியாசம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (150)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
10-ஆக-201722:44:10 IST Report Abuse
adalarasan இவர்கள் தோற்றத்தில் பசுபோல் இருந்தாலும், தன நெருங்கிய உறவினர், பெண்ரகி பல தில்லுமுல்லுகள் செய்ததாக சமீபத்தில் செய்தி ஊடகங்களில் வந்தது? ப்ளேட் கம்பெனிகள் இவர் இல்ல விலாசத்திலருதே நடக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது? அதோடு லாட்டரி சீட்டு ஊழலில் இவர் கட்சிக்காரர்கள் பலர் அகப்பட்டு பரிசோதனை நடக்கிறது பீதியில் இப்பொழுது வெளிப்பட்ட்ட்டுகள் தெரிகின்றன?கேசுகளை, சட்ட ரீதியாக சந்திப்பதே சரி அல்லவா? எல்லாவ்ற்றைக்கும் அரசியல் காழ்ப்புஉணர்ச்சி என்றால் எப்படி?
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
10-ஆக-201719:02:08 IST Report Abuse
krishna காங்கிரஸ் கட்சி, உங்களின் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளைத்தான் மக்கள் வெளியேற்ற போகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
10-ஆக-201719:00:15 IST Report Abuse
krishna தீதிக்கு பீதி கெளம்பிட்டு போல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X