அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோடி தலைமையில் அ.தி.மு.க., அணிகள் இணைப்பு

Updated : ஆக 10, 2017 | Added : ஆக 10, 2017 | கருத்துகள் (142)
Advertisement
அதிமுக, ADMK, அதிமுக அணிகள் இணைப்பு, ADMK teams link, மோடி, Modi, ஓ.பி.எஸ்., OPS, எடப்பாடி பழனிசாமி, Edappadi Palanisamy, தம்பிதுரை, Thambidurai, மைத்ரேயன், Maitreyan, ஜெயலலிதா,Jayalalitha, செம்மலை, Semmalai, மாபா.பாண்டியராஜன்,Maba Pandiarajan, சென்னை,Chennai, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, Chief Minister Edappadi Palanisamy,அமைச்சரவை, Cabinet,டில்லி, Delhi,துணை ஜனாதிபதியாக வெங்கய்ய நாயுடு,Vice-President Venkayya Naidu, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் , former Chief Minister Panneerselvam,மறைந்த முதல்வர் ஜெயலலிதா, late Chief Minister Jayalalitha, சசிகலா,Sasikala, தினகரன் , Dinakaran,

சென்னை:முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தன்னுடைய அமைச்சரவையில் இருக்கும் சகாக்கள் மற்றும் கட்சியின் முக்கியத் தலைவர்களை, தலைமைக் கழகம் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமே, அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைப்பதுதான்.


டில்லியில் சமரசம்:

நாளை டில்லியில் துணை ஜனாதிபதியாக வெங்கய்ய நாயுடு பதவி ஏற்கிறார். இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக, இன்று மாலை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டில்லி செல்கிறார். அதே போல, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் டில்லி செல்கிறார்.டில்லியில் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாகவும், அப்போது, இணைப்பு குறித்து இரு தரப்பிலும் பேசி அணிகள் இணைப்பு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் பரவி உள்ளது.இது குறித்து, அ.தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறியதாவது:அதிமுக பிளவுபட்ட பிறகு, இரண்டு தரப்பிலும், இணைப்புக் குறித்து மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடந்தே வந்தன. இதற்கிடையில், கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரன், தன்னிச்சையாக நிர்வாகிகளை நியமித்து குழப்பம் விளைவிக்க, பழனிச்சாமி தரப்பு, கோபம் அடைந்தது. அதுவரை, கொஞ்சம் மந்தமாக இருந்த தங்கள் செயல்பாடுகளை இணைப்பு நோக்கி வேகப்படுத்தியது.


ஓபிஎஸ் துணை முதல்வர்:

ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழக முதல்வராக பழனிச்சாமி தொடருவார். கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்படும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சரவைக்குள் வந்து, துணை முதல்வராவார். பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் பாண்டியராஜனும், செம்மலையும் புதிய அமைச்சர்களாவர். கட்சியின் அவைத் தலைவராக மதுசூதனனும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் இருப்பர்.இரு அணிகளும் இணைக்கப்பட்ட பின், அந்தத் தகவலை தேர்தல் கமிஷனுக்குத் தெரிவித்து, முடக்கப்பட்ட அ.தி.மு.க., பெயரை மீட்டெடுப்பதோடு, இரட்டை இலை சின்னத்தையும் கோரிப் பெறுவர். இதற்காக, செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும், இரண்டு தரப்பிலும் செய்யப்படும்.இணைப்புக்குப் பின், பொதுக் குழுவைக் கூட்டி, கட்சிக்கான தேர்தலை நடத்தி, பொதுச் செயலராக பன்னீர்செல்வத்தைத் தேர்வு செய்வர். பின், கட்சியின் மற்ற நிர்வாகிகளை, பன்னீர்செல்வம் நியமிப்பார்.அதன்பின், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் சந்தேகங்களை களைய, தமிழக அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிடப்படும்;


மத்திய அமைச்சரவையில் அதிமுக:

வரும், ஆக.15க்குப் பின், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். அதற்கு முன்னதாக, ஒன்றுபட்ட அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் இணைத்துக் கொள்ளப்பட்டு, அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அ.தி.மு.க., சார்பில், இருவருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும். அதற்கான பேச்சுவார்த்தையில், பழனிச்சாமி தரப்பில் இருந்து துணை சபாநாயகர் தம்பிதுரையும், பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து மைத்ரேயன் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. கடைசி நேரத்தில், இந்த இருவர் மாறி வேறு யாரும் வரக் கூடும். அமைச்சரவை விரிவாக்கத்தில், பா.ஜ., தரப்பில் அமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் அமித் ஷாவோடு, அ.தி.மு.க., சார்பிலானவர்களும் பதவி ஏற்பர்.இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.


சசி, தினகரன் நீக்கம்:

இதற்கிடையில், இன்று (ஆக.10) காலை முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், கட்சியில் இருந்து சசிகலா, தினகரன் ஆகியோரை நீக்கியும், கட்சி நிர்வாகிகளை தினகரன் நியமித்தது செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (142)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
THAMILNAJIR - TAMIL NADU ,இந்தியா
21-ஆக-201714:56:30 IST Report Abuse
THAMILNAJIR மோடிதாண்டா பிரிச்சான் இப்ப ஏன் இணைக்க வேண்டும் என்று ஆசை படுகிறீர்கள் .......
Rate this:
Share this comment
Cancel
Sundar - Madurai,இந்தியா
11-ஆக-201700:28:19 IST Report Abuse
Sundar Like Amstrong printed in his foot in moon, BJP is carefully crafted to leg its party in Tamilnadu. Kamal and Rajini will be set aside from politics.
Rate this:
Share this comment
Cancel
jey - Bangalore,இந்தியா
10-ஆக-201720:03:13 IST Report Abuse
jey தமிழ்நாட்டுக்கு சமாதி கட்டமா விட மாட்டாங்க போல இருக்கே....... ஏற்கனனவே மீத்தேன் திட்டம் இன்னும் என்னல்லாம் வர போகுதோ .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X