அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலா, தினகரனுக்கு எதிராக தீர்மானம்; இ.பி.எஸ்., கூட்டத்தில் பரபரப்பான முடிவு

Updated : ஆக 11, 2017 | Added : ஆக 10, 2017 | கருத்துகள் (99)
Advertisement
தினகரன், சசிகலா, அதிமுக, பழனிசாமி

அ.தி.மு.க.,வில் இருந்து, தினகரனை விரட்டி யடிக்கும் விதமாக, அவரை துணை பொதுச் செயலராக நியமித்தது செல்லாது என, முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், திடீர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அவருக்கு, கட்சி நிர்வாகிகளை நியமிக்க, எந்த அதிகாரமும் இல்லை என்றும், தடலாடியாக அறிவித்துள்ளனர். இதன் வாயிலாக, தினகரனை வெளியேற்றி விட்டு, பன்னீர் அணியை இணைக்க, முதல் அச்சாரம் போட்டுள்ளனர்.

முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றது முதல், தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத் தினரை, மெல்ல ஓரங்கட்டும் முயற்சியில் இறங்கினார். அதற்கு, அமைச்சர்கள், எம்.எல். ஏ.,க்களின் ஆதரவை திரட்டுவதில், தீவிர கவனம் செலுத்தினார். அவரது முயற்சிக்கு கிடைத்த பலனாக, தினகரன் ஆதரவாளர்களாக இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலர் அணி மாறினர்.


நிர்வாகிகள் நியமனம்


இதன்பின், கட்சி நடவடிக்கைகளில், தினகரன் தலையிடாமல் தடுத்தார். அவரால், கட்சியின் தலைமை அலுவலகம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. முதல்வரின் இந்த நடவடிக்கைக ளால், கடும் அதிருப்தி அடைந்த தினகரன், முதலில், தன் குடும்பத்தினரை ஒன்றுபடுத்தினார். பின், ஆதரவாளர்களை திரட்டுவதற்காகவும், பழனிசாமி அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும், சுற்றுப்பயண அறிவிப்பை வெளியிட்டார்.

அதோடு நில்லாமல், கட்சியில் சில பொறுப்பு களுக்கு, தன் ஆதரவாளர்களை, புதிய நிர்வாகி களாக நியமித்தார். அப்படி நியமிக்கப்பட்டவர் களில் சிலர், அடுத்த நாளே எதிர்ப்பு தெரிவிக் கும் அளவுக்கு, கட்சியில் எதிர்ப்பு அலை உருவானது. இதை பயன்படுத்தி, தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினரை வெளியேற்றி விட்டு, பன்னீர் அணியினருடன் இணைந்து, கட்சியையும், ஆட்சியையும் தொடர, பழனிசாமி அணியினர் முடிவு செய் துள்ளனர். அதன்படி, சென்னை யில், நேற்று அமைச்சர்கள், தலைமை நிர்வாகி களுடன் முதல்வர் பழனிசாமி, அவசர ஆலோசனை நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில், 'அ.தி.மு.க., விதிகளின் படி, துணை பொதுச்செயலராக, தினகரன் நியமனம் செய்யப்பட்டது சட்ட விரோதமானது. அவர் எந்த பொறுப்பையும் வகிக்க இயலாது. கட்சி யில் குழப்பம் ஏற்படுத்த, அவரால் வெளியிடப் படும் அறிவிப்புகள், அ.தி.மு.க.,வினரை கட்டுப் படுத்தாது' என, அதிரடி தீர்மானம் நிறைவேற்றினர்.


தீர்மான விபரம்:

கட்சியின் நிரந்தர பொதுச்செயலராக, ஜெ., இருந்த இடத்தில், வேறு எவரையும் அமர்த்தி அழகுபார்க்க, தொண்டர்கள் விரும்ப மாட்டார் கள். ஜெ., மறைவுக்கு பின், கட்சி சட்ட திட்டங் களின்படி, புதிய பொதுச்செயலர் தேர்வு செய் யும் வரை, சசிகலாவை பொதுச் செயலராக நியமித்தாலும், அசாதாரண சூழ்நிலை காரண மாக, அவரால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது நியமனத்தை ரத்து செய்யக் கோரி, பல்வேறு நபர்கள், தேர்தல் கமிஷனில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நம் கட்சி சட்ட விதி, '20 வி'ன் படி, ஜெ.,வால் நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாகிகள் ஒன்று கூடி, ஜெ., வழி காட்டுதலின்படி, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகிறோம்.

ஜெ.,வால், 2011 டிச., 19ல், அடிப்படை உறுப்பி னர் பதவியில் இருந்து, தினகரன் நீக்கப்பட்டார். அவரை, 2017 பிப்.,14ல் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்டு, மறுநாள் துணை பொதுச்செயலராக நியமித்தது, கட்சியின் சட்ட திட்ட விதி, '30 வி'க்கு விரோதமானது. அவர் தொடர்ந்து, ஐந்து ஆண்டு காலம், அடிப்படை உறுப்பினர் பதவியை வகிக்காத காரணத் தால், கட்சி விதிகளின் படி, அவர் எந்த பொறுப் பையும் வகிக்க இயலாது. தினகரன், துணைப் பொதுச்செயலர் என்ற அடிப்படையில், தேர்தல் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தை, தேர்தல் கமிஷன் ஏற்க மறுத்து விட்டது.

அவரை துணைப் பொதுச்செயலராக நியமனம் செய்த, பொதுச்செயலரின் நியமனமும், தேர் தல் கமிஷன் முன் விசாரணையில் உள்ளது. இதற்கு மாறாக, தினகரன் தன்னிச்சையாக, ஆக., 8ல், கட்சிக்கு பொறுப்பாளர்களை நியமித் துள்ளதாக, அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கட்சியை, அதன் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, ஜெ.,வால் நியமனம் செய்யப்பட்ட, தலைமை நிர்வாகிகள் ஒன்று கூடி, வழி நடத்தி வரும் நிலையில், கட்சியில் வீண் குழப்பங்கள் ஏற்படுத்த, தினகரனால் வெளியிடப்படும் அறி விப்புகள், அ.தி.மு.க., தொண்டர்கள் யாரையும் கட்டுப்படுத்தாது. அவரது அறிவிப்புகள் மூலம், நியமனம் செய்யப்பட்ட பொறுப்புகள், கட்சி யின் சட்ட விதிகளின் படி செல்லக்கூடியவை அல்ல. கட்சி தொண்டர்கள், அதை நிராகரிக்க வேண்டும்.

ஜெ.,வின் உயரிய லட்சியமான, 'ஒவ்வொரு தொண்டனுக்கும் வாய்ப்பு; உழைப்பால் ஒவ்வொருவரும் எல்லா நிலையையும் அடைய வேண்டும்' என்பதை நிறைவேற்ற, நாம் அனைவரும் ஒன்று கூடி, கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துவோம் என, உறுதியேற்போம். இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jay - toronto,கனடா
10-ஆக-201723:21:19 IST Report Abuse
jay சிங்கப்பூரின் இருந்து ஒருவர் பேசுவார் ,,, அதிமுக தொண்டன் ,, அவரை காணோம்
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
10-ஆக-201721:24:23 IST Report Abuse
G.Prabakaran இல்லாத அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக த்திலிருந்து எப்படி இவர்கள் நீக்க முடியும். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெயரை பயன் படுத்த கூடாது என தடை விதிக்கப் பட்டுள்ளதே. யாரை ஏமாற்ற இந்த நாடகம்.
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
10-ஆக-201719:43:30 IST Report Abuse
Sivagiri சசியை நீக்குவதாக ஒரு வரியையும் காணோம் . . . நம்பும்படியாக இல்லை . . . ஒரு குரூப்பாத்தான் ஏமாத்துறாங்கய்யா . . .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X