அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலாவை நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை: முனுசாமி

Updated : ஆக 10, 2017 | Added : ஆக 10, 2017 | கருத்துகள் (21)
Advertisement
தினகரன், Dinakaran, அதிமுக, AIADMK,முனுசாமி, Munusamy,  ஓ.பி.எஸ்.,OPS, சசிகலா, Sasikala,பேச்சுவார்த்தை, Talks,சென்னை,Chennai,  அதிமுக புரட்சி தலைவி,  ADMK puratchi thalaivi,ஜெயலலிதா , Jayalalithaa,ஈ.பி.எஸ்., EPS, சசி குடும்பம், Sasi Family,

சென்னை: அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கினால் மட்டுமே அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை சாத்தியம் என ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி கூறினார்.


ஆலோசனை:

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: அதிமுக புரட்சி தலைவி அமைப்பின் ஓ.பி.எஸ்., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், தமிழக மக்களுடைய அன்றாட தேவைகளை எப்படி அரசுக்கு எடுத்து சொல்வது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.


சாத்தியம்:

ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி ஜெயலலிதா மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும். சசி குடும்பம் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தோம். தினகரன், சசியை நீக்கினால் மட்டுமே இணைப்பு பேச்சு சாத்தியம்.தினகரன் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். தினகரனை கட்சியில் ஏற்று கொண்டதையே நாங்கள் ஏற்று கொள்ளவில்லை. ஈ.பி.எஸ்., அணியினர் தினகரனை ஏற்று கொண்டனர்.இந்த சூழலில் வெளியேற்றுவதாக கூறுகின்றனர். இப்போது தான் அவர்கள் விழித்திருக்கிறார்கள் என கருதுகிறோம்.


யூகம்:

தினகரனுடன் மட்டுமல்லாமல் சசி குடும்பம் வெளியேற்றுவதாக அறிவித்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்போம்துணை முதல்வர் பதவி கொடுப்பதாக கூறுவது யூகம்.
நாட்டு மக்களையும் இயக்கத்தையும் காப்பாற்ற வேண்டும் என போராடும் தலைவரை பதவி கொடுத்து சரி செய்துவிட முடியும் என யாரும் எண்ணிவிட முடியாது. தன்னுடைய போராட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் தான் யோசிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dv Nanru - mumbai,இந்தியா
12-ஆக-201719:47:59 IST Report Abuse
Dv Nanru அப்பனே கே.பி.முனுசாமி who are you சுதந்திர தியாகியா இல்லை தேச துரோகியா...நீ...????
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
10-ஆக-201718:42:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நீக்கினா மட்டும்? இவிங்க யோக்கியனாயிடுவாங்களா? களவாணிகள் கும்பல்.
Rate this:
Share this comment
Cancel
Marshal Thampi - Nagercoil,இந்தியா
10-ஆக-201717:55:54 IST Report Abuse
Marshal Thampi திரு OPS முதல்வராக இருந்த போது அவர் மரணத்தை பற்றி கவலை படவில்லை... திரு EPS முதல்வர் ஆனவுடன் ஞானோதயம் பிறந்தது இவருக்கு. திரு EPS முதல்வர் ஆன போது சசிகலா ஊழல் பெருச்சாணி என்று இந்த EPS கு தெரியாது. பொது செயலாளர் இல்லாத கட்சி , ஒருவரை ஒருவர் நீக்குகிறதாம் காமாட்சி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X