முஸ்லிம்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர்: ஹமித் அன்சாரி| Dinamalar

முஸ்லிம்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர்: ஹமித் அன்சாரி

Added : ஆக 10, 2017 | கருத்துகள் (187)
துணை ஜனாதிபதி, Vice President,ஹமித் அன்சாரி, Hamid Ansari, முஸ்லிம்கள், Muslims,பாதுகாப்பின்மை,  Insecurity, முத்தலாக், Muthalak, காஷ்மீர்,Kashmir,  புதுடில்லி,  New Delhi, சகிப்புதன்மை,Tolerance, வன்முறை,  Violence,ராஜ்யசபா ,Rajya Sabha, மத்திய அமைச்சர்கள் , Central Ministers, அரசியல் , Politics, நல்லொழுக்கம், Virtue,

புதுடில்லி: '' சகிப்புதன்மை இன்மை மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் இந்த நாட்டில் நடக்கும் வன்முறைகளால், தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது,'' என, துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விடுபட உள்ள ஹமீத் அன்சாரி கூறியுள்ளார்.


பிரதமருடன் பேசியுள்ளேன்

கடந்த 2007 ம் ஆண்டு முதல் துணை ஜனாதிபதியாக இருப்பவர் ஹமித் அன்சாரி,80. அவரது பதவிக்காலம் இன்று( ஆக., 10ம் தேதி) முடிகிறது. இதை முன்னிட்டு, ராஜ்யசபா 'டிவி'க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
நாட்டில் சகிப்பு தன்மை இன்மை நிலவுவது குறித்து, பிரதமருடன் பேசியுள்ளேன். ஆனால், அப்போது என்ன பேசப்பட்டது என்பதை வெளியே கூறுவது தவறு. இப்பிரச்னை குறித்து மத்திய அமைச்சர்கள் சிலருடனும் பேசியுள்ளேன். நம்மிடம் எப்போது ஒரு விளக்கமும், காரணமும் தெரிவிக்கப்படும். அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறோமா என்பது தான் முக்கியம்.


நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் நாட்டின் கொள்கைகளை முறித்து விட்டன. தாங்கள் பாதுகாப்பாக இல்லை என முஸ்லிம்கள் கருதுவது உண்மை தான். இதை, நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் நான் கேட்கிறேன். வட மாநிலங்களில் இப்பிரச்னை அதிகமாக உள்ளது. சகிப்புதன்மை என்பது நல்லொழுக்கம் தான். இருப்பினும், சகிப்பு தன்மையில் இருந்து ஏற்று கொள்ளுதல் என்ற நிலைக்கு செல்ல வேண்டும்.


முத்தலாக், காஷ்மீர் பிரச்னை


முத்தலாக் என்பது சமூக தவறு. மத ரீதியாக தேவையான ஒன்று அல்ல. ஆனால், இதை ஏற்க மாட்டோம் என்று மட்டுமே நீதிமன்றங்கள் கூற முடியும். சீர்திருத்தம் என்பது சம்பந்தப்பட்ட சமூகத்திற்குள் நடக்க வேண்டிய ஒன்று. காஷ்மீரில் நிலவுவது அரசியல் பிரச்னை. அதை அரசியல் ரீதியாகவே கையாள வேண்டும்.
அங்கு இளைஞர்கள், இளம் பெண்கள் தெருக்களுக்கு வந்து கற்களை வீசுகின்றனர். இது கவலைப்பட வேண்டிய விஷயம். காரணம், அவர்கள் நம் குழந்தைகள். அவர்கள் நம் குடிமக்கள். அங்கு ஏதோ தவறாக சென்று விட்டது. நான் சொல்வதே இறுதி வார்த்தை அல்ல. ஆனால், அப்பிரச்னை குறித்து கவலைப்பட போதிய மக்கள் உள்ளனர் என நான் நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X