பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
துணை ஜனாதிபதி அன்சாரிக்கு
ராஜ்யசபாவில் புகழாரம்

புதுடில்லி: துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும், ஹமீது அன்சாரிக்கு, ராஜ்யசபாவில் நேற்று, பல்வேறு கட்சித் தலை வர்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.

துணை ஜனாதிபதி,அன்சாரி,ராஜ்யசபா,புகழாரம்


கடந்த, 10 ஆண்டுகளாக, துணை ஜனாதிபதி யாக இருந்த, ஹமீது அன்சாரி, 80, பதவிக் காலம், நேற்றுடன் முடிந்தது. ராஜ்யசபாவின் தலைவராகவும் இருந்த அவருக்கு, ராஜ்யசபா வில் நேற்று,கட்சிகளின் தலைவர்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.

பிரதமர், நரேந்திர மோடி பேசியதாவது:


இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்த அனுபவம், ராஜ்யசபாவை மிகச் சிறப்பாக நடத்த, அவருக்கு உதவியது. பல சந்தர்ப்பங்களில், வெளிஉறவு தொடர்பான பிரச்னை களில், அவருடைய அனுபவம் எனக்கு உதவியாக இருந்தது.
அவருடைய குடும்பம், 100 ஆண்டுகளாக, நாட்டு மக்களுக்கு, பொது சேவை செய்து உதவி வருகிறது. உடல்நலத்தை சிறப்பான முறையில் கவனித்து வரும் அவர், நீண்ட ஆயுள்உடனும், ஆரோக்கியத்துடனும் திகழ, கடவுளை பிரார்த்திக் கிறேன். இவ்வாறு மோடி பேசினார்.


பாராட்டு :


''அன்சாரி தலைமையில், ராஜ்யசபா, பல சந்தர்ப் பங்களில் முடங்கினாலும், நல்ல விவாதங் களும் நடந்துள்ளன. தற்போது இந்த சபையின் அரசியல் மாறியுள்ளது,'' என, மத்திய நிதியமைச் சரும், சபை முன்னவருமான, அருண் ஜெட்லி கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவரான, காங்கிரஸ் மூத்த தலை வர், குலாம் நபி ஆசாத் பேசுகையில், ''அன்சாரி, சபையை மிகவும் திறம்பட நடத்திய பாங்கு, பாராட்டுக்குரியது; அவருடன் நீண்ட காலம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. பல்வேறு நாடுகள், கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கிய போதும், அதை அவர் பயன்படுத்தியது இல்லை,'' என்றார்.
எவ்வித பாரபட்சமும் இல்லாமல், ஹமீது அன்சாரி, சபையை மிகச் சிறப்பாக நடத்தினார். அடுத்து பதவி யேற்பவரும், இதேபோல் செயல்படுவார் என நம்பு கிறோம்,'' என, சமாஜ்வாதி உறுப்பினர், ராம்கோபால் யாதவ் பேசினார்.

கின்னஸ் சாதனை :


''அன்சாரி, தினமும் யோகா செய்வதுடன், மாலை ஒயில் நடைபயிற்சியில் ஈடுபட்டு, உடல்நலம் பேணி வந்தார். 40 ஆண்டுகளாக, மதியம், 'சான்ட் விச்' மட்டுமே சாப்பிட்டு வருகிறார்; இது ஒரு கின்னஸ் சாதனையாக இருக்கும்,'' என, திரிணமுல் காங்., - எம்.பி., டெரக் ஓபிரையன் பேசினார்.
மார்க்சிஸ்ட் பொதுச் செயலர், சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர், ஹமீது அன்சாரியின் பணியை பாராட்டி பேசினர்.

'ஆட்சிக்கு விமர்சனம் அவசியம்' :


''அரசு குறித்தோ, அரசு திட்டங்கள் குறித்தோ, மிகவும் வெளிப் படையாகவும், நியாயமாகவும்,

Advertisement

பயமில்லாமலும் விமர்சனம் செய்வதை அனுமதிக்காவிட்டால், ஜனநாயகம், கொடுங்கோல் ஆட்சி யாக மாறிவிடும்,'' என, ஹமீது அன்சாரி கூறினார்.
ராஜ்யசபாவில், நேற்று நடந்த பிரிவு உபசார விழாவில், ஹமீது அன்சாரி பேசியதாவது: அரசு குறித்தோ, அதன் திட்டங் கள் குறித்தோ, வெளிப்படையாக, பயமின்றி விமர் சனம் செய்ய அனுமதிக்க வேண்டும். விமர்சனங்கள் தடுக்கப்பட்டால், ஜனநாயகம், கொடுங்கோல் ஆட்சியாக மாறி விடும்.
விமர்சனம் செய்வதற்கு உரிமை உள்ள, அதே நேரத்தில்,அவதுாறு ஏற்படுத்தும்வகையிலோ, பார்லிமென்டை முடக்கும் வகையிலோ யாரும் செயல்படக்கூடாது; இரு தரப்புக்கும் உரிமைகளும், பொறுப்புகளும் உள்ளன.
சிறு பான்மையினருக்கு உரிய பாதுகாப்பு கிடைக் கும் போது தான், ஜனநாயகத்துக்கு சிறப்பு கிடைக்கும்; சிறுபான்மையினரும், தங்களு டைய கடமையை உணர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - Lemuria,இந்தியா
11-ஆக-201723:37:24 IST Report Abuse

Ramanஅசாருதீன் அமீர்கான் அன்சாரி

Rate this:
தாமரை - பழநி,இந்தியா
11-ஆக-201723:08:14 IST Report Abuse

தாமரை இவருக்கு தேசம் கொடுத்த கவுரவத்தை உதாசீனப்படுத்தி விட்டார். உலகிலேயே இஸ்லாமியர்களுக்கு அதிகப் பாதுகாப்பும் அதிகாரமும் சுதந்திரமும் அரபு நாடுகளைவிடவும் பாரதத்தில்தான் அதிகம். இதைக் கொஞ்சம்கூட மனதில் நினைக்காமல் இங்கு அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறினார்.ஹிந்துக்கள் மிகப்பெரிய பொறுப்புக்களை வந்தால் அவர்கள் தாங்கள் அனைவருக்கும் பொதுவானவர்களாகவே இதுவரை நடந்துகொண்டுள்ளனர். ஏன் ஒருபடி மேலே சென்று ஹிந்துக்களைவிடவும் மற்ற மதத்தவர்களைக் கவர்வதிலேயே அதீத ஆர்வம் காட்டுவர்.ஆனால் இந்த அன்சாரி தான் இந்தியரல்ல இஸ்லாமியன் மட்டுமே என்று அடிக்கடி காண்பித்துக்கொண்டார்.இந்திய தேசியக்கொடிக்குக்கூட மரியாதை கொடுக்க மாட்டார்.இப்படிப்பட்டவர் இந்த நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்ததை நினைத்தாலே மனம் நோகின்றது.மோடி இவரை புகழலாம் அது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது . நம்மால் அது முடியவில்லை.ஏனெனில் நானெல்லாம் ஒரு சாமானிய இந்தியன்தான்.

Rate this:
s t rajan - chennai,இந்தியா
11-ஆக-201721:58:26 IST Report Abuse

s t rajanAnSORRY. புலம்பிப் பொருமிவிட்டீரே. சிறுபான்மை என்று கூறிக்கொண்டு எத்தனை பேர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் நிறைவு வராதா ? எத்தனை முஸ்லீம் நாடுகளில் ஹிந்துக்கள் இத்தனை உயர் பதவி அளித்து கௌரவப் படுத்தப் பட்டிருக்கிறார்கள் ? சொல்லுங்கள் நேற்றுவரை துணை ஜனாதிபதி அவர்களே ?

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X