பதிவு செய்த நாள் :
'நீட்' தேர்வு முடிவை ரத்து செய்ய
சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி: 'நடப்பு ஆண்டு, நீட் தேர்வு முடிவு களை ரத்து செய்ய முடியாது' என, உச்ச நீதி மன்றம் மறுத்து விட்டது.

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க் கைக்கான 'நீட்' தேர்வு, மே மாதம் நடந்தது. ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிராந்திய மொழி களில் நடத்தப்பட்ட இத்தேர்வில், வெவ்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டதாக, மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

நீட் தேர்வு முடிவை ரத்து செய்ய வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில், மாணவர்கள் சார்பில், வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அமிதவ் ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

மாணவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள்,

'வேறுபட்ட கேள்வித்தாள்களை வழங்கியதால், தேர்வில் குழப்பம்ஏற்பட்டுள்ளது; பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். எனவே, நீட் தேர்வு முடிவை ரத்து செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினர்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: ஒரே தேர்வுக்கு, வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு விதமான கேள்வித்தாள் வழங்கியதை ஏற்க முடி யாது. ஆங்கில கேள்வித்தாளை மொழி பெயர்க்க, மாநில அரசுகள் ஒத்துழைக்கவில்லை என்ற மத்திய அரசின் வாதம், ஏற்புடையதல்ல.

தேர்வை நடத்திய, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், இந்தவிஷயத்தில், கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். இந்த ஆண்டு நீட் தேர்வில், 11.74 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில், ஆறு லட்சம் பேர் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில், தேர்வு முடிவுகளை ரத்து

Advertisement

'நீட்', தேர்வு,முடிவை,ரத்து,செய்ய,சுப்ரீம் கோர்ட் ,மறுப்பு

செய்தால், பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். எனவே, நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது.இது போன்ற தவறுகள், வருங்காலத்தில் ஏற்படாமல் தவிர்க்க வேண் டும்; 2018ல் நடைபெறும் நீட் தேர்வில் குழப்பங் கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து மொழிகளிலும், ஒரே மாதிரியான கேள்வித்தாள் இருப்பதை, சி.பி.எஸ்.இ., உறுதி படுத்த வேண்டும். வழக்கு விசாரணை, அக்., 10ம் தேதிக்கு ஒத்திவைக்கபடுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை வீீ ரன் - Madurai,இந்தியா
11-ஆக-201716:49:10 IST Report Abuse

மதுரை வீீ ரன்அப்படியே AIIMS and JIPMER க்கும் பொது பரீட்சை வைத்து பார்க்கட்டும் ஹா ஹா ஹா ஹா STATE BOARDஆ CBCE ஆ அப்போ பார்ப்போம் வாங்கடா வாங்க

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-ஆக-201709:16:12 IST Report Abuse

Srinivasan Kannaiyaதமிழக அரசியல்வாதிகள் நீட்டை அரசியலாக்குவதை நீதிமன்றம் உணர்ந்து இருக்கிறது... தமிழக மாணவர்களின் திறமையை இந்திய அளவில் நிரூபணம் செய்ய நீட் அவசியம் தேவை...அதை தமிழக மாணவர்கள் துணிச்சலாடும் எதிர்கொள்ள வேண்டும்... வெல்ல வேண்டும்...

Rate this:
Shree - Madurai,இந்தியா
11-ஆக-201707:36:36 IST Report Abuse

Shreeபாராட்டுக்கள்

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X