பதிவு செய்த நாள் :
உடைகிறது?
பீஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்
நிதிஷை நீக்க சரத் யாதவ் ஆலோசனை

பாட்னா: பீஹாரில், ஆளும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சல் அதிகரித்து வரும் நிலையில், கட்சி இரண்டாக உடைவது உறுதியாகியுள்ளது. கட்சித் தலை வர் பதவியில் இருந்து, முதல்வர், நிதிஷ் குமாரை நீக்குவது குறித்து, கட்சியின் முன் னாள் தலைவர், சரத் யாதவ், ஆதரவாளர் களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பீஹாரில்,ஆளும்,ஐக்கிய ஜனதா தளம்,உடைகிறது?


பீஹாரில், முதல்வர், நிதிஷ்குமார் தலைமை யில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. முன்னதாக, 2014 லோக் சபா தேர்தலின்போது, பா.ஜ., தலைமையி லான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து, ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது.

ஊழல் வழக்கு


பீஹார் முன்னாள் முதல்வர், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி யுடன் இணைந்து, மெகா கூட்டணியை, ஐக்கிய ஜனதாதளம் ஏற்படுத்தியது. இந்தக் கூட்டணி, 2015 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது. துணை முதல்வராக இருந்த லாலுவின் மகன், தேஜஸ்வி மீது ஊழல் வழக்கு தொடரப்பட்ட தால், அவரை பதவி விலகும்படி, நிதிஷ் வலியுறுத்தி வந்தார்.

இது தொடர்பான பிரச்னையில், சமீபத்தில், மெகா கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.பா.ஜ.,வுடன் இணைந்து மீண்டும் கூட்டணி அரசை நிதிஷ் குமார் ஏற்படுத்தி உள்ளார். இந்த கூட்டணி குறித்து, ஐக்கிய ஜனதா தளம், மூத்த தலைவர்,

சரத் யாதவ், அதிருப்தி தெரிவித்து வந்தார். நிதிஷ் குமாரின் முடிவை எதிர்க்கும் மேலும் சில தலைவர்களும், அவருடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.

எதிர்ப்பு


குஜராத்தில், சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலின் போது, கட்சித் தலைமையை மீறி, கட்சி பார்வையா ளரை மாற்றியதாக, பொதுச் செயலராக இருந்த, அருண் ஸ்ரீவத்சவாவை,கட்சியில் இருந்து நீக்கி, நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். அவரும், தற்போது, சரத் யாதவுடன் இணைந்துள்ளார்.

''மக்கள் தீர்ப்பை மதிக்காமலும், கட்சி மூத்த தலை வர்களை ஆலோசிக்காமலும், நிதிஷ் குமார், தன் இஷ்டத்துக்கு முடிவு எடுத்துள்ளார். இதை, கட்சி யின், 12 மாநிலத் தலைவர்கள் எதிர்க்கின்றனர். ''கட்சித் தலைவர் பதவியில் இருந்து, நிதிஷ் குமாரை நீக்குவது குறித்து, சட்ட ஆலோசனை கேட்டு வருகிறோம்,'' என, அருண் ஸ்ரீவத்சவா கூறியுள்ளார்.

பாட்னாவில், 19ல் நடக்க உள்ள கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், தங்கள் எதிர்ப்பை காட்ட அதிருப்தியாளர்கள் திட்டமிட்டு உள்ளனர். நிலைமை கைமீறினால், கட்சியில் இருந்து நிதிஷை நீக்குவதுடன், கட்சிக்கு உரிமை கோரி, தேர்தல் கமிஷனில் முறையிடவும் அவர்கள் திட்டமிட்டுள் ளனர். இதனால், பீஹாரில் விரைவில், மற்றொரு அரசியல் குழப்பம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

மெகா கூட்டணியில் உள்ளோம்!


ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், கட்சி உடையும் அபாயம் அதிகரித்துள்ளது.இதுவரை மறைமுகமாக கருத்து கூறி வந்த, கட்சியின் மூத்த தலைவர், சரத் யாதவ், நேற்று, வெளிப்படையாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து, நேற்று, அவர் கூறியதாவது: கடந்த, 2015ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, மெகா கூட்டணிக்கு, மக்கள் ஆதரவு அளித்தனர்.

Advertisement

பீஹாரில், மெகா கூட்டணி அரசு, ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்பதே, மாநிலத்தின், 11 கோடி மக்களின் விருப்பம்; மக்களின் விருப்பதற்கு எதிராக நடந்துள்ள சம்பவங்கள் அதிருப்தி அளிப்பதாக உள்ளன. நாங்கள், இன்னும் மெகா கூட்டணியில் தான் உள்ளோம். மக்கள் விருப்பத்துக்கு ஏற்பவே, நாங்கள் நடப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம், உ.பி., பாணியில்...


தமிழகத்தில், முதல்வராக இருந்த ஜெயல லிதா மறைந்தவுடன், அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டது. அதையடுத்து, கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.உத்தர பிரதே சத்திலும், சமாஜ் வாதி கட்சியில் பிளவு ஏற்பட் டது.
கட்சித் தலைவராக இருந்த, முலாயம் சிங்யாதவுக்கும், முதல்வர் பதவி வகித்து வந்த, அவர் மகன்,அகிலேஷ் யாதவ் இடையே, கடும் மோதல் ஏற்பட்டது. கட்சிக்கும், கட்சி சின்னத்துக்கும் உரிமை கோரி, அகிலேஷ் யாத வும், முலாயம் சிங் யாதவும், தேர்தல் கமிஷனில் முறையிட்டனர்.

அதிக, எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் ஆதரவு இருந்ததால், அகிலேஷ் யாதவுக்கு சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது.தற்போது, பீஹாரில், ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்களால், தேர்தல் கமிஷனில் முறை யிட, நிதிஷ் குமார் அதிருப்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
11-ஆக-201722:03:45 IST Report Abuse

s t rajanலல்லுவின் கொள்ளையில் சரத்துக்கு எவ்வளவு பங்கோ? எவ்வளவு பங்கோ?

Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
11-ஆக-201721:00:35 IST Report Abuse

A.George AlphonseThis is clearly indicates that Janata Dal (U) also heading towards it's downfall as it wrongly made Koottani with Mr.Lallu prasad yadav to come to power in Bihar. If this party expelled Mr.Nitish Kumar from it's party in order to please Mr.Lallu Prasad Yadav very soon this party will be vanished or disappeared from Bihar politics once for all and Mr.Nitish Kumar will come to power in Bihar with flying colours once again if he floats any new political party as he earned the name of the best CM of Bihar of our country.

Rate this:
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
11-ஆக-201712:47:37 IST Report Abuse

Nallappan Kannan Nallappanரஹீம் ....மாதிரி கருத்துபோடாத ஜனதாவை ஆரம்பிச்சது நிதிஷ்குமார் அதுல இந்த கூமுட்டைகள்

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
11-ஆக-201714:05:57 IST Report Abuse

K.Sugavanamஜனதாவை ஆரம்பிச்சது நிதீஷ் குமாரா? புதுசா இருக்கே.. அப்போ ஜனதா மத்தில ஆட்சி பண்ணின போது நிதீஷ் என்ன பண்ணிக்கொண்டு இருந்தார்? ...

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
11-ஆக-201714:06:29 IST Report Abuse

Karuthukirukkanஜனதா தளத்தை ஆரம்பித்தது வி.பி சிங் தானே ?? எப்போது நிதிஷ் ஆரம்பிச்சாரு ?? அதில் இருந்து பிரிந்து ஆரம்பிச்சதை சொல்றீங்களா ?? ...

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
13-ஆக-201700:55:37 IST Report Abuse

Rahimஜனதாவை ஆரம்பிச்சது யாருனு சொல்லிட்டாங்க, புரிஞ்சுதா போ போயி தூங்கு ...

Rate this:
மேலும் 44 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X