அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தினகரன்,Dinakaran, துணை பொதுச்செயலர், Deputy General Secretary, அ.தி.மு.க., AIADMK,முதல்வர் பழனிசாமி , Chief Minister Palanisamy,  பன்னீர் அணி, Panneer team, அமைச்சர்கள்,  Ministers,எம்.எல்.ஏ, MLA, குழப்பம், Confusion,  சசிகலா,Sasikala,  தேர்தல் கமிஷன்,Election Commission, விசாரணை, Investigation,  முதல்வர் , Chief Minister, சசிகலா குடும்பம், Sasikala Family, சுற்றுப்பயணம்,  Tour,

அ.தி.மு.க.,வில் இருந்து, தினகரனை விரட்டி யடிக்கும் விதமாக, அவரை துணை பொதுச் செயலராக நியமித்தது செல்லாது என, முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், திடீர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

தினகரன்,Dinakaran, துணை பொதுச்செயலர், Deputy General Secretary, அ.தி.மு.க., AIADMK,முதல்வர் பழனிசாமி , Chief Minister Palanisamy,  பன்னீர் அணி, Panneer team, அமைச்சர்கள்,  Ministers,எம்.எல்.ஏ, MLA, குழப்பம், Confusion,  சசிகலா,Sasikala,  தேர்தல் கமிஷன்,Election Commission, விசாரணை, Investigation,  முதல்வர் , Chief Minister, சசிகலா குடும்பம், Sasikala Family, சுற்றுப்பயணம்,  Tour,

அவருக்கு, கட்சி நிர்வாகிகளை நியமிக்க, எந்த அதிகாரமும் இல்லை என்றும், தடலாடியாக அறிவித்துள்ளனர். இதன் வாயிலாக, தினகரனை வெளியேற்றி விட்டு, பன்னீர் அணியை இணைக்க, முதல் அச்சாரம் போட்டுள்ளனர்.

முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றது முதல், தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத் தினரை, மெல்ல ஓரங்கட்டும் முயற்சியில் இறங்கினார். அதற்கு, அமைச்சர்கள், எம்.எல். ஏ.,க்களின் ஆதரவை திரட்டுவதில், தீவிர கவனம் செலுத்தினார். அவரது முயற்சிக்கு கிடைத்த பலனாக, தினகரன் ஆதரவாளர்களாக இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலர் அணி மாறினர்.

நிர்வாகிகள் நியமனம்


இதன்பின், கட்சி நடவடிக்கைகளில், தினகரன் தலையிடாமல் தடுத்தார். அவரால், கட்சியின் தலைமை அலுவலகம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. முதல்வரின் இந்த நடவடிக்கைக ளால், கடும் அதிருப்தி அடைந்த தினகரன், முத லில், தன் குடும்பத்தினரை ஒன்றுபடுத்தினார்.

பின், ஆதரவாளர்களை திரட்டுவதற்காகவும், பழனிசாமி அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும், சுற்றுப்பயண அறிவிப்பை வெளியிட்டார்.

அதோடு நில்லாமல், கட்சியில் சில பொறுப்பு களுக்கு, தன் ஆதரவாளர்களை, புதிய நிர்வாகி களாக நியமித்தார். அப்படி நியமிக்கப்பட்டவர் களில் சிலர், அடுத்த நாளே எதிர்ப்பு தெரிவிக் கும் அளவுக்கு, கட்சியில் எதிர்ப்பு அலை உரு வானது.இதை பயன்படுத்தி, தினகரன் உள் ளிட்ட சசிகலா குடும்பத்தினரை வெளியேற்றி விட்டு, பன்னீர் அணியினருடன் இணைந்து, கட்சியையும், ஆட்சியையும் தொடர, பழனி சாமி அணியினர் முடிவு செய் துள்ளனர். அதன்படி, சென்னை யில், நேற்று அமைச்சர் கள், தலைமை நிர்வாகி களுடன் முதல்வர் பழனிசாமி, அவசர ஆலோசனை நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில், 'அ.தி.மு.க., விதிகளின் படி, துணை பொதுச்செயலராக, தினகரன் நியமனம் செய்யப்பட்டது சட்ட விரோதமானது. அவர் எந்த பொறுப்பையும் வகிக்க இயலாது. கட்சி யில் குழப்பம் ஏற்படுத்த, அவரால் வெளியிடப் படும் அறிவிப்புகள், அ.தி.மு.க.,வினரை கட்டுப் படுத்தாது' என, அதிரடி தீர்மானம் நிறைவேற்றி னர்.

தீர்மான விபரம்:


கட்சியின் நிரந்தர பொதுச்செயலராக, ஜெ., இருந்த இடத்தில், வேறு எவரையும் அமர்த்தி அழகுபார்க்க, தொண்டர்கள் விரும்ப மாட்டார் கள். ஜெ., மறைவுக்கு பின், கட்சி சட்ட திட்டங் களின்படி, புதிய பொதுச்செயலர் தேர்வு செய் யும் வரை, சசிகலாவை பொதுச் செயலராக நியமித்தாலும், அசாதாரண சூழ்நிலை காரண மாக, அவரால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அவரது நியமனத்தை ரத்து செய்யக் கோரி, பல்வேறு நபர்கள், தேர்தல் கமிஷனில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நம் கட்சி சட்ட விதி, '20 வி'ன் படி, ஜெ.,வால் நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாகிகள் ஒன்று கூடி, ஜெ., வழி காட்டுதலின்படி, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகிறோம்.

ஜெ.,வால், 2011 டிச., 19ல், அடிப்படை உறுப்பி னர் பதவியில் இருந்து, தினகரன் நீக்கப்பட்டார்.

Advertisement

அவரை, 2017 பிப்.,14ல் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்டு, மறு நாள் துணை பொதுச்செயலராக நியமித்தது, கட்சியின் சட்ட திட்ட விதி, '30 வி'க்கு விரோத மானது.

அவர் தொடர்ந்து, ஐந்து ஆண்டு காலம், அடிப் படை உறுப்பினர் பதவியை வகிக்காத காரணத் தால், கட்சி விதிகளின் படி, அவர் எந்த பொறுப் பையும் வகிக்க இயலாது. தினகரன், துணைப் பொதுச்செயலர் என்ற அடிப்படையில், தேர்தல் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தை, தேர்தல் கமிஷன் ஏற்க மறுத்து விட்டது.

அவரை துணைப் பொதுச்செயலராக நியமனம் செய்த, பொதுச்செயலரின் நியமனமும், தேர் தல் கமிஷன் முன் விசாரணையில் உள்ளது. இதற்கு மாறாக, தினகரன் தன்னிச்சையாக, ஆக., 8ல், கட்சிக்கு பொறுப்பாளர்களை நியமித் துள்ளதாக, அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கட்சியை, அதன் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, ஜெ.,வால்நியமனம் செய்யப்பட்ட, தலைமை நிர்வாகிகள் ஒன்று கூடி, வழி நடத்தி வரும் நிலையில், கட்சியில் வீண் குழப்பங்கள் ஏற்படுத்த, தினகரனால் வெளியிடப்படும் அறி விப்புகள், அ.தி.மு.க., தொண்டர்கள் யாரையும் கட்டுப்படுத்தாது. அவரது அறிவிப்புகள் மூலம், நியமனம் செய்யப்பட்ட பொறுப்புகள், கட்சி யின் சட்ட விதிகளின் படி செல்லக்கூடியவை அல்ல. கட்சி தொண்டர்கள், அதை நிராகரிக்க வேண்டும்.

ஜெ.,வின் உயரிய லட்சியமான, 'ஒவ்வொரு தொண்டனுக்கும் வாய்ப்பு; உழைப்பால் ஒவ்வொருவரும் எல்லா நிலையையும் அடைய வேண்டும்' என்பதை நிறைவேற்ற, நாம் அனைவரும் ஒன்று கூடி, கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துவோம் என, உறுதியேற்போம்.இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ., நியமித்தோர் மட்டும் கையெழுத்து


'தினகரன் நியமனம் செல்லாது; அவர் அறி வித்த நியமனங்களும் செல்லாது' என பழனி சாமி அணியினர் நிறைவேற்றிய தீர்மானத்தில் ஜெ.,வால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மட்டும் கையெழுத்திட்டிருந்தனர். சசிகலாவால் அவை தலைவராக நியமிக்கப்பட்ட அமைச்சர் செங்கோட்டையன்; பொருளாளராக நியமிக் கப்பட்ட அமைச்சர் சீனிவாசன்; மீனவர் அணி செயலராக நியமிக்கப்பட்ட அமைச்சர் ஜெயக் குமார் ஆகியோர் தீர்மானத்தில் கையெழுத்திட வில்லை. முதல்வர் பழனிசாமி, எம்.பி., வைத்திலிங்கம் உட்பட 27 பேர் கையெழுத்திட் டுள்ளனர். கொள்கை பரப்பு செயலர் தம்பி துரை, மகளிர் அணி செயலர் விஜிலா சத்தியானந்த் போன்றோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதேபோல், ஜெ.,வால் நியமிக்கப்பட்டு, தற்போது பன்னீர் அணியில் இருப்போரும் பங்கேற்கவில்லை.

பேட்டியை தவிர்த்தமுதல்வர், அமைச்சர்கள்


முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றதும். கூட்டம் நடந்த அரங்கிற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக் கப்பட்டனர். அவர்களுக்கு தீர்மான நகல் வழங் கப்பட்டது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள், 'தீர்மான நகல் வழங்கி உள்ளோம். அதை பெற்று கொள்ளுங்கள்' எனக் கூறிவிட்டு அங் கிருந்து புறப்பட்டனர். பேட்டி கொடுக்க மறுத்து விட்டனர். தீர்மானம் தொடர்பாக எழுந்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க யாரும் முன்வரவில்லை.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
11-ஆக-201722:40:05 IST Report Abuse

D.Ambujavalliஇத்தனை கூத்துக்களுக்குப் பின்னும் அரசைக் கலைத்துத் தொலைக்காமல், இந்த அடிமைகளின் ஆட்டத்தில் குளிர் காய்கிறார் மோடி கவர்னரோ ஆற்றில்ஒரு கால், சேற்றில் ஒரு கால். ஒரு கவர்னரை நியமிக்கக்கூட ஒருவருஷம் தாமதம் செய்யும் மைய அரசே பெரிய தண்டம். விடியாமூஞ்சிகள்

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
11-ஆக-201720:40:48 IST Report Abuse

தேச நேசன்EPS 's main aim is to get two leaves symbols so they join ops. Once done, ops group will be sidelined slowly like how EPS sidelined and threw the ladder given by Sasi.

Rate this:
Deva Nesan - erode,இந்தியா
11-ஆக-201719:42:00 IST Report Abuse

Deva Nesanஉங்களுக்குத்தான் சண்டை வந்துருச்சில்ல ....ஓரமாய் போய் அடிச்சுட்டு சாவுங்க ...தில் இருந்தா ...ஆட்சியை கலைங்கடா ..

Rate this:
மேலும் 41 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X