அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அணிகள் இணையுமா: பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: ''அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு குறித்து, அதிகாரபூர்வமாக எந்த தகவ லும் எங்களுக்கு வரவில்லை,'' என, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அ.தி.மு.க. அணிகள்,ADMK Teams, இணைப்பு,  Link, பன்னீர்செல்வம், Panneerselvam, சென்னை, Chennai, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்,Former Chief Minister Panneerselvam, சென்னை விமான நிலையம், Chennai Airport,பழனிசாமி அணி, Palanisamy team, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ,former Minister KP Munusamy, சசிகலா குடும்பம் ,Sasikala Family,  ஜெயலலிதா,Jayalalitha,  தினகரன், Dinakaran, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy,

சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் கூறியதாவது: ஆறு மாதங்களுக்கு முன், நாங் கள் தர்ம யுத்தத்தை துவக்கினோம். அப்போது கூறப்பட்ட கருத்துக்களை, தீர்மான மாக கொண்டு வந்துள்ளனர். பாதிவந்துள்ளனர்;

மீதி வரட்டும்; அதன்பின், எங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கிறோம்.

எங்களின் முந்தைய நிலைப்பாட்டில், எந்த மாற்ற மும் இல்லை. இதுவரை பேச்சு நடத்த, அதிகாரபூர்வ மாக எந்த தகவலும் இல்லை. இரு அணிகளும் இணைந்தால், அது, தமிழக மக்கள், அ.தி.மு.க., தொண்டர்களின் விருப்பப்படி அமையும். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.

சசிகலாவை நீக்க வேண்டும்


சென்னை: ''பழனிசாமி அணியினர் தற்போது தான் விழித்துள்ளனர். தினகரனோடு மட்டும் நில்லாமல், சசிகலா குடும்பம் முழுவதையும் வெளியேற்ற வேண்டும்,'' என பன்னீர் அணியை சேர்ந்த, முன் னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: ஏற்க னவே, நாங்கள் அறிவித்தபடி, ஜெ., மர்ம மரணம்

Advertisement

குறித்து, நீதி விசாரணை வேண்டும். சசிகலா மற் றும் அவரது குடும்பம், கட்சியில் இருந்து வெளி யேற்றப்பட வேண்டும். இரண்டு கோரிக் கைகளும் நிறைவேற்றப்பட்டால், இணைப்பு குறித்து பேசப் படும்.

தினகரன் என்ற நபர், ஜெயலலிதாவால், 10 ஆண்டு களுக்கு முன், கட்சியில் இருந்து வெளி யேற்றப் பட் டவர்;அவர்,கட்சி உறுப்பினர் இல்லை.அவரது செயல்பாட்டில், எங்களுக்கு உடன்பாடு கிடையாது.முதல்வர் பழனிசாமி தரப்பினர், தினகரனை ஏற்றுக் கொண்டிருந்த னர். தற்போது, வெளி யேற்று வதாகக் கூறுகின் றனர்.இப்போது தான், அவர்கள் விழித்துள்ள தாகக் கருதுகிறோம். அந்த விழிப்பு, தினகர னோடு மட்டும் இல்லாமல், சசிகலா குடும்பம் முழுவதும் வெளியேற் றப்படும் செயலாக இருந்தால், அவர்களை பாராட்டுவோம்.

எங்களால் ஏற்றுக் கொள்ளப்படாத, ஒரு நபரை வெளியேற்றி உள்ளனர். இன்னும் ஒரு நபரை வெளியேற்றினால், எங்களின் அடுத்த கட்ட முடிவை தெரிவிப்போம், என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shiek shiek - chennai,இந்தியா
11-ஆக-201718:14:13 IST Report Abuse

shiek shiekஒரு நல்ல முடிவை சட்டு புட்டுன்னு எடுங்கப்பா

Rate this:
saran - chennai,இந்தியா
11-ஆக-201717:59:58 IST Report Abuse

saranஇணைந்தால் தமிழக மக்களுக்கு நன்மை என்றால் இணையட்டும் ......

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
11-ஆக-201717:09:44 IST Report Abuse

Sundaramமக்கள் நிலையை யோச்சித்து நல்ல முடிவை மேற்கொண்டு வழிநடத்தினால் நல்லது

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X