அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலாவையும் நீக்குங்கள்!: கே.பி.முனுசாமி

Added : ஆக 10, 2017 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: ''பழனிசாமி அணியினர் தற்போது தான் விழித்துள்ளனர். தினகரனோடு மட்டும் நில்லாமல், சசிகலா குடும்பம் முழுவதையும் வெளியேற்ற வேண்டும்,'' என பன்னீர் அணியை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: ஏற்கனவே, நாங்கள் அறிவித்தபடி, ஜெ., மர்ம மரணம் குறித்து, நீதி விசாரணை வேண்டும். சசிகலா மற்றும் அவரது குடும்பம், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால், இணைப்பு குறித்து பேசப்படும். தினகரன் என்ற நபர், ஜெயலலிதாவால், 10 ஆண்டுகளுக்கு முன், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்; அவர், கட்சி உறுப்பினர் இல்லை. அவரது செயல்பாட்டில், எங்களுக்கு உடன்பாடு கிடையாது.
முதல்வர் பழனிசாமி தரப்பினர், தினகரனை ஏற்றுக் கொண்டிருந்தனர். தற்போது, வெளியேற்றுவதாகக் கூறுகின்றனர். இப்போது தான், அவர்கள் விழித்துள்ளதாகக் கருதுகிறோம். அந்த விழிப்பு, தினகரனோடு மட்டும் இல்லாமல், சசிகலா குடும்பம் முழுவதும் வெளியேற்றப்படும் செயலாக இருந்தால், அவர்களை பாராட்டுவோம்.
எங்களால் ஏற்றுக் கொள்ளப்படாத, ஒரு நபரை வெளியேற்றி உள்ளனர். இன்னும் ஒரு நபரை வெளியேற்றினால், எங்களின் அடுத்த கட்ட முடிவை தெரிவிப்போம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyani S - Ranipet,இந்தியா
11-ஆக-201711:52:19 IST Report Abuse
Kalyani S தினகரன் என்ற நபர், ஜெயலலிதாவால், 10 ஆண்டுகளுக்கு முன், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் ............... நல்லது KP முனுசாமி அவர்களே நீங்களும் ஜெயாவால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் தானே. 2016 தேர்தலின் போது ஜெயாவுடன் பிரச்சார வேனில் சசிகலா வந்த போது அந்த வேனின் டயரை தொட்டு கும்பிட்ட போது சசிகலா யார் என்று உங்களுக்கு தெரியாதா. சசிகலா சொன்னால் தான் அந்த வேனே நீங்கள் டயரை தொட்டுக் கும்பிட நின்றது என்பது எங்களுக்கு தான் தெரியாதா. அன்றைக்கே ஜெயாவிடம் சசிகலாவை வேனை விட்டு இறக்குங்கள் அப்போதுதான் நாங்கள் வேனின் டயரை தொட்டு வணங்குவோம் என்று நீங்களும் கூறவில்லை. உங்கள் அம்மாவும் சசிகலாவை விட்டு விட்டு வராமல் அவருடன் அழைத்தே தான் வந்தார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஜெயாவால் அங்கீகரிக்கப்பட்ட சசிகலாவை பழிவாங்க முயற்சிப்பீர்களேயானால் கண்டிப்பாக கடற்கரையில் OPS அவர்களுக்கு ஞானம் வழங்கிய உங்கள் அம்மாவின் ஆன்மா உங்களையெல்லாம் சும்மா விடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X