அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் 'ஆப்பரேஷன்'
பழனிசாமி அணியினருக்கு தினகரன் எச்சரிக்கை

சென்னை:''கட்சிக்கு விரோதமாக யார் செயல் பட்டாலும், அறுவை சிகிச்சை செய்ய தயங்க மாட்டேன்,'' என, தினகரன் தெரிவித்தார்.

கட்சிக்கு,விரோதமாக,செயல்பட்டால்,ஆப்பரேஷன்,பழனிசாமி அணிக்கு,எச்சரிக்கை

இது குறித்து, தஞ்சாவூரில், அவர் கூறியதாவது: பொதுச்செயலர் சசிகலா கூறியதால், முதல்வ ராக பொறுப்பேற்ற பழனிசாமி, எப்போது தேர் தல் கமிஷன் தலைவரானார் என, தெரிய வில்லை. அவர்கள் தீர்மானம் நிறைவேற்றிய, லெட்டர் பேடில், அ.தி.மு.க., தலைமைச் செயலகம் என, உள்ளது; 'அ.தி.மு.க., அம்மா' என, இருக்க வேண்டும். இது, தேர்தல் கமிஷன்

விதி மீறல். யாராவது தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்தால், முதல்வர் முதல், அனைத்து அமைச் சர்களும், பதவியில் இருந்து இறங்க நேரிடும். இது கூட, அவர்களுக்கு தெரியவில்லை. அவசர கோலத் தில், பயத்தின் காரணமாக, இவ்வாறு செய்துள்ளனர்.

பொதுச்செயலரால் கட்சியில் சேர்க்கப்பட்ட பின், நியமன பதவிகளை, அவர் யாருக்கு வேண்டுமானா லும் வழங்கலாம். பொதுச்செயலர், மாவட்ட செய லர், ஒன்றிய செயலர், நகரச் செயலர் போன்ற பதவி கள் தவிர, மற்ற நியமன பதவிகளை அறிவிக்க, பொதுச் செயலருக்கு அதிகாரம் உண்டு.அமைச்சர் சீனிவாசனை, பொருளாளராக நியமித்தது போல, என்னை நியமித்துள்ளார்.

2012 டிச., 4ல், ம.தி.மு.க.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைத்த சம்பத்திற்கு, அன்றே கொள்கைபரப்பு துணைச் செயலர் பதவியை ஜெ., வழங்கினார். எனவே, நான் துணைப் பொதுச்செய லராக செயல்பட, எந்த தடையும் இல்லை. கட்சி வளர்ச்சிக்கு தேவையான, அனைத்து நடவடிக்கைக ளையும் எடுப்பேன். அறுவை சிகிச்சை தேவைப் பட்டால், யாராக இருந்தாலும் மேற்கொள் வேன்.

Advertisement

என்னைதடைபோட்டு நிறுத்தும் அதிகாரம், பொதுசெயலர் சசிகலாவிற்கு மட்டுமே உண்டு.

நேற்று முளைத்த காளான்கள், சுயநலவாதிகள் போன்றோருக்கெல்லாம், பதில் கூற வேண்டிய அவசியமில்லை. சிலருக்கு மடியில் கனம் உள்ளதால் பயப்படுகின்றனர். சிலர் எங்களை ஒதுக்கி வைத்தால், சுதந்திரமாக செயல்பட லாம் என, நினைக்கின்றனர். தவறு செய்பவர் கள் திருந்துவர் அல்லது திருத்தப்படுவர். இவ்வாறு தினகரன் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
11-ஆக-201723:32:54 IST Report Abuse

தாமரை எப்படி இப்படியெல்லாம் கூச்சாமே இல்லாமல் பேச முடிகிறது? உலக நடிப்பையா உன்னோடது. பந்தியிலையே உட்காரவிட மாட்டேன்றாங்க விசேஷ காரரு ....சமையல் காரனை மாத்துவேங்கிறாரு இவரு....

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
11-ஆக-201723:25:37 IST Report Abuse

raghavanதிகார் போய் வந்தும் திமிரு குறையல. ஆனா, சசி தான் பொது செயலர்னு ஒரு பில்டப்பு கொடுக்கணும்னு சொன்னபோது தலையாட்டி கைகட்டி வாய்பொத்தி நின்னுட்டு இப்போ ஐயோ அய்யோன்னு அடிச்சுக்குற கும்பலை என்னன்னு சொல்றது??

Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
11-ஆக-201721:56:34 IST Report Abuse

Swaminathan Chandramouliஇப்போதெல்லாம் போலி மருத்துவர்களை கைது செய்து உள்ளே தள்ளுகிறார்களாம் . சித்தா, ஆயுர்வேதம் மருத்துவர்கள் கூட அறுவை சிகிச்சை செய்தால் ஜெயிலுக்கு போகவேண்டியது தான் ஆனால் தம்பி தினகரன் பள்ளிக்கூடத்தையே தாண்டாமல் அறுவைசிகிச்சை செய்வேன் என்று பயமுறுத்துகிறார் . நோயாளிகள் ஜாக்கிரதை

Rate this:
மேலும் 41 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X