பதிவு செய்த நாள் :
தண்ணீரை வீணடிக்கிறது கர்நாடகா
உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வாதம்

'ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்வதற்கு, தமிழகத்தைவிட, கர்நாடகாவுக்கு கூடுதல் நீரை, காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கி யுள்ளது. முறையான பயிர் திட்டங்கள் இல்லா மல் தண்ணீரை, கர்நாடகா வீணடிக்கிறது' என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.

தண்ணீரை ,வீணடிக்கிறது,கர்நாடகா,உச்சநீதிமன்றத்தில்,தமிழகம் வாதம்

காவிரி நதிநீரைப் பங்கிட்டு கொள்வது குறித்து, காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகா உள்ளிட்டவை, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்குகளை, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம். கன்வில்கர் அமர்வு விசாரித்து வருகிறது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், சேகர் நபாடே, நேற்றும் தன் வாதத்தை தொடர்ந்தார்.
அப்போது, அவர் வாதிட்டதாவது: காவிரி நடுவர் மன்றம் அளித்துள்ள தீர்ப்பில் பல்வேறு தவறுகள் உள்ளன. முறையாக கணக் கிடாமல், பங்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ள, தமிழகத்துக்கு, 13.3 டி.எம்.சி., தண்ணீரும், கர்நாட காவுக்கு, 19.3 டி.எம்.சி., தண்ணீரும் ஒதுக்கப் பட்டு உள்ளது. இது தவறான கணக்கீடு.

தமிழகத்தில், காவிரி நீர்ப்பிடிப்புபகுதிகளில் உள்ள நிலம், 'காரீப்' எனப்படும் குறுவை சாகுபடிக்கு மிக வும் உகந்தது. இங்கு, குறைந்த தண்ணீரில், அதிக உற்பத்தி செய்யப்படுகிறது. அதே நேரத்தில், கர்நாட காவில், சில இடங்களில் உள்ள மண், குறுவை சாகுபடிக்கு உகந்ததாக இல்லை. அங்கு, மாற்றுப்

Advertisement

பயிர், பயிரிட்டால்,விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். நாட்டின் அரிசி உற்பத்தியும் அதிகரிக்கும். ஆனால், அதை செய்யாமல், அங்கும், குறுவை சாகுபடி செய்யப்படுவதால், அதிக தண்ணீரை, கர்நாடகா வீணடிக்கிறது. இவ்வாறு அவர் வாதிட்டார்.வழக்கின் விசாரணை, வரும், 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
11-ஆக-201720:40:12 IST Report Abuse

Rajendra Bupathiகர்நாடகாவுல முறையான பயிர் சாகுபடி திட்டம் இல்லியா? என்னடா இது அநியாயமா இல்ல இருக்கு? அங்கதான் வேளாண்மைதுறை இருக்கு? வேளாண்மை பல்கலைகழகம் இருக்கு? அப்புறம் எதுக்கு இந்த வெத்துவேட்டு வாதம்? அய்யா மொதல்ல இந்த வக்கீலை மாத்துங்கைய்யா?

Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
11-ஆக-201719:51:25 IST Report Abuse

vbs manianKarnataka will never implement any SC judgement against them.If attempts are made to enforce the judgemen civil war like situation will arise.Instead of begging karmataka for water for another 1000 years ,As suggested by SC TN govt, should save as much rain water as possible by creating new water bodies, by desilting old ones ,by preventing encroachment of water bodies, constucting as many check dams as possible in the delta region. Empty resolutions,hunger strikes will not get even one of water.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
11-ஆக-201717:27:34 IST Report Abuse

ganapati sbகர்நாடக மண் அதிக நீர் தேவைப்படும் அமோக நெல் விளைச்சலுக்கு உகந்தது இல்லை என்பது உண்மையென்றால் அவர்கள் வேறு பயிர்கள் சாகுபடி செய்து நீரை சோழ நாடு சோறுடைத்து என நெல்லுக்கு எப்போதும் தகுதி வாய்ந்த தமிழக டெல்ட்டாவுக்கு அனுப்ப வேண்டும் அதோடு தமிழகம் அங்கங்கே போதிய தடுப்பணைகள் கட்டி அணைத்து ஏரி குளங்களையும் தூர் வாரிவாராது வரும் நீரை கடலில் கொண்டு போய் வீணடிக்காமல் சேமிக்க வேண்டும். இதை அரசியலாகாமல் இரு மாநில விவசாயிகள் இணைந்து பேசி முடிவு செய்ய வேண்டும். அதற்கான ஏற்பாட்டை மட்டும் அரசுகளும் நீதிமன்றமும் செய்தால் போதும்.

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X