அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் புகார் அமைச்சர் கண்டனம்

Added : ஆக 10, 2017 | கருத்துகள் (7)
Advertisement
ஸ்டாலின் புகார் ,Stalin complaint,அமைச்சர், minister, கண்டனம்,condemnation,சென்னை, Chennai, தன்னலமற்ற மருத்துவர்கள், selfless doctors, சுகாதார பணியாளர்கள், health workers, டெங்கு காய்ச்சல்,  dengue fever, சுகாதார ஆய்வாளர்கள், health inspectors, நடமாடும் மருத்துவ குழுக்கள், mobile medical teams, தமிழகம், Tamil Nadu,டெங்கு ஒழிப்பு ,dengue eradication,

சென்னை: 'தன்னலமற்ற மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் மகத்தான தொண்டுகளை, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, கொச்சைப்படுத்த வேண்டாம்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், வேகமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கள பணியாளர்கள், 3,500 சுகாதார ஆய்வாளர்கள், 416 நடமாடும் மருத்துவ குழுக்கள், வாகனத்துடன் கூடிய, 770 பள்ளி மருத்துவ குழுக்கள், 164 பூச்சியியல் வல்லுனர்கள், 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றனர்.
டெங்கு ஒழிப்பு பணிகளை, அரசு மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளது. இதை அறியாமல், அறிக்கை ெவளியிடும் ஸ்டாலின் செயல் கண்டனத்திற்குரியது. அரசியல் ஆதாயத்திற்காக, களப் பணியாளர்களின் தன்னலமற்ற சிறப்பான சேவையை, கொச்சைப்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sattanathan - Rijeka,செக் குடியரசு
11-ஆக-201712:33:51 IST Report Abuse
sattanathan ஸ்டாலினை பார்த்து கொஞ்சம் அஞ்சுவது போல் தெரிகிறதே. வருமான வரி பிரச்சினை எல்லாம் எப்படி இருக்கு?
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
11-ஆக-201711:01:43 IST Report Abuse
rajan.  ஒரு அமைச்சர் பதவியை ஊழலுக்கும் அதிகார குட்கா துஷ்பிரயோகம் பண்ணின நீ IT ரைடு பண்ணி ஊழல் சொத்துக்களை முடக்கிய பின்னும் பதவியை விடாம தன்னலம் கருதி உலா வரும் நீ எப்படி எங்க சர்க்காரியா விருது கண்ணகி பரம்பரை சுடலையை பார்த்து என்ன கேள்வி கண்டனம் தெரிவிக்கிறாய். கூவத்தூர் மொள்ளமாரி கூடங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-ஆக-201709:31:21 IST Report Abuse
Srinivasan Kannaiya எப்பவுமே ஸ்டாலினுக்கு தான் உடைத்தால் மண்தோண்டி பிறர் உடைத்தால் பொன் தோண்டி என்று இருப்பார்... நீங்கள் என்ன உங்கள் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து விட்டீர்களா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X