அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலா சந்திப்புக்கு பின் அடுத்த முடிவு : ஏ.கே. போஸ் அறிவிப்பு

Added : ஆக 11, 2017
Advertisement

மதுரை: ''சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசித்த பின், தினகரனுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது குறித்து எனது முடிவை அறிவிப்பேன்,'' என திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., போஸ் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு தினகரன், தனது ஆதரவாளர்களுக்கு கட்சி பதவிகளை அளித்தார். இதில் மதுரை திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., அம்மா அணி எம்.எல்.ஏ., போஸூற்கு, விவசாய அணி இணைசெயலாளர் பதவி கிடைத்தது.
இதை ஏற்க மறுத்த போஸ், 'கட்சி பதவி குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு உடல்நிலை சரியில்லாததால் அந்த பொறுப்பை ஏற்க போவதில்லை. முதல்வர் பழனிசாமி தலைமையை ஏற்றுள்ள எனக்கு இப்பதவி தேவையில்லை. பழனிசாமியை ஆதரிக்கும்படி, கூவத்துாரில் தங்கியிருந்தபோது, எங்களிடம் சசிகலா சத்தியம் வாங்கினார். அதன்படி பழனிசாமியை ஆதரிக்கிறேன்,' என்றார்.
மறுநாளே அவரிடம் தினகரன் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதைதொடர்ந்து தினகரனை ஆதரிக்க போவதாகவும், மேலுாரில் ஆக.,14ல் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க போவதாகவும் போஸ் அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று கட்சி பதவியில் இருந்து முதல்வர் பழனிசாமி அணியால் தினகரன் நீக்கப்பட்டார். இதுகுறித்து நமது நிருபரிடம் போஸ் கூறுகையில், ''தினகரனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பது குறித்து, பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் ஆலோசித்து முடிவு செய்வேன்,'' என்றார்.
மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பாவும் தினகரனுக்கு ஆதரவு அளிப்பது குறித்து 'மதில் மேல் பூனையாக' உள்ளார்.
மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க.,வுக்கு 8
எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில் 2 பேர் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள். தினகரன் ஆதரவாளராக போஸ் எம்.எல்.ஏ., உள்ளார். மற்றவர்கள் எடப்பாடி அணியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X