கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அனுமதி பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை:'அரசு அனுமதி பெறாத பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை நடக்கும் போது, அதி காரிகள் விரைந்து ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

அனுமதி பெறாத பள்ளிகள், Unapproved schools, மாணவர்கள் சேர்க்கை, students admissions,பள்ளிக்கல்வி துறை, School of Education Department,ஐகோர்ட், High Court,சென்னை உயர் நீதிமன்றம், Chennai High Court,சென்னை, Chennai,  நீதிபதி கிருபாகரன், Judge Kripakaran, மெட்ரிக் பள்ளி, Matriculation School, தஞ்சை,Thanjavur,  கல்வித் துறை, Education Department,

தஞ்சை மாவட்டத்தில், அரசு அனுமதியின்றி துவங்கப்பட்ட பள்ளியில், 200 மாணவர்கள் படித்து வந்தனர். அந்த மாணவர்களை, வேறு பள்ளிகளில் சேர்க்க, அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதை எதிர்த்து, பள்ளி நிர்வாகம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.

தஞ்சையில் உள்ள, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், 'அனுமதி கேட்டு, பள்ளி நிர்வாகம் விண்ணப் பித்துள்ளது; ஆனால், ஒப்புதல் பெறவில்லை.

அதனால் தான், வேறு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க உத்தரவு பிறப்பிக்கபட்டது' என,கூற பட்டது.

நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
ஒரு பகுதியில், அரசு அனுமதியுடன் எத்தனை பள்ளிகள் இயங்குகின்றன என்பது, கல்வித் துறை அதிகாரிகளுக்குதெரியும். அனுமதி பெறாமல் மாண வர்களை சேர்த்தால், அதிகாரிகள் உடனுக் குடன் செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளி அதிகாரி களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி யின்றி பள்ளிகள் திறக்கப்பட்டு, அனுமதி கோரிய பள்ளியின் விண்ணப்பம் திருப்பி அனுப்பப் பட்ட பின்னே, கல்வித் துறை அதிகாரிகள் துாக்கத் தில் இருந்து விழித்து, மாணவர்களை வேறு பள்ளி களில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்கின்றனர்.

கல்வித் துறை அதிகாரிகள், சரியாக செயல்படாத தால், இத்தகைய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், மாணவர்களின் உரிமைகள் மீறப்பட்டு, அவர்களின் எதிர்காலம் பாழடிக்கப்படுகிறது. எனவே, கீழ்கண்ட கேள்வி களுக்கு,பதிலளிக்க வேண்டும்.
* பள்ளிகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பம் வரும் போது, அதிகாரிகள் ஏன் முறையாக செயல்பட வில்லை; மாணவர்கள் சேர்க்கையை அந்த பள்ளி கள் துவங்கி விட்டதா, இல்லையா என்பதை ஏன் சரிபார்க்கவில்லை?
* மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களின்

Advertisement

நலன் கருதி, துவக்கத்திலேயே அதிகாரிகள் ஏன் விரைந்து செயல்படவில்லை?
* அனுமதி பெறாமல் மாணவர்களை சேர்த்த பள்ளிகள் மீது, ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை?
* அனுமதி பெறாமல், ரகசியமாக மாணவர் களை சேர்க்கும் பள்ளிகளை தடுக்க, சட்டத்தின் கீழ் எந்தெந்த வழிகள் உள்ளன?
* தமிழகம் முழுவதும், அரசின் அனுமதியின்றி எவ்வளவு பள்ளிகள் இயங்குகின்றன?
மேற்கூறிய விபரங்களை, வரும், 16க்குள் வழங்க வேண்டும். அரசின் அனுமதி பெறாமல் இயங்கும் பள்ளிகளில், மாணவர்களை சேர்ப் பதை தடுக்க, விரிவான உத்தரவு பிறப்பிக்கப் படும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
11-ஆக-201715:27:03 IST Report Abuse

samuelmuthiahrajதனியார் பள்ளி கட்டடங்களும் விதிகளின் படி இருப்பது இல்லை சுற்று சுவர் இன்றி சுற்று சுவர் மீதே கட்டடங்கள் நான்கு அடுக்கு மாடிகள் கட்டப்படுகின்றன

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
11-ஆக-201713:47:12 IST Report Abuse

Lion Drsekarஒவ்வொரு துறையினர்களும் அவரவர்கள் தலைமைக்கு கப்பம் கட்டுகிறார்கள். அவருக்கு, அவருக்கு என்று தலை முதல் வால் வரை அமோக வசூல், அகப்பட்ட வரையில் லாபம், யாரும் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு நிலை, ஏனென்றால் ஒட்டு மொத்தமும் ஒரு தொழில் செய்வதால் யாரும் யாரையும் காட்டிக்கொடுக்க முடியாத ஒரு நிலை, ஒருவர் மற்றவரை பார்த்து கை நீட்டி புகார் கொடுத்தால் அவர் இவர்கள் மீது பல புகார்கள் கூறுவார்கள், இது ஒரு தொடர்கதை, மொத்தத்தில் நாட்டிற்காக , மக்களின் நலனுக்காக யாரும் எந்த ஒரு நிர்வாகமும் இல்லை, நாட்டை ஆளும் குடும்பம் மட்டுமே இவர்களுக்கு முக்கியமாகப் போய்விட்டது வந்தே மாதரம்

Rate this:
Gopi - Chennai,இந்தியா
11-ஆக-201713:17:47 IST Report Abuse

Gopiஇப்படி ஒவ்வொரு வேலையும் நீதிமன்றங்களே பார்த்தா இந்த அதிகாரிங்க எப்பதான் வேலைபாப்பாங்க ? இவனுங்களுக்கு சம்பளம் கூட கிம்பளம். அனுமதி பெற வந்த விண்ணப்பத்த வைட்டமின் "ப" இல்லாததினால் தாமதம் செய்தார்களேயானால் அதை அந்தந்த பள்ளி நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X